Tuesday, September 29, 2009

உயர்நிலை 1 (விரைவு / உயர்தமிழ்) வகுப்புக்குப் பொருத்தமான மாதிரிக் கட்டுரை வடிவம். 1


கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்
இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, மாறுபட்ட பண்புகளை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக நாள்தோறும் போராடி உயிர் வாழ்கின்றன. அவை சிந்திக்கும் திறன் பெற்றவை. னால், சிந்தித்த கருத்துகளைப் பற்றிப் பகுத்தறியத் தெரியாதவை. அவற்றுள் டு, மாடு போன்றவை மனித இனத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்து வருகின்றன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இவற்றின் பாலை மருத்துவரின் லோசனையின்படி நாள்தோறும் குடித்துவந்தால் மிகவிரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு ஏற்படும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமையும் ற்றலும் உள்ளவை. இவை இரண்டும் அவற்றின் இனப்பண்புகள் கும். அவை பிறந்த சில மாதங்களில் அங்குமிங்கும் ஓடியாடித் தன்னம்பிக்கையுடன் தமக்கு வேண்டிய உணவினை வேட்டையாடி வாழ்கின்றன. டு, மாடு, மான், போன்ற விலங்குகள் அஞ்சி வாழ்பவை. அவை தமக்கு வேண்டிய உணவு கிடைக்காதபோதும்கூட மாமிச உணவைத் தின்னாமல் உயிரை விடும். ஓநாய். கரடி, நரி போன்றவை வஞ்சக உணர்வு உள்ளவை. மற்ற உயிரினங்களையும் அவை வேட்டையாடிய உணவினையும் எளிதில் அபகரித்துக் கொள்பவை. இவற்றில் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொல்லும் ற்றலுடையது. இதனை வஞ்சகக் குணம் உள்ள விலங்கு என்று விலங்கியல் துறையினர் பிரிப்பர்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பல்திறப்பட்ட குணங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மனித சமுதாயத்திற்கு நன்மையைத் தருகின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள் என்று உளவில் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்குணங்களை நம்மை விட்டு நாம் நீக்கும்போது மனிதத் தன்மை பெற்றவர்களாக மாறிவிடுவோம். ஒருவர் மனித நேயத்துடன் வாழும்போதுதான் மற்றவர்கள் அவரை மதித்துத் தலைவணங்குவார்கள்.


எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களை அவசியம் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்களும் சிறப்புடன் வாழ்வதற்கு நாம் வழிகாட்டுவதோடு அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய பண்புகளை நாம் பெருக்கிக்கொள்ளும்போது மனித உறவு வலுப்பெறும். அத்துடன் நாம் உயர்வடைவதோடு நம்மைச் சார்ந்திருக்கின்ற சமூகமும் உயர்வடையும்.


உயர்நிலை 1 வழக்கம் தொழில் நுட்பம் / வழக்கம் (மாதிரிக் கட்டுரை 2)
கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்

இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை பல குணங்களை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக போராடி உயிர் வாழ்கின்றன. விலங்குகளால் நன்மை தீமைகளை யோசித்துப் பார்க்க முடியாது. டு, மாடு, ஒட்டகம் போன்றவை மனித இனத்திற்கு நன்மையைச் செய்து வருகின்றன. இவற்றின் பால் உடலுக்கு மிகவும் சக்தியைத் தரும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் தைரியமானவை. அதனால், அவை மற்ற விலங்குகளை எளிதில் கொன்றுவிடும். டு, மாடு, மான், போன்ற விலங்குகள் பயந்து வாழ்பவை. அவை செடி, கொடிகளைத் தின்று உயிர் வாழும். கரடி, நரி போன்றவை தந்தரம் உடையவை. இவை மற்ற விலங்குகளை நம்பவைத்து ஏமாற்றும். இவற்றுள் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. அத்துடன் இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொன்று விடும்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பலவகைக் குணங்கள் உள்ளன. அவற்றில் பல மக்களுக்கு நன்மையைச் செய்கின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள். இக்குணங்கள் இல்லாதவர்களை மக்கள் மதித்துத் தலை வணங்குவார்கள்.

எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் குணத்தை நாம் வளர்த்துக்கொள்ளவது நல்லது. இதன் மூலம் மனித உறவு வலுப்பெறும். நாம் உயர்வடைவதோடு நம்மைச் சுற்றி இருக்கும் சமூகமும் உயர்வடையும்.

Wednesday, September 23, 2009

வளர்த்தநரி 24.09.2009

கவிதை (கதை) இலக்கியம். இக்கவிதைக்குக் கவிதை நயம் எழுதுக

வளர்த்தநரி 24.09.2009

காட்டில் ஒரு குட்டிநரி
காணாமல் அது போனது
போன வழி மறந்தது
புலம்பி அது தவித்தது!

சிங்கம் ஒன்று பார்த்தது
சினத்தை அது மறந்தது
பாசம் காட்டி நின்றது
பால் கொடுத்து மகிழ்ந்தது!

கொஞ்ச காலம் சென்றது
கொஞ்சும் காலம் மறைந்தது
நரிக்குட்டி அங்கிருந்து பிரிந்தது
நாடிதன் கூட்டத்தோடு இணைந்தது!

காலம் விரைந்து சென்றது
கால் வீரம் இழந்தது
படுத்துச் சிங்கம் இருந்தது
பார்த்து நரிக்கூட்டம் வந்தது!


வஞ்சகமாய் வளர்த்தநரி நின்றது
வாழ்வை முடிக்க நினைத்தது
சீறிப்பாய்ந்து சிங்கத்தைக் கொன்றது
சில்லறையாய் உடல் மறைந்தது!

- எழுதியவர் ஆசிரியர் குருசாமி

Sunday, September 20, 2009

கதையும் சிந்தனையும் 21.09.209


இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டைபோல் அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன. மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன. மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் எங்குச் செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது. ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் பார்த்தது. அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் கொடுத்தது. நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அது சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில சென்றன. சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. அதனால், சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் செல்லும். ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தைத் தாக்க வந்தது. அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் தெரிந்தது. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது. அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் உயிர் பிரியும் நேரம் வந்தது. இறுதியாகச் சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.

1. கோட்டையூர் என்று மக்கள் அழைக்கக் காரணம் என்ன?

2. மலையில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் யாவை?

3. மலையில் வாழும் இரண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறுக.

4. ஆற்றங்கரையில் சிங்கம் என்ன செய்துகொண்டிருந்தது?

5. நரிக்குட்டி முதலில் ஏன் மகிழ்ச்சி அடைந்தது?

6. சிங்கம் எப்போது மகிழ்ச்சி அடைந்தது?

7. சிங்கத்தால் ஏன் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை?

8. சிங்கத்தின் உயிர் எப்போது பிரிந்தது?

9. இக்கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

10. நீ சென்றுவந்த ஒரு மழைப்பகுதியைப் பற்றிக் கூறுக.




கோடிட்ட இடங்களை நிரப்புக.

இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டை ______________________ அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன.



மலையின் அடிவாரத்தில் ___________________ காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன.


மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக __________________ வந்தன.



ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் ____________________ செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது.


ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் ________________________.



அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் _____________________.



நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. _________________ சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.


நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில ______________________.


சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. ______________________, சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் சென்றன. ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தை ______________________ வந்தது.


அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் ____________________. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது.


அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் ____________________ பிரியும் நேரம் வந்தது. இறுதியாக, சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.




கோடிட்ட இடங்களை நிரப்புக.


இயற்கை அழகு நிறைந்த ஊர் கோட்டையூர். காடும் மலையும் இவ்வூரைச் சுற்றிக் கோட்டை ______________________ அமைந்திருந்ததால் இவ்வூரைக் கோட்டையூர் என்று மக்கள் அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதியில் சந்தனம், தேக்கு, மூங்கில், வாழை, பாக்கு போன்ற மரங்கள் ஏராளம் வளர்ந்திருந்தன. மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகளில் ஏலக்காய், மிளகு, மஞ்சள், இஞ்சி, போன்றவை ஏராளமாக விளைந்திருந்தன. மேலும், இப்பகுதியில் யானை, புலி, சிங்கம், கரடி, காட்டுநாய், நரி போன்றவை கூட்டங் கூட்டமாக __________________ வந்தன.


ஒருநாள் நரியின் குட்டி ஒன்று பாதை மாறிக் காட்டு வழியே சென்றது. அது ஆற்றங்கரை அருகில் ____________________ செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தது. ஆற்றங்கரையில் சிங்கம் ஒன்று தன் குட்டிகளுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது நரிக்குட்டியைச் சிங்கம் ________________________. அது பசியால் வாடியிருப்பதை எண்ணி நரிக்குட்டியின் அருகில் சென்று நரிக்குட்டிக்குப் பால் _____________________. நரிக்குட்டியும் பாலைக்குடித்து. வயிறு நிறைந்தவுடன் நரிக்குட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. _________________ சிங்கக் குட்டிகளுடன் விளையாடத்தொடங்கியது. இதனைக் கண்ட சிங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.


நரிக்குட்டியைத் தன்குட்டிபோல் சிங்கம் வளர்த்து வந்தது. ஒருநாள் நரிக்குட்டியைக் காணவில்லை. சிங்கம் மிகவும் வருந்தியது. ஆண்டுகள் சில ______________________. சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. ______________________, சிங்கத்தால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதன் குட்டிகள் மட்டும் வேட்டைக்குச் சென்றன. ஒருநாள் திடீரென்று நரிக்கூட்டம் ஒன்று சிங்கத்தை ______________________ வந்தது.


அக்கூட்டத்தில் சிங்கம் வளர்த்த நரியும் இருந்தது. சிங்கத்திற்குத் தாம் வளர்த்த நரியை அடையாளம் ____________________. நரிக்கும் சிங்கத்தை அடையாளம் தெரிந்தது. அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நரிக்கூட்டம் சிங்கத்தைத் தாக்கியது. சிங்கத்தின் ____________________ பிரியும் நேரம் வந்தது. இறுதியாக, சிங்கம் வளர்த்த நரி, சிங்கத்தைத் தாக்கியது. இதனைக் கண்டபோது சிங்கத்தின் உயிர் பிரிந்தது.



வாக்கியத்தில் கூறுக.


அழைத்தனர்
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

வளர்ந்திருந்தன
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

கூட்டங்கூட்டமாக
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

தெரியாமல்
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________
ஓய்வு
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

வாடியிருப்பதை
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________
மகிழ்ச்சி
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

காணவில்லை
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________

தெரிந்தது
__________________________________________________________________________________________________________________________
_____________________________________________________________




மேலே குறிப்பிட்டுள்ள சொற்களில் உனக்குப் பிடித்த ஐந்து சொற்களைக் கொண்டு உமது குழுவினருடன் கலந்துபேசி ஒரு சம்பவம் அல்லது கதை உருவாக்குக.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



கதையும் சிந்தனையும்


பூஞ்சோலை என்ற ஊர் மலையின் அடிப்பாகத்தில் உள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் மரம் செடி கொடிகள் அதிகம் இருக்கும். அவை பசுமை நிறத்தில் காட்சி அளிக்கும். அக்காட்சி பார்ப்பர் மனத்தை எளிதில் கவரும். அவ்வூரைச் சுற்றிப் பூக்கள் அதிகமாக இருக்கும். எனவே, பூஞ்சோலை என்று அப்பகுதி மக்கள் அவ்வூரை அழைத்தனர். அங்குள்ள மலைப்பகுதியில் விலங்குகளும் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கும்.

அங்கு வசித்த சாம்பல் நிற மயில் ஒன்றும் புள்ளி மான் குட்டி ஒன்றும் கூட்டத்தை விட்டுப் பிரிந்தன. அவை இரண்டும் சிறந்த நண்பர்களாக மாறின. அவ்வூரில் ஓராண்டு மழை பெய்யவில்லை. பறவைகளும் விலங்குகளும் இடம் மாறிச் சென்றன. ஆனால், மயிலும் மானும் பிறந்த மண்ணை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டன. அவை ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டன. மயில் உயரமான மரத்திலுள்ள இலைகளை மான்குட்டி தின்பதற்குத் தேவையான போது கொத்தித் தரும். மேலும், மயில் மரப்பொந்துகளில் உள்ள தவளைகளையும் புழுப்பூச்சிகளையும் கொத்தித் தின்னும். இவ்வாறு முயலும் கொக்கும் கஷ்ட காலத்தில் வாழ்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு மழை பெய்தது. ஊரை விட்டுச் சென்ற விலங்குகளும் பறவைகளும் மீண்டும் பூஞ்சோலைக்கு வந்து சேர்ந்தன. அவை மயிலும் மானும் உயிரோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டன. அவற்றின் உண்மையான நட்பைப் பாராட்டின. இதனை நரி ஒன்று கவனித்தது. அது மயில் மற்றும் மானின் மீது பொறாமைப்பட்டது. எனவே, நரி அவற்றைப் பிடித்துத் தின்பதற்குத் திட்டம் தீட்டியது.

முதலில் மயிலிடம் நரி பழகத்தொடங்கியது. நரி மயிலிடம் மானைப் பற்றிக் குறைகூறியது. மயில் தொடக்கத்தில் நம்ப மறுத்தது. நரி வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் மயிலிடம் முயலைப் பற்றிக் குறைகூறியது. இறுதியில் நரி மயிலிடம் அதன் தோற்றத்தைப் பற்றி மான் குறை கூறுவதாகக் கூறியது.

மயில் மெல்ல மெல்ல நம்பத் தொடங்கியது. பின்னர், மயிலுக்கு மானின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அது மான் நன்றி மறந்து விட்டதாக நினைத்தது. எனவே, மயில் மானைக் காட்டிக்கொடுக்க நினைத்தது. ஒருநாள் அது இருக்கும் செடிக்கு அருகில் பறந்து சென்று நின்றது. அதனைக் கண்ட நரி மானின் இருப்பிடத்திற்கு விரைந்து சென்றது. அது மானை தன்வாயால் கைவிப்பிடித்தது. அதோடு தன் அருகில் நின்றுகொண்டிருந்த மயிலின் கழுத்தில் மிதித்துக் கொன்றது.


1.பூஞ்சோலை என்ற பெயர் அவ்வூருக்கு ஏற்பட்டதன் காரணம் யாது?

1 அவ்வூர் பூப்போன்று இருந்ததால்
2. அவ்வூர் பசுமை நிறமாக இருந்ததால்
3. அவ்வூர் பூவைப் போல மனத்தை இழுப்பதால்
4. அவ்வூரைச் சுற்றிப் பூக்கள் இருப்பதால் ( )


2. மயிலும் மானும் ஏன் அவ்வூரை விட்டுச் செல்ல வில்லை?

1. அவ்வூரில் அவை வாழ்ந்ததால்
2. அவ்வூரில் அவை தோன்றியதால்
3. அவ்வூர் அவற்றிற்குப் பிடித்ததால்
4. அவ்வூரை அவை நேசித்ததால்


3. மானின் உணவுப் பிரச்சினையை மயில் எவ்வாறு தீர்த்தது?

1. தவளைகளைக் கொத்திக் கொடுத்தது
2. பூச்சிகளைக் கொத்திக் கொடுத்தது
3. இலைகளைக் கொத்திக் கொடுத்தது
4. மரத்தைக் கொத்திக் கொடுத்தது


4. மற்ற விலங்குகள் எதனைப் பாராட்டின?

1. மயிலின் அன்பைப் பாராட்டின
2. மானின் நட்பினைப் பாராட்டின
3. அவைகளின் உண்மையான நட்பைப் பாராட்டின
4. அவை உயிரோடு இருந்ததைப் பாராட்டின



5. மயில் மானை ஏன் காட்டிக்கொடுத்தது?


1. மான் நன்றி மறந்துவிட்டதாக நினைத்தது
2. மயில் நரியின் சொல்லை நம்ப மறுத்தது
3. மயில் நட்பின் மீது நம்பிக்கை இழந்தது
4. மயில் நரியுடன் நட்புக் கொள்ள நினைத்தது