Thursday, November 10, 2011

குறிப்பு: ``அ’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``ஆ’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.

``அ’’ பிரிவு (மின்னஞ்சல்)

பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 100 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும். (20 மதிப்பெண்கள்)

1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
எழுதவும்.

பெறுநர்:
அனுப்புநர்:

பொருள்:
@

மின்னஞ்சல்

மின்னஞ்சல் பாடம்

மின்னஞ்சலில் தெரிந்துகொள்ளவேண்டியவை

* தமிழ் 99மென்பொருள் கணினியில் உள்ளதா என்பதைக் கவனிக்கவேண்டும்

* தமிழுக்கு மென்பொருளை மாற்றம் செய்துகொள்ளவேண்டும்

* விசைப் பலகையில் தமிழ் எழுத்துகள் இருக்கும் பகுதியை நினைவில் கொள்ளவேண்டும்

* உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், ஆய்த எழுத்து ஆகியவற்றில் கவனம் கொள்ளவேண்டும்

* புள்ளி இடம் பெறும் இடத்தை அடையாளம் காணவேண்டும்

* மின்னஞ்சலில் உள்ள பகுதிகளை கவனத்தில் கொள்ளவேண்டும்

* பெறுநர் முகவரியில் சிறிய மாற்றம் இல்லாமல் ஆங்கிலத்தில் தேர்வு செய்யவேண்டும் அல்லது தட்டச்சு செய்யவேண்டும்

* தட்டச்சு செய்த பகுதியை நன்கு படித்துப் பார்க்க வேண்டும்

* பிழையின்றிக் கருத்துகள் அமையவேண்டும்

* உரிய மரியாதை கொடுத்து தட்டச்சு செய்யவேண்டும்

* தொடக்கம் விளக்கம், இறுதி ஆகிய பகுதிகள் இருக்கவேண்டும்

* இறுதியில் மின்னஞ்சல் அனுப்புவர் முகவரி இருக்கவேண்டும்

Saturday, October 22, 2011

சுயவிடைக் கருத்தறிதல் - ஒரு கண்ணோட்டம்

மனத்தில் கொள்ளவேண்டியவை

* சுயமாக விடையை எழுதவேண்டும்

* சொந்தக் கருத்தை எழுதாமல் இருக்கவேண்டும்

* பொருத்தமற்ற மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது

* பனுவலை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்

* பொதுவான மையக் கருத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்

· உடன் பாட்டு வினாக்களையும் எதிர்மறை வினாக்களையும் அடையாளம் கண்டு அதற்குத் தகுந்தாற்போல் கருத்தறிதலில் அமைந்துள்ள விடையை மாற்றி எழுதும் திறனைப் பெறுதல்

· வினாக்களின் அமைப்பு முறை

வினா அமைப்பு
பொருள்

யார்?
ஒருவரைக் குறிப்பது
எது?
ஒன்றைக் குறிப்பது
யாது?
ஒன்றைக் குறிப்பது
யாவர்?
பலரைக் குறிக்கும் பன்மைச் சொல்
எப்படி?
பொதுவாக வழிமுறைகள்
என்ன?
கருத்தைத் தெரிந்துகொள்ளக் கேட்பது (பேசுவது என்ன? சொல்வது என்ன?)
என்னென்ன?
வகைகளைக் குறிப்பது
எத்தகையன?
பொதுவாகப் பண்பைக் குறிப்பது
எப்படிப்பட்டவை?
பொதுவாகப் பண்பைக் குறிப்பது
எப்போது?
காலத்தைக் குறிப்பது
எங்கே?
இடத்தைக் குறிப்பது

· வினாக்களை அணுகுமுறை

* கேள்வியை (எடு - யார்?) அடிக்கோடு இடுதல் வேண்டும்

(எடு) கோபால் கடைக்குப் போனான். அவன் அங்குப் பொருள்கள் வாங்கினான்.

கேள்வி - கோபால் எங்கே போனான்?

பதில் - கோபால் கடைக்குப் போனான்.
· எழுவாயைப் (கோபால் என்ற பெயரை) பயன்படுத்தவேண்டும்

· கந்தன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினான்.
· வீடு திரும்பியது யார்?
· கந்தன் வீடு திரும்பினான்.
· வீடு திரும்பியது கந்தன்.

· வினாவும் விடையும்

· வினாவைக் கொண்டு பதிலை முடித்தல்

(எடு)மல்லிகா மலர் வாங்கி வந்தாள்?
மல்லிகா என்ன வாங்கி வந்தாள்?
மல்லிகா மலர் வாங்கி வந்தாள்.

· பிழை இன்றி எழுதவேண்டும்

· நீண்ட வாக்கியம் எழுதுவதைத் தவிர்க்கலாம்

· இணைப்புச் சொற்களைப் பயன்படுத்தலாம்

· ஒவ்வொரு வினாவாகப் படித்துப் பதிலைக் காண்பது நல்லது

· அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதவேண்டும்

கீழ்க்காணும் வினாக்களில் வினாப் பகுதியை மட்டும் அடிக்கோடு இட்டு வினாவின் தன்மையைப் புரிந்து கொள்க.

நாம் பிறர் பண்புகளைப் பார்த்துச் செய்யவேண்டியது என்ன?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

நமக்கு எப்போது நம்பிக்கை பிறக்கும்?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
நம்முடைய செயல் சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும்?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
மாதிரிப் பகுதி

கதை எழுத நினைக்கின்ற இளம் எழுத்தாளர்கள் மிகச் சிறந்த கதைகளைப் படித்தால் புதிய சிந்தனைகள் தோன்றும். அவர்கள் கதையை யாருக்காக எழுதுகிறோம் என்பதை முன்கூட்டியே நன்கு யோசிப்பதுடன் சிறந்த சமூக சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். மேலும், இளம் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்தால் சிறந்த கதைக் கருவினை உருவாக்குவதற்குரிய வழிபிறக்கும். இக்கருவினைக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் எளிய நடையில் அமையும்போது அவை படிப்போருக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

வினாக்கள் அமைப்பு முறை

ஏறக்குறைய ஒரு பதிலுக்கு வரும் பலவகைப்பட்ட கேள்விகள்

1. இளம் எழுத்தாளர்கள் செய்யவேண்டியவை எவை?
2. இளம் எழுத்தாளர்களின் கடமை என்ன?
3. ஒருவர் சிறந்த எழுத்தாளராகுவதற்கு எவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்?
4. வளரும் எழுத்தாளர்கள் வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் யாவை?

விடையின் முதல் நிலை

அமைப்பு
இளம் எழுத்தாளர்கள் மிகச் சிறந்த கதைகளைப் படிக்கவேண்டும்
கதையை யாருக்காக எழுதுகிறோம் என்பதை முன்கூட்டியே நன்கு யோசிக்கவேண்டும்
சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்றுப் பார்க்கவேண்டும்
கதைகள் எளிய நடையில் அமைக்கவேண்டும்

விடையின் இரண்டாம் நிலை அமைப்பு
(விடையைத் தொகுத்து எழுதுதல்)

____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

வளரும் எழுத்தாளர்கள் தோல்வி அடைவது ஏன்?
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அனுபவித்திருப்பான். இவை மனிதனுக்கு மனிதன் சூழ்நிலையாலும், மனநிலையாலும் மாறுபடும். இவற்றை எல்லாம் தாண்டி எல்லா மனிதர்களுக்கும் ஒரு பொதுவான சுக துக்கங்கள் இருக்கின்றன. இவை கதைகளில் இடம்பெறும்போது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவைகளாக அக்கதைகள் திகழ்கின்றன. இத்தகைய பொதுத் தன்மை வாய்ந்த கதைகள் படிப்பவரின் ஆழ்மனத்தில் ஒருவித விளைவை ஏற்படுத்தும்போது அவை மிகச்சிறந்த கதைகளாகக் காலவெள்ளத்தில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. எனவே, உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய கதா பாத்திரங்களைப் படைத்த கதாசிரியர்கள் மக்களால் போற்றிப் புகழப்படுகிறார்கள்.

ஒருசில கதைகள் மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போவற்கான காரணங்கள் யாவை?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

சொற்பொருள்
(5 மதிப்பெண்கள்)

பின்வரும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை எழுதவும்

1
வாரிசுகள்

2
சம்பந்தப்பட்ட

3
மாபெரும்

4
அடையக்கூடியதாக

5
சோர்வடையும்

பனுவலும் சொல்லும்
பனுவலில் இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லைப் பொருத்திக் காட்டுக.
இவ்வுலகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகிறது. அவ்வளர்ச்சியின் காரணமாகப் பூமியில் வாழும் மக்களின் வாரிசுகள் இன்று நிலவில் சென்று வாழத்துடிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அங்குச் சுற்றுப்பயணம் சென்று வர நினைப்பவர்கள் தங்களின் பெயர்களைக்கூட முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். இது வியப்பூட்டும் செய்தியாகும். இத்தகைய மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் மனிதர்கள் கடைப்பிடித்து வரும் உயரிய இலக்குகளே ஆகும்.

வாழ்க்கைக்கு இலக்கு மிகவும் அவசியம். நாம் வெற்றி பெறுவதற்கு முதலில் நம் வாழ்க்கையின் இலட்சியம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்மால் அடையக்கூடியதாக இருப்பது நல்லது. நமது இலட்சியம் நடைமுறைக்குச் சாத்தியமாக இல்லாவிட்டால் அதை அடைவது இயலாது. அம்முயற்சியில் ஈடுபடும்போது சலிப்பு ஏற்படுவதோடு மனமும் சோர்வடையும்.

நன்றியுடன்
ஆசிரியர் சி. குருசாமி

Monday, October 17, 2011

கருத்தறிதல் - விளக்கம்

கருத்தறிதல்

ஒருவரின் கருத்தையோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் கருத்தையோ அறிந்துகொள்வதற்குக் கருத்தறிதல் என்று பெயர். இது மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கருத்தறியும் திறனை ஒருவர் வளர்த்துக்கொள்ளாவிட்டால் மற்றவரின் எண்ணத்தையும் செயல்பாட்டினையும் புரிந்துகொள்ளமுடியாது. எனவேதான் மாணவப் பருவத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கருத்தறிதல் என்பது புரிதல் திறனைக் குறிக்கும்.

வினா

கருத்தறிதலுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்?
______________________________________________
______________________________________________
______________________________________________

கருத்தறிதல் திறனை வளர்த்துக்கொள்ளும்போது நாம் எத்தகைய நன்மைகளை அடையலாம்?
_________________________________________________________
_________________________________________________________
_________________________________________________________

Monday, October 10, 2011

கவிதையும் வாழ்க்கையும்

கருத்து எழுதுக

கருவறை

இருமை நிறைந்த
இல்லறக் குகையது
இல்லாருக்கும் வரப்பிரசாதம்
இன்பவளர் பெருங்கனி!

இருப்போருக்கு வெறுப்பு
இல்லறம் கசந்திடா
இன்பத்தைச் சுரந்திடும்
இனியதொடர் நற்சுரப்பி!

வீரத்தின் விளைகளம்
விவேகத்தின் பிறப்பிடம்
புலிவாழ் சிறுகுகை
புவிவணங்கும் எப்போதுமே!

போர்க்குணம் கொண்டோரும்
போற்றுவாரே அதை என்றும்
இப்புவி நிலைத்து
இருந்திடத் தேமே!

இக்கவிதையைப் படித்து கவிதையின் நயத்தினை நினைத்துப்பார்ப்பதோடு கவிதை ஒன்றும் எழுதிப் பழகுக!

வாக்கிய அமைப்பு - விளக்கம்

வாக்கியம் அமைக்கும்போது கவனிக்கவேண்டியவை
குறிப்பு

தமிழ்மொழியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு வாக்கிய அமைப்பு முறையும் உதவி செய்யும். ஒருவர் வாக்கிய அமைப்பு முறையைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டால் அவர் கட்டுரை, கடிதம், கருத்தறிதல் போன்ற பகுதிகளை நன்கு புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
உள்ளடக்கம்
1. வாக்கிய விளக்கம்
2. எழுவாய் பயனிலை விளக்கம்
3. எழுவாய் பயனிலை இயைபு
4. இருவகை எழுவாய் அமைப்பு முறை
5. பயனிலை அமைப்பு முறை
6. செயப்படுபொருள் விளக்கம்
7. தமிழ்வாக்கியத்தின் பொதுவான அமைப்பு முறை
8. மாதிரி வாக்கியங்கள்
9. நடவடிக்கை 1 குழுப்பணி
10. நடவடிக்கை 2 தனிவாக்கியம்
11. பயிற்சி வாக்கியங்கள்
வாக்கியம் பற்றிய விளக்கம்
• சில சொற்கள் சேர்ந்து ஒரு முழுக்கருத்தைத் தெரிவிக்கும்.
• பொதுவாக எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இருக்கும்.
• (எடு)
• மாலா பள்ளிக்குச் சென்று பாடங்களை நன்றாகப் படித்தாள்.

எழுவாய், பயனிலை பற்றிய விளக்கம்
*எழுவாய்
இது கருத்தினை எழுதுவதற்கு இடமாக இருக்கும். அதாவது யார்? எது? என்ற கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.
(எடு)
குமரன் புத்தகம் எழுதினான்.
விளக்கம்
புத்தகத்தை எழுதியது யார்? என்ற கேள்வியைக் கேட்கும்போது குமரன் என்ற பதில் கிடைக்கிறது. குமரன் என்ற சொல் இல்லாவிட்டால் புத்தகத்தை எழுதியவர் யார்? என்ற கேள்விக்குப் பதில் தெரியாது. எனவே, வாக்கிய அமைப்பில் குமரன் என்ற சொல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பயனிலை

என்ன செய்தான்? என்ன செய்தது? என்ற கேள்விக்குப் பதிலைத் தருவது பயனிலையாகும்.
(எடு)
பீட்டர் கடைக்குப் போனான்.
விளக்கம்.
பீட்டர் என்ன செய்தான்? என்ற கேள்விக்குப் பதில் `போனான்` என்பது ஆகும்.
பயனிலையின் முக்கியத்துவம்
ஒரு வாக்கியத்தில் அமைந்துள்ள பயனிலை எழுவாய், திணை, பால், எண், இடம் ஆகியவற்றுடன் இசைந்திருக்கவேண்டும்.
இவை இசைந்து இருக்காவிட்டால் மொழிப்பிழை ஏற்படும். எனவே, வாக்கியம் அமைக்கும்போது கண்டிப்பாக இவற்றை மனத்தில் கொள்ளவேண்டும்.

எழுவாய் பயனிலை இயைபு (தொடர்பு)
எழுவாயும் (கந்தன்) பயனிலையும் (போனான்) நிச்சயமாகத் தொடர்புடையதாக இருக்கவேண்டும்.
* உயர்ந்த ஒழுக்கத்தை உடைய எழுவாய்க்கு உயர்ந்த ஒழுக்கத்தை உடைய பயனிலையைப் பயன்படுத்தவேண்டும்.
(எடு) கந்தன் செய்தித்தாள் படித்தான்.
இங்கே கந்தன் பற்றிய செய்தியைச் சொல்லும்போது படித்தான் என்று உயர்திணைக்குரிய பயனிலையைக் குறிக்கும் சொல்லைப் (படித்தான்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது போல உள்ள சொல்லுருபுகளைப் (ஆனவன், ஆனவள், ஆனவர், என்பவன், என்பவள், என்பவர்) பயன்படுத்தவேண்டும்.
* அஃறிணை எழுவாய்க்கு ஆனது, ஆனவை, என்பது, என்பவை என்னும் சொல் உருபுகளைப் பயன்படுத்தவேண்டும்.
(எடு) குரங்கு வேடிக்கை காட்டியது.
இருவகை எழுவாய் அமைப்பு முறை
ஒருவாக்கியத்தில் அஃறிணை எழுவாய் பல இருந்தால் அது அஃறிணைப் பன்மை வினைமுற்றுகளைக் கொண்டு முடியவேண்டும்.
(எடு) கோபாலும் கிளியும் பூனையும் நாயும் சென்றன.
* ஒரு வாக்கியத்தில் உயர்திணை எழுவாய் பல இருந்தால் உயர்திணைப் பன்மை வினைமுற்றைக்கொண்டு அந்த வாக்கியம் முடியும்.
(எடு) கோபால், கந்தன், சலீம், பீட்டர் நாய் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்.
பயனிலையின் அமைப்பு முறை
எழுவாய் உயர்திணை – பயனிலை உயர்திணை
(எடு)
வள்ளி கடைக்குப் போனாள்.
எழுவாய் அஃறிணை – பயனிலை அஃறிணை
(எடு)
மாடுகள் காட்டில் மேய்ந்தன.
எழுவாய் மரியாதைப் பன்மை – பயனிலை மரியாதைப் பன்மை
(எடு)
அவர் கடைக்குச் சென்று வேண்டிய பொருள்களை வாங்கினார்.

செயப்படுபொருள் – விளக்கம்

ஒரு வாக்கியத்தில் எதைச் செய்தான் என்ற கேள்விக்கோ எதைச் செய்தது என்ற கேள்விக்கோ பதில் இருந்தால் அந்த வாக்கியம் செயப்படுபொருள் அமைந்துள்ள வாக்கியம் ஆகும்.
(எடு) கோபால் புத்தகத்தைப் படித்தான்.
ஒரு சில வாக்கியங்களில் செயப்படுபொருள் இல்லாமல் இருக்கும்.
(எடு) முருகன் பாடினான்.
ஒருசில வாக்கியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் இருக்கும்.
சலீம் அறிவியலும் தமிழும் படித்தான்.
குறிப்பு:
வகுப்பிற்குத் தகுந்தாற்போல் வாக்கியத்தின் கருத்து அமையவேண்டும்

தமிழ்வாக்கியத்தின் பொதுவான அமைப்பு முறை
எழுவாய்
எழுவாய் முதலில் இருக்கும்,
(எடு) பசு பால் கொடுக்கும்.
* செயப்படுபொருள்
செயப்படுபொருள் இரண்டாவது இடத்தில் இருக்கும்.
(எடு) திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
* பயனிலை
மூன்றாவது எண்ணுவது மூன்றாவது இடத்தில் இடம்பெறும்.
(எடு) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார்

மாதிரி வாக்கியங்கள்

உவகையுடன்
திரு மணி தன் மகன் எல்லாப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதால் மிகவும் உவகையுடன் காணப்பட்டார்.
முறையாக
நாம் நாள்தோறும் பாடங்களை முறையாக படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

குறிப்பு

வாக்கியம் அமைத்தலில் ஈடுபடும்போது முதலில் சொல்லுக்குரிய பொருளை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

சொல்லுக்குரிய விளக்கம் எழுதும் வாக்கியத்தில் இருக்கவேண்டும். அதாவது வாக்கியம் பொருள் விளங்க அமைந்திருக்கவேண்டும்.

(எடு) `செய்தான்` என்ற சொல்லுக்கு வாக்கியம் அமைக்கும்போது `தம்பி செய்தான்` என்று அமைத்தால் `செய்தான்` என்பதற்குரிய பொருள் தெளிவாக விளங்கவில்லை. தம்பி வீட்டுப்பாடங்களைப் புரிந்து செய்தான். என்று எழுதும்போது தம்பி செய்தது வீட்டுப்பாடங்கள் என்று தெளிவாக வாக்கியத்தின் பொருள் விளங்கும்.

சுருங்கச் சொன்னால் நாம் உருவாக்கும் வாக்கியத்தில் கருத்துத் தெளிவாக இருக்கவேண்டும்.

ஒரு சொல்லுக்கு இரண்டு வாக்கியங்கள் தேர்வில் எழுதக்கூடாது.

பினவரும் சொற்களை வாக்கியத்தில் எழுதவும்

பார்த்தான்
______________________________________________________________________________________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________
பழகியபோது
______________________________________________________________________
______________________________________________________________________
தனிச்சிறப்பு
____________________________________________________________________________________________________________________________________________
எண்ணமாகும்
____________________________________________________________________________________________________________________________________________

மனங்கவர்ந்த
______________________________________________________________________________________________________________________________________________
பூமியைப்போல
______________________________________________________________________________________________________________________________________________
அனுசரித்து
______________________________________________________________________
______________________________________________________________________
பராமரிப்பு
____________________________________________________________________________________________________________________________________________
யானையும் குதிரையும்
____________________________________________________________________________________________________________________________________________
ஏற்ற இறக்கம்
______________________________________________________________________________________________________________________________________________
பயக்கிறது
_____________________________________________________________________________________________________________________________________________
பெருந்தன்மை
______________________________________________________________________
_______________________________________________________________________
இரக்கத்தோடு
____________________________________________________________________________________________________________________________________________
முன்னோக்கி
____________________________________________________________________________________________________________________________________________
பயன்படுத்த
______________________________________________________________________________________________________________________________________________
இன்றியமையாதது
______________________________________________________________________________________________________________________________________________
காணும்போது
______________________________________________________________________
______________________________________________________________________
மேற்கொண்டனர்
______________________________________________________________________________________________________________________________________________
அறிவுறுத்தும்

உருவாக்கினர் ______________________________________________________________________________________________________________________________________________
நடைபெற்ற
______________________________________________________________________________________________________________________________________________
நிகழ்ச்சிகளை
______________________________________________________________________________________________________________________________________________
மறுமலர்ச்சி
______________________________________________________________________________________________________________________________________________
பாரபட்சமின்றி
______________________________________________________________________________________________________________________________________________
உந்துசக்தியாக
______________________________________________________________________________________________________________________________________________
தன்னிகரற்ற
______________________________________________________________________________________________________________________________________________
நல்லவற்றை
______________________________________________________________________________________________________________________________________________

தயாரித்தவர்
நன்றியுடன்
ஆசிரியர் சி.குருசாமி

Saturday, September 24, 2011

பாடலின் கருத்தை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடுக.

பக்குவம் பெற்றிட

வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்
வீர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்
தம்மிடம் இருப்போர்த் தழுவிச் செல்லும்
தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!

எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்
மாறாமனித நேயம் இருந்திட வேண்டும்
பணிபல முடிந்திடினும் பார்போற்றி வந்திடினும்
பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!

உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம் வேண்டும்
தத்துவ மறிந்திடினும்மனத் தத்துவம் உணர்ந்திடவேண்டும்
உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்த கொள்கைதனை
வகுத்தொளிவின்றி உயர்ந்துநின்றிடவேண்டும்
-கவிமொழி
வாக்கியத்தில் எழுதவும் (அகராதியைப் பயன்படுத்தவும்)

1. இறுக்கி
___________________________________________________
___________________________________________________
2. சுருக்கி
__________________________________________________
__________________________________________________
3. பெருக்கி
__________________________________________________
__________________________________________________
4. உருக்கி
_________________________________________________
_________________________________________________
5. கிறுக்கி
_________________________________________________
_________________________________________________

Monday, August 1, 2011

தட்டச்சு செய்யவும்

தட்டச்சு செய்யவும்

நேர்காணல்
______________________________________________________________________
______________________________________________________________________

நெறிமுறை
_____________________________________________________________________
_____________________________________________________________________

நெளிவுசுளிவு
____________________________________________________________________
____________________________________________________________________

நேசித்தான்
____________________________________________________________________
____________________________________________________________________

இணைமொழிகள்

இணைமொழிகள்

கண்டது கேட்டது

நாம் கண்டது கேட்டது கொண்டு ஒருவரைப் பற்றித் தவறான முடிவுக்கு வரக்கூடாது.

குழலும் யாழும்

இசை மேதைகள் குழலும் யாழும் கொண்டு விழாக்களில் இசை எழுப்பினர்.

தாயும் சேயும்
மருத்துவமனையில் தாயும் சேயும் மிகவும் நலத்துடன் உள்ளனர்.

நன்மை தீமை

ஒருசெயலில் ஈடுபடுமுன்னர் நன்மை தீமையை நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

போரும் பூசலும்

போரும் பூசலும் உள்ள நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள்.

மேள தாளம்

திருமணத்தில் மேள தாளம் இசைத்து மகிழ்வித்தனர்.

உயர்நிலை 3 மரபுத்தொடர்கள் இணைமொழி

மரபுத்தொடர்கள் உயர்நிலை ௩
விட்டுக்கொடுதான்
கந்தன் தன் தம்பிக்காக சொத்து முழுவதையும் விட்டுக்கொடுத்தான்
வெட்டிப் பேச்சு
வெட்டிப் பேச்சுப் பேசி கிடைக்கும் காலத்தை வீணாகக் கழிக்கக் .கூடாது

கக்கவைத்தார்
காவலர் குற்றவாளியிடம் உண்மையைக் கக்கவைத்தார்.
கழுத்தறுத்தான்
பிரபு தன் நண்பனுக்கு உதவி செய்வதாகச் சொல்லித் தக்க சமயத்தில் கழுத்தறுத்தான்.

கைநனைத்தான்

விருந்தினர்கள்திருமணவீட்டில் கைநனைத்துச்
சென்றனர்
கையைக் கடித்தது
முத்து நடத்தி வந்த வியாபாரம் அவனுடைய கையைக் கடித்ததால் வியாபாரத்தை நிறுத்தினார்.

Saturday, June 11, 2011

படமும் நாமும்

1. படத்திலிருந்து நீ அறிந்துகொண்ட செய்தியை எழுதுக

2. படத்திலிருக்கும் பச்சை நிறம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன?

3. படத்திலிருக்கும் பொருளின் பயன்கள் இரண்டு கூறுக.
வாக்கியங்களில் எழுதவும்

1. முன்னோக்கி
_________________________________________________________________
_________________________________________________________________

2. வாழ்த்துரை
_________________________________________________________________
_________________________________________________________________

3. வளமாக
________________________________________________________________
________________________________________________________________

4. உயர்ந்தோரை
________________________________________________________________
________________________________________________________________

5. வாழ்வாங்கு
________________________________________________________________
________________________________________________________________

Monday, March 28, 2011

வாக்கியங்களில் அமைக்கவும் நிலவு ______________________________________________ பார்த்த ______________________________________________ பார்த்த பொழுது _____________________________________________ வாழ்க்கைத் துணையை ______________________________________________ வரலாற்றில் ______________________________________________ வாக்கியத்தில் ________________________________________________ மிகநீண்ட ________________________________________________

Monday, March 21, 2011

வாக்கியங்களில் எழுதவும்

திட்டமிடுதல்
_________________________________________________________

வெற்றி
_________________________________________________________

அடைவதற்குரிய
_________________________________________________________

குறிக்கோளை
_________________________________________________________

உருவாக்கினர்

_________________________________________________________

சவால் விட்டனர்
_________________________________________________________

உரியவர்
_________________________________________________________

வாக்கியங்களை முடித்து எழுதுக
ஜப்பானில் ஏற்பட்ட கடல் சீற்றம் உலகமக்களைச் சிந்திக்கத்தூண்டியது.

உலக மக்களின் சிந்தனை தூண்டக் காரணமாக இருந்தது _______________________.

உலகக் கோப்பையை வெல்வதற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

பல நாடுகள் போட்டி போடுவதற்குக் காரணமாக இருப்பது __________________________.

பிறருக்கு முடிந்த வரை உதவி செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவோம்.

நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவதற்கு __________________________.

பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாவிட்டால் _________________________________________________________________________.

Friday, March 18, 2011

பாரதியார்

புதுமைப் பெண்
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாதவப் பெரியோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
- பாரதியார்