Wednesday, July 5, 2017



மரபும் பண்பாடும்
முன்னோரும் நாமும் 
கண்டதை அறிவோம்!

  வகுப்பு: உயர்நிலை 2 விரைவு 
(2 EXPRESS)


மனிதன் இயற்கையிலிருந்து கற்றுக்கொண்ட செய்திகள் ஏராளம். ஒரு காலத்தில் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழி தேடினர். அவர்கள் செடி, கொடிகளின் மூலம் கிடைக்கும் பூக்கள், காய் கனிகள், வேர்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். அவற்றின் மருத்துவக் குணங்களைக் கண்டறிந்தனர். அதற்கு மூலிகை மருத்துவம் என்று பெயரிட்டனர்.  

 மூலிகையின் சிறப்பினைக் கவிதை ஒன்று,
மூலிகை என்பது மாமருந்தாம்
முற்றிலும் பிணியை நீக்கிடுமாம்!
முகத்தைப் பொலிவாய் மாற்றிடுமாம்
முத்துப் போல அழகூட்டிடுமாம்!

என்று கூறுவதன் மூலம் அறியலாம். நம் வாழ்வை வளமாக்கும் சிறப்புப் பெற்ற மூலிகையில் சிலவற்றை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

மஞ்சள்     




மஞ்சள் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. மஞ்சளை விரல் மஞ்சள், கிழங்கு மஞ்சள் என்று பிரிப்பார்கள். விரல் மஞ்சள் பெரும்பாலும் சமையலுக்கும், கிழங்கு மஞ்சள் முகத்தில் பூசிக்கொள்வதற்கும் பயன்படுகிறது. இது பல நோய்களைக் குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக, மஞ்சள் கிருமியைக் கொல்வதற்கும் உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்கும் சளித்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் பயன்படுகிறது.

இஞ்சி


இஞ்சி என்ற செடியின் வேரில் உருவாகும் ஒரு வகைக் கிழங்கு ஆகும். இச்செடியின் வேரில் கொத்துக்கொத்தாக இஞ்சி உருவாகும். இது பசியைத் தூண்டும்,  தலைவலி, வாந்தி போன்றவற்றை நிறுத்துவதற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் சிறப்பை உணர்ந்த நம்முன்னோர் இதனை வேர்க்கனி என்று அழைத்தனர்.

எலுமிச்சைப் பழம் 




எலுமிச்சையில் பல வகை  உண்டு. இது  மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெயில் காலத்தில் அதிகம் பயன்படுகிறது. இதன் சாறு உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு பசியையும் தூண்டும்.  எலுமிச்சைப் பழம் வயிற்றில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளை நீக்கும். இது வாய்ப்புண்ணுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கனிகளுள் சிறந்த மருத்துவக் குணத்தை இது பெற்றிருப்பதால் இதனை, ‘இராஜக்கனி என்று அழைப்பார்கள்.


நமக்கு அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஏராளமான உணவுப் பொருள்கள் மருத்துவக் குணத்தை உடையவை.  அவற்றின் சிறப்பினைப் பற்றி மாணவப்பருவத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.


வினாக்கள்

1.நம் முன்னோர் எவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்தனர்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

2.  தமிழர்கள் மஞ்சளை எவற்றிற்கெல்லாம் 
    பயன்படுத்துகின்றனர்?


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. எலுமிச்சைப் பழத்தின் மூலம் நாம் எத்தகைய
   நன்மைகளை அடைந்து வருகிறோம்?

____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________


பயிற்சி 2

ஒளிப்பதிவு

`இணையபக்கத்திற்குச் சென்று மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறிந்து அவற்றை ஒளிப்பதிவு செய்யவும். அதன் பின்னர் வகுப்பறையில் பகிர்ந்து கொள்ளவும்.

                       

பயிற்சி இரண்டில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் இணையப்பக்கங்களுக்கு நன்றி.


அகராதியைப் பயன்படுத்திப் பொருளை எழுதவும்

1 முற்றிலும்   __________________________
2 பிணியை    __________________________
3 குணத்தை  ____________________________


பயிற்சி 3 (தொடர்பயிற்சி - வீட்டுப்பாடம்)

பின்வரும் சொற்களை அவற்றின் பொருள் விளங்கும் வகையில் உன் சொந்த நடையில் வாக்கியம் அமைத்து எழுதுக.

1. போன்றவற்றை  
____________________________________________________________________________________________________________________________________________________________

2. கொத்துக்கொத்தாக
____________________________________________________________________________________________________________________________________________________________
3. புத்துணர்ச்சியை  
____________________________________________________________________________________________________________________________________________________________

                                                  முற்றும்                                                            
நன்றியுடன்
பாடத்தயாரிப்பு
ஆசிரியர் சி குருசாமி