Sunday, March 28, 2010

பயிற்சி 01 / 2010.
அகராதியின் துணைகொண்டு அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருள் கண்டு பிடித்துச் சூழல் உருவாக்குக.

இனிப்புப் பொங்கல்

இயற்கையை வணங்கும் பொங்கல்
இல்லம் செழிக்கும் பொங்கல்
கவலை நீக்கும் பொங்கல்
கருத்துப் பெருகும் பொங்கல்!

உழைத்தவர் மகிழும் பொங்கல்
ஊருக்குக் காட்டும் பொங்கல்
உவகை ஊட்டும் பொங்கல்
உள்ளொளி வளர்க்கும் பொங்கல்
!

தமிழர் போற்றும் பொங்கல்
தமிழரைக் காட்டும் பொங்கல்
மங்காமல் பொங்கும் பொங்கல்
மனமெல்லாம் இனிக்கும் பொங்கல்!

பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.

1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.

2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________

4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.

பயிற்சி 03 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக

செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்

கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.

திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.

மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.

பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________

பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.

ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.

அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.

ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.

பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.

குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் ,ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.

பயிற்சி 06 / 2010.
கீழ்கண்ட பகுதியில் குறில் நெடில் எழுத்துகள் அமைந்த சொற்களை அடையாளம் கண்டு அச்சொற்களை கோடிட்ட இடங்களில் நிரப்புக.

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) மதிக்கும் _____ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும்
(Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

___________________________ _______________________________
___________________________ ________________________________
___________________________ _________________________________

பயிற்சி 07 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மூத்தோரை (Q11) __________________ குணம் ஆகும். இக்குணத்தை முதலில் நம்மிடம் வளர்ப்பவர்கள் நம் பெற்றோர் ஆவர். நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோர் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் (Q12) __________________ கற்றுக்கொடுக்கின்றனர். அதனைப் பின்பற்றிவரும் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். பின்னர், அவர்கள் கூறும் கதைகளையோ கருத்துகளையோ மிகவும் (Q13) __________________ கேட்கிறோம். இவற்றின் மூலம் நாம் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம்.

ஒருசில குடும்பங்களில் பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பர். பிள்ளைகளில் மூத்தவர்கள் படித்தவர்களாக இருப்பர். இவர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் (Q14) __________________ இளையவர்கள் சிறந்த பண்பினை வளர்த்துக்கொள்வர். மூத்தோர்களை மதிக்கும் இப்பழக்கம் நாம் வெளி உலகிற்கு வந்தவுடன் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை நாம் (Q15) __________________ தொடங்குவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கத்தொடங்குவோம். இவற்றின் வழி நம்முடைய கல்வி அறிவு பெருகும் வாய்ப்பு ஏற்படும். நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

பயிற்சி 08 / 2010.
கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவற்றுள் ஒரு சில மிகவும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. ______________________ உணவு, உடை, இருப்பிடம் முதலியன ஆகும். இம்மூன்றும் இல்லாமல் மனிதனால் ________________________ வாழமுடியாது. ________________________ உணவு மிகவும் முக்கியத் தேவையாக அமைகிறது. உணவு இல்லாவிட்டால் உயிரினங்களால் நிச்சயமாக உயிர் வாழமுடியாது.

உணவுமுறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சைவ உணவு, மற்றொன்று அசைவ உணவு. செடி கொடி, மரங்களிலிருந்து ________________________ம் உணவைச் சைவ உணவு என்கிறோம். இவ்வகை உணவு உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. இது உடலைச் சீராக வைத்துக்கொள்ள _________________. சைவ உணவை இயற்கை உணவு என்று கூறுகிறோம்.

பயிற்சி 09 / 2010.

கோடிட்ட இடங்களை மிகப்பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

இந்த உலகில் பல இனமக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனமும் வெவ்வேறு வாழ்க்கை _________________________ அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. மக்களின் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு பண்பாட்டுக் கூறுகள் _____________________. தமிழர் பண்பாடும் பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

நமது பண்பாட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்பண்பாடு ____________________ புறப்பண்பாடு. அகப்பண்பாட்டில் குடும்ப வாழ்க்கையையும் கொடைத் தன்மையையும் _______________________. புறப்பண்பாடு என்பது வெளி உலகில் மனிதன் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களை _____________________. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்முன்னோர்கள் பின்பற்றிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் நம்மால் பின்பற்ற முடியவில்லை. ஆனால், சில முக்கியக் கூறுகளை நாம் அவசியம் பின்பற்றித்தான் நடக்கவேண்டும்.

பயிற்சி 10 / 2010.

பின்வரும் சொற்களை அவற்றின் பொருள் விளங்கும் வகையில் வாக்கியங்களில் அமைத்து எழுதுக.

Q1. ஆராய்ந்து
______________________________________________________________________________________________________

Q2. கதிகலங்கி
________________________________________________________________________________________________________

Q3. விருந்துண்ண
________________________________________________________________________________________________________

Q4. வேலைப்பாடு
________________________________________________________________________________________________________

Q5. நிரூபிக்க

______________________________________________________________________________________________________________________________________________

பயிற்சி 10 / 2010.

கீழ்க்கண்ட சொற்களை அகராதியைப் பயன்படுத்திப் பொருள் எழுதுக. அவற்றுள் உனக்குப் பிடித்த இரண்டு சொற்களைக் குறிப்பிட்டு அவை ஏன் பிடித்தன என்று சிறு குறிப்பு எழுதி அவற்றிற்கு வாக்கியங்கள் அமைக்கவும்.

கையேடு, எண்ணப்பதிவுகள், இயக்குநர், அனுப்புநர், பெறுநர், மதிப்பிற்குரிய, இல்லாமை, கொல்லாமை, உண்ணாமை,

Saturday, March 6, 2010

பயிற்சி 02 / 2010.
வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.

1. ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.

2. ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.

3. நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.

நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________

4. ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.

பயிற்சி 03 / 2010.

செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்கள்

கந்தன் பத்தகம் படித்தான்.
புத்தகம் கந்தனால் படிக்கப்பட்டது

குமரன் கடையில் துணி வாங்கினான்.
கடையில் துணி குமரனால் ______________.

திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்.

திருக்குறள் திருவள்ளுவரால் ____________________.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சிலப்பதிகாரம் என்ற புத்தகம் __________________________.

மதியழகன் சுவை மிகுந்த மதிய உணவு உண்ணுகிறான்.

சுவை மிகுந்த மதிய உணவு மதியழகனால் _______________________.

பாரி வள்ளல் துன்பப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்தான்.

துன்பப்படும் ஏழை மக்களுக்குப் பாரி வள்ளலால் ___________________________

பயிற்சி 04 / 2010.
2. அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லை எழுதுக.

ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (1) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(2) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (3) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (4) _________________ வந்தார்.

அதியமான் வேட்டையாடுவதில் (5) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (6) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (7) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (8) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (9) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.

ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (10) ___________________, அந்த நெல்லிக் கனியை ஔவையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.

பயிற்சி 05 / 2010.

அகராதியின் துணைகொண்டு சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடித்து மாறுபட்ட இரண்டு சூழல் உருவாக்கி வரவும்.

பகுதிகளாகப, குறுநில மன்னர்கள், போற்றி வந்தார், புலமை பெற்றவர் , ஆச்சரியப்பட்டார், உண்ணக் கொடுத்தார்.