Monday, October 12, 2020

                                                            கதையும் சிந்தனையும்

கதையைப் பற்றி நீ நினைக்கும் கருத்துகளைத் தட்டச்சு செய்யவும். 

வாசிப்புப் பகுதி (உருவாக்கம்)

 

செண்பகம் என்பவன் புதிய சிந்தனையை உடையவன். ஆனால், அவனுடைய சிந்தனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவன் ஒன்பது பிள்ளைகளுடன் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். பெற்றோருக்குக் கடைக்குட்டி மகன். அவன் என்ன சொன்னாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவன் சின்னவன், அவனுக்கு என்னம்மா தெரியும் என்று சொல்லி அம்மாவின் வாயை அடைத்துவிடுவார்கள்.

வறுமையில் இருக்கும் அவனை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவனுடைய மாமா  அழைத்துச் சென்றார். அவர் பலகாரக் கடை ஒன்றை அங்கு நடத்தி வந்தார். செண்பகத்தைக் கடையில் எடுபிடி வேலை செய்வதற்கு வைத்துக்கொண்டார்.  செண்பகத்திற்கு வயிறு நிறைய உணவு. கைநிறைய செலவுக்குப் பணம். மேலும் மனநிறைவுடன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான்.

செண்பகம் உணவுவிடுதியின் சமையல்காரரிடம் நெருங்கிப் பழகினான். நாட்கள் செல்லச் செல்ல அவர் செண்பகத்தின் நண்பராக மாறினார். சமையல்காரர் செண்பகத்திற்குப் பலகாரங்கள் செய்வதற்குக் கற்றுக்கொடுத்தார். ஆண்டுகள் சில சென்றன. செண்பகம் புதிய சிந்தனையுடன், பல புதிய பலகாரங்களைச் செய்து வந்தான். கடையில் பலகாரம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவனுடைய மாமா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

முதுமையின் காரணமாகப் பலகாரக்கடையைச் செண்பகத்திடம் அவர் ஒப்படைத்தார். காலப்போக்கில் அவன் செல்வந்தராக மாறினான். மாதம் இருமுறை ஏழைகளுக்கு இலவசமாக ஒரு  கிலோ பலகாரம் வழங்கி வந்தான். அதோடு மக்களுக்குத் தான தர்மமும் அவ்வப்போது வழங்கி வந்தான். அதனால், அவன் பேரும் புகழும் அடைந்தான். தம்முடைய குடும்பத்தினரையும் செண்பகம் ஆஸ்திரேலியாவிற்கு  அழைத்துச் சென்றான். அனைவரும் அங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

(சொற்களின் எண்ணிக்கை 153, சி. குருசாமி,  ஆசிரியர்)   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment