Thursday, November 7, 2013

ஆழமான சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரையை எழுதிய பேராசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். படிப்பவர் நிச்சயம் பயனடைவர். 

இக்கட்டுரைநூலின் பெயர்:
இலக்கிய அணிகள்

கட்டுரை தமிழர் பண்பாட்டின் வரலாறு
கட்டுரை ஆசிரியர்: டாக்டர் சி. பாலசுப்பிரமணியம்

முன்னுரை
தீக்குழம்பாக இருந்த மண் உலகில் முதலில் குளிர்ந்த மண் தென்னிந்திய மண் ஆகும்.
மனித இனம் இங்குதான் தோன்றியிருக்கும் என்பது புவி இயல் ஆராய்ச்சியாளர் பலரின் கருத்து.
பழந்தமிழ் இலக்கியங்கள் குமரிமலை, பஃறுளியாறு முதலியன இருந்து கடல்கோளால் அழிந்தன என்று குறிப்பிடுகின்றன. மிகவும் பழமையான தமிழின மக்கள் படிப்படியாக வாழ்வில் சிறப்படைந்தனர். தமிழர்களுக்கென்று தனிப்பண்பாடு வளர்ந்தது.
பண்பாடு என்ற சொல், பண் + பாடு என்று அமையும். இதன்பொருள் ஒழுக்கம் அல்லது உயர்ந்த வழிச் செல்லுதல் ஆகும். பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல், பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்பனபோன்ற பாடல் வரிகள் இதனை உணர்த்துகின்றன.

அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும்  
தமிழரின் வாழ்வின் இரண்டு பிரிவுகள். இன்றும் பொருத்துகின்றன.
அக வாழ்க்கை
அகம் என்படுவது ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த அழகு, ஒத்த செல்வம், உடைய தலைவனும் தலைவியும் நடத்துகின்ற வாழ்க்கை இன்பம்.
இது பிறருக்குக் கூறப்படாத ஒன்றாகும்.
குடும்பவாழ்வைச் சார்ந்தது. குடும்பத்தலைவிக்கு முக்கிய இடம்.
திருவள்ளுவர் மங்கலம் என்ப மனை மாட்சி என்று கூறுகிறார்.
கணவன் மகிழும் வண்ணம் உணவு சமைத்தல், விருந்தினரைப் போற்றுதல். மனைவி, பண்பு நிறைந்தவள், இவ்வாழ்க்கை முறையில் ஆண்கள் கடமை மிகுந்தவர்களாகவும், இல்லறத்தலைவி கணவனே உயிராகக்கொண்டிருப்பவளாகவும் விளங்குகிறாள்.

புறவாழ்க்கை முறை
வாழ்வின் பிற கூறுகளை உணர்த்துவது புறவாழ்க்கை முறை. வீரம் கொடை போன்ற பண்புக்கூறுகள் இதனுள் அடங்கும்.
அறநெறிக்கு முக்கிய இடம்
நீதியும் நேர்மையும் நிறைந்த மன்னனை மக்கள் தெய்வமாகப்போற்றி இறை என்று அழைத்தனர்
மன்னனே மக்களின் தெய்வமாக இருந்தான்.
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும் - குறள்
தீமை செய்தவர் அறத்தின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.
பகை நாட்டின் மீது படை எடுக்கும் முன்னர் போர் நெறிமுறையைப் போற்றினான்.

நாட்டுக்காக உயிரைக்கொடுக்கும் மக்கள் போரின் வெற்றியின் மூலம் கிடைத்த பொருள்களைப் பாணர், கூத்தர்,  விறலியர் பெறுதல்

பழந்தமிழகத்தில் இருந்த நீதி முறை

நாட்டுப் புறங்களில் தனித்தனி நீதி மன்றங்கள் இருந்தன.

ஊர்ப் பெருமக்கள் ஊரின் நலனைக் கருதிப் பொதுக்கடமைகளைச் செய்தனர்
மன்றங்களில் வைத்து ஊர்வழக்குகள் விசாரிக்கப்படன.

நகரத்திற்கு அறங்கூறு அவையம் என்று அழைக்கபடும் நீதி மன்றங்கள் இருந்தன.

நாடுமுழுவதும் உள்ள அறங்கூறும் அவையத்தின் நடுநிலைமை உணர்வைப் பாதுகாப்பது அரசனின் கடமை

பத்திரங்களைப் பனை ஓலை, செப்பேடுகள் போன்றவற்றில் எழுதிப் பதிவு செய்தனர்

பெருஞ்சுவர்களின் கற்களில் சில ஆவணங்களைப் பொறித்திருந்தனர். ஆவணங்களைப் பதிவு செய்து காக்கும் நிலையம் ஆவணக் களரி ஆகும்.
வணிகம்

உள்நாட்டு, வெளிநாட்டு வணிக முறை பின்பற்றப்படுதல்
வணிகத்துறை நெறியும் நேர்மையும் நிறைந்திருந்தது

களவு, வஞ்சம் இடம்பெறவில்லை

வணிகர்கள் நடு நிலை உள்ளவர்களாகவும் பழிக்கு அஞ்சுபவர்களாகவும் இருந்தனர்

வணிகர், தம் பொருளையும் மற்றவர்கள் பொருளையும் சமமாகக் கருதுதல்

மற்றவர்களிடமிருந்து அதிகமாக வாங்காமலும் மற்றவர்களுக்குக் குறைவாகக் கொடுக்காமலும் வணிகர் இருத்தல்

`` நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
....
பல் பண்டம் பகர்ந்து வீசும்
``
என்ற பட்டினப்பாலை வரியின் மூலம் அறியலாம். 

தமிழ்நாட்டின் கடற்கரைப் பட்டினங்கள் உலக வியாபாரச்  சந்தையில் சிறப்பிடம் பெற்றிருந்தன. 

தமிழர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர்.

கடல் என்ற சொல்லைக்குறிக்க ஆழி, புணரி, முந்நீர் போன்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் இருந்தன

சேரநாட்டுத் தேக்குமரங்கள் வெளிநாட்டுக்கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யானை, அகில், சந்தனம், முத்து முதலியன எகிப்து சிரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன.

அரிசி கிரேக்கமொழியில் ரைஸ் என்று அழைக்கப்பட்டது. முத்து வடமொழியில் முத்தா என்று அழைக்கப்பட்டது.

முத்து, மிளகு, அரிசி, மயில், யானைத்தந்தம், பருத்தி ஆடை முதலியன வெளிநாடுகளுக்கு இறக்குமதி ஆகின.

மதுவகை, கருப்பூரம், மணநீர் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன

காவிரிப் பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி அக்காலத்தில் சிறந்த பட்டனங்களாக இருந்தன

ஓடம், பரி, பரிசல், கப்பல், கலன், வங்கம், நாவாய், தோணி, திமில், அம்பி போன்ற பெயர்ச்சொற்கள் இருந்தன

பண்டமாற்றும் நாணயமாற்றும் இருந்தன

உரோமர், கிரேக்கர், அராபியர், தமிழ்நாட்டுக் கடற்கரைப் பட்டினத்தில் தங்கி வியாபாரம் செய்தனர்

தமிழ்நாட்டு முத்தை உரோம நாட்டுப் பெண்கள் மிகவும் விரும்பினர். உலோலா என்னும் உரோமநாட்டு அரசி மூன்று லட்சம் தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணிந்திருந்தார். உரோம நாட்டுப் பொருளாதாரமே இத்தகைய பொருள்களை வாங்கியதால் பாதிப்படைந்தது என்ற குறிப்பு பெரிப்பிளஸ் குறிப்பிடுகின்றது. இந்தியப் பொருள்களை ஆண்டொன்றுக்கு மிலியன் பவுனுக்கு ஈடான பொன்னை வாரி வழங்கி வறுமையுற்றதாக உரோம நாட்டு வரலாற்று ஆசிரியர் பிளினி கூறுகிறார்.


தொழில் வளம்

உழவும் நெசவும் முக்கிய இடம்.

பாலாவி போன்றும் மூங்கில் மேல்தோல் போன்றும் மென்மையான ஆடையைத் தமிழர் நெய்தனர்.

பட்டு, எலியின் மயிர் போன்றவற்றால் ஆடை நெய்தல்

வெட்டுவதை வேட்டி என்றனர், வேட்டியைக் குறைப்பதை கூறை என்றும் துண்டு போடுவது துண்டும் என்று கூறினர்

நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன்களை அணிந்தனர்

பொன் அணிகளில் மணிகளைப் பதிக்கும் வித்தையைக் கற்றிருந்தனர்

பழந்தமிழகத்தின் தொழிற்பாகுபாடு

பழங்காலத்தில் தமிழர்களிடையே செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்துப் பிரிவுகள் பல இருந்தன.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
என்பது வள்ளுவர் வாக்கு.

தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குத் தாமே முயன்று பொருள்தேடுவது குடும்ப வழக்காக இருந்தது

உழைத்துப் பிழைக்க முடியாதவர்களுக்கும், வாழ வழிதெரியாதவர்களுக்கும் உணவு போன்றவை தந்து சமுதாயம் உதவியது.

குருடர், செவிடர், முடவர், நோயாளிகள் வயது முதியவர்கள் போன்றோர் தங்கி வாழ்வதற்கு ஒதுக்கிடம் இருந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த இடத்தை உலக அறவி என்று மணிமேகலை என்ற நூல் குறிப்பிடுகிறது.


பழந்தமிழகத்தில் கல்வியின் நிலை

பழந்தமிழர்கள் கல்வியைக் கண்ணாகப் போற்றிவந்தனர்

ஆண் பெண் என்ற இருபாலரும் கற்றுத் தெளிந்தனர்

சங்ககாலத்தில் ஔவையார், ஆதிமந்தியார், காவற்பெண்டு, வெள்ளிவீதியார் காக்கை பாடினியார், நன்முல்லையார் போன்ற புலவர்கள் இருந்தனர்

ஔவையார் பொறுப்புமிகுந்த தூதுப்பணி ஆற்றியுள்ளார்

மதுரை, காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் பெரிய கல்வி நிலையங்கள் இருந்தன

உடம்புவேறு, உயிர்வேறு எனப்பிரித்தறியும் மெய்யறிவு பற்றிய உண்மையைப்  பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர்

தொல்காப்பியத்தில் எழுத்துகளை இம்முறையில் பாகுபாடு செய்துள்ளதன் மூலம் இதனை நன்கு அறியலாம்.

தமிழர்களின் மருத்துவம் பற்றிய செய்தி

பழங்காலத்தமிழர்கள் மருத்துவத்தில் மிகச்சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.

திருவள்ளுவர் மருந்து என்ற பெயரில் தனி அதிகாரம் ஒன்றை எழுதியுள்ளார்

மருத்துவர் தாமோதரனார் என்ற புலவர் சங்ககாலத்திலே இருந்துள்ளார்

பழங்காலத்தமிழர்கள் தங்களின் ஆய்வின் மூலம் பல மூலிகைகளைக் கண்டு பிடித்துள்ளனர். ஒருசில மருந்துச்செடியின் வேர், தண்டு, இலை, பூ. காய், விதை முதலியவற்றின் குணங்கள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.

மருத்துவ வல்லுநர்களாகச் சித்தர்கள் இருந்துள்ளனர்

தமிழர்களின் கலைகள் பற்றிய செய்தி

பழங்காலத்தில் தமிழர்கள் கலையில் நல்ல ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர்
கலைகளைப் போற்றி வளர்த்தனர். அவற்றின் நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்தனர்

முத்து, பவளம், மாணிக்கம் போன்ற மணிகளைப் பற்றிய செய்திகளை நன்கு அறிந்திருந்தனர்

திருடர்களின் தந்திரத்தை அறியும் நூல்கள் இருந்தன. காவலர்கள் கரவடநூல் கற்றறிந்தனர்

யானை மற்றும் குதிரையைப் பற்றிய செய்தியை அறிந்திருந்தனர். அவற்றைப் போரில் பயன்படுத்தினர். யானை, குதிரை பற்றிய செய்தியை அறிந்துகொள்வதற்கு நூல்கள் இருந்தன.

பாம்புகளின் நஞ்சை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்

நாள்களின் பாகுபாட்டை அறிவதற்கு நாழிகை வட்டில் என்ற நூல் இருந்தது. பொது மக்களுக்கு நாழிகையைப் பற்றிய செய்தியைத் தெரிவிப்பவர் பெயர் நாழிகைக் கணக்கர் ஆவார்.

பலவகை விளையாட்டுக்களைப் பற்றிய செய்தியைப் பழங்காலத்தமிழர் அறிந்திருந்தனர்

சிறுவருக்கென்று சிறுதேர் உருட்டல், சிறுபறை முழக்கல் போன்ற விளையாட்டுகள் இருந்தன

சிறுமியருக்குச் சிறுவீடுகட்டுதல், மணற்சோறு சமைத்தல் போன்ற விளையாட்டுகள் இருந்தன

ஆண்கள் யானையேற்றம், குதிரையேற்றம், மற்போர், சிலம்புப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டனர்

இசைக்கலையில் ஈடுபாடு

இசையும் நடனமும் தமிழர்களிடம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன

இவற்றில் ஈடுபாடு கொண்டவர்களைப் பாணர், கூத்தர் என்று அழைத்தனர். இவர்களுக்கு உரிய மரியாதையை அரசரும் மக்களும் அளித்ததோடு பொன்னும் பொருளும் தந்து உதவினர்

யாழ் என்ற இசைக்கருவி செல்வாக்குப் பெற்றிருந்தது

தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள் என்ற நான்குவகை இசைக்கருவிகள் இருந்தன

தமிழர் வாழ்வில் ஆடலும் பாடலும் இணைந்திருந்தன.

நில அமைப்பும் மக்கள் வாழ்வும்

இவற்றைப் பற்றிய செய்தியைத் தொல்காப்பியத்தில் அறியலாம்

நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது

ஒவ்வொரு வகை நிலத்திற்கும் தனித்தனியாக யாழும் பறையும் இருந்துள்ளன

ஓவியக்கலை முக்கிய இடத்தில் இருந்துள்ளது, ஆடைகளிலும் பொருள்களிலும் ஓவியம் வரைந்திருந்தனர்

திருப்பரங்குன்றத்தின் கோவில் சுவரில் சிறந்த ஓவியங்களை வரைந்திருந்தனர்

சிலப்பதிகாரத்தின் மூலம் நாடகக்கலையில் தமிழர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை அறியலாம்

நாடகத் திரைகளை ஒருமுக எழனி, பொருமுக எழனி, கரந்து வரல் எழினி என்று பிரித்தனர் இவற்றைப் பற்றிய செய்திகளைச் சிலப்பதிகாரத்தில் அறியலாம்.

தமிழர்களின் கட்டடக்கலை பற்றிய செய்திகள்

தெருக்கள், வீடுகள், நகரம் போன்றவற்றின் அமைப்புத் தெளிவாக இருந்தன. 

மதுரை மாநகரில் நீண்ட மதில்கள் இருந்தன, மதில்களைச் சுற்றியும் பெரிய அகழிகள் வெட்டப்பட்டிருந்தன. அகழிகளில் உள்ள நீரில் பெரிய முதலைகள் இருந்தன

மதில்களின் மேல் மக்களைக் காக்கும் எந்திரங்கள் பல தயார் நிலையில் இருந்தன

ஆற்றைப்போல் அகன்ற தெருக்கள் இருந்தன, நகரங்களில் பூங்காக்கள் இருந்தன

பலமாடிக்கட்டடங்கள் பல மதுரையில் இருந்தன

சன்னல்கள் கட்டடங்களில் இடம்பெற்றிருந்தன

சாக்கடை நிலத்தின் அடியில் சென்றது, அது கண்ணுக்குத் தெரியாது.

பூங்காக்களில் வேண்டிய அளவு தண்ணீர் பாய்ச்சும் எந்திரவாவிகள் இருந்தன

பல்லவர்காலத்தில் மலைக்குகைகளை அமைத்துச் சிற்பங்கள் செதுக்கினர், சிற்பக்கலை சோழர், பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் வளர்ந்தது

(எடு) தஞ்சைப் பெரியகோவில், மதுரையில் உள்ள ஆயிரம் கால் மண்டபங்கள்

சமயம் பற்றிய செய்திகள்

சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன. அவற்றில் சிவன், திருமால், கொற்றவை முதலிய தெய்வங்கள் இடம்பெற்றிருந்தன

சமண மதமும் பௌத்த மதமும் இருந்தன

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மத வழிபாடு இருந்தது

சமய விழாக்களில் இசையும் கூத்தும் இடம்பெற்றிருந்தன

முடிவுரை

தமிழர்களின் பண்பாடு பழம்பெருமை வாய்ந்தது. குடும்ப வாழ்வில் தொடங்கிப் பொது வாழ்வில் மலர்ந்தது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு.

பண்பாளர்கள் பலர் வாழ்வதாலேயே இவ்வுலகம் வாழ்கிறது, வளர்கிறது என்ற வள்ளுவர் கூற்றுக்கு இலக்கணமாகத் தமிழர்கள் வாழ்ந்தனர், பலர் இன்று வாழ்ந்து வருகின்றனர்.







Tuesday, September 10, 2013

கதைத் திறனாய்வு 


‘’கருப்பு வெள்ளை’’ என்னும் தலைப்பிலான கதையைப் படித்து திறனாய்வுக் கண்ணோட்டத்தில் கதைக்கரு, நிகழ்ச்சிப் பின்னல், பாத்திரப்படைப்பு, மொழி நயம், ஆசிரியர் சொல்லவிழையும் கருத்து முதலானவற்றை விளக்கி எழுதுக.



இவ்வுலகம் மிகப்பெரியது, மனிதனின் சிந்தையும் விரிந்துகொண்டே வருகிறது.  விரிந்த சிந்தனையில் உள்ள நல்ல பல கருத்துகளைக் காலங்காலமாக மனித இனம் பாதுகாத்துவருவதை நாம் காணலாம். அவை கருத்துப்பெட்டகங்களாக விளங்குகின்றன. அந்தப் பெட்டகங்களுள் ஒன்று கதை. கதை படிப்பதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். படிக்கும் கதையிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை நாம் பெற்றுக்கொள்கிறோம். நமக்குத் தேவையான கருத்துகளை வழங்கும் கதைகளுள் ஒன்றாக இருப்பது  ____________________________ என்ற கதை ஆகும். இக்கதையைத் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதை இப்படைப்பின் நோக்கம் ஆகும்.

கதைக் கரு

சிறுகதை, நாடகம், கவிதை கட்டுரை போன்ற அனைத்திற்கும் கரு மிகவும் முக்கியமானதாகும். கரு இல்லாமல் எழுதும் கதை காலவெள்ளத்தில் அழிந்துபோகும், அது மக்கள் மனத்தில் நிலைத்த இடத்தைப் பெறாது. எனவே கதை எழுதும் ஆசிரியர்கள் கருவை முன்கூட்டியே யோசித்து வைத்துக்கொள்வது ஒரு வழக்கம் ஆகும்.

‘’கருப்பு வெள்ளை’’ என்ற இக்கதை, ‘’மனிதனுக்குப் புறத்தோற்றம் முக்கிய இல்லை. அது கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி உண்மையான அழகு அகத்தில்தான் இருக்கிறது. எனவே, அகத்தைத் தூய்மை நிறைந்ததாக வைத்துக்கொள்வது நமது கடமை’’ என்ற அடிப்படையில் கதை ஆசிரியர் கருவை அமைத்துள்ளார். 







நிகழ்ச்சிப் பின்னல்

நிகழ்ச்சிப்பின்னல் என்பது தனித்தனியே நடைபெறும் கதை நிகழ்ச்சிகளை ஒன்றிணைப்பது ஆகும். கதையின் ஓட்டத்தைப் பின்னிச் செல்வது நிகழ்ச்சி பின்னல் ஆகும். நிகழ்ச்சிப்பின்னல் ஒரு கதையில் சிறப்பாக அமையாவிட்டால் படிக்கும் வாசகர்களிடையே குழப்பம் ஏற்படும்.

இக்கதையில் பன்னிரண்டு வயது ரோஷிணி பள்ளி முடிந்து வீடுதிரும்புகிறான். அவள் கோபமாகக்காணப்பட்டாள். ஏனென்றால் தம் வகுப்புத்  தோழன் முகிலும், தினகரனும் அவளது கருப்பு நிறத்தைக் கேலி செய்ததாகக்கூறினாள். அவள் அவளுடைய தாயர் அவள் வயற்றுக்குள் இருக்கும்போது குங்குமப்பூ சாப்பிடாததைக் காரணம் கூறுகிறாள். அவளுடைய அம்மா சிவப்பாக இருக்கிறாள். எனவே, தந்தையும் தாத்தாவுமே அவளுடைய நிறத்திற்குக் காரணம் என்று நினைக்கிறாள். இதனால், அவர்களை வெறுத்து ஒதுக்குகிறாள். இறுதியில் வேலைக்காரி கூறிய கருத்துகளில் உள்ள உண்மையை உணர்ந்துகொள்கிறாள்  ரோஷினி.  

பாத்திரப்படைப்பு

ராஷிணி

பள்ளியில் படிக்கும் சிறுமி, அறியாமை நிறைந்தவள். மற்றவர்களின் கேலிப்பேச்சுக்கு அஞ்சுபவள். முறைப்படி ஒரு பிரச்சினையைப் பற்றிக் கூறும்போது புரிந்துகொள்ளும் பண்புடையவள், நிறத்தைவிட ஒரு மனிதனுக்குப் பண்பு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தவள். இவளது படைப்பிலிருந்து ஆசிரியர் அறிவுக்கு முதலிடம் கொடுக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.











மொழி நயம்

ஒரு கதையின் வெற்றிக்குக் காரணமாக அமைபனவற்றுள் ஒன்று அதில் அமைந்துள்ள மொழி நயம். இக்கதையில் வாசகர்களை எளிதில் கவரும் வண்ணம் எளிய சொற்களைக் கதை ஆசிரியர் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக










ஆசிரியர் சொல்லவிளையும் கருத்து

இவ்வுலகத்தில் ஒருசிலர் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அது முற்றிலும் தவறான போக்காகும். உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களே, அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்ப நிறம் அமைகிறது. ஆனால், ஒருவரிடம் அமைந்துள்ள அறிவும் பண்பாடும் அவருடைய சூழ்நிலையைப் பொருத்து அமைகிறது. சிறந்த அறிவாளிகளை இவ்வுலம் என்றும் போற்றி வருகிறது. 

அறிவுதான் இவ்வுலகில் முதலிடம் பெறுகிறது. எனவே, நாம் நம்முடைய நிறத்தை நினைத்து வருத்தப்படாமல், அறிவுக்கு முதலிடம் கொடுத்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். அறிவு நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.  இதைத்தான் திருவள்ளுவரும் அறிவு அற்றம் காக்கும் கருவி என்று குறிப்பிடுகிறார். மற்றவர்கள் தோற்றத்தைப் பார்த்துக்கூறும் கருத்துகளை நம்மைப் பாதிக்கலாம். ஆனால் நமது முகத்தோற்றத்தைவிட அகத்தோற்றம் எப்படி இருக்கிறது என்பதுதான் மிகமுக்கியம் என்ற கருத்தையும் ஆசிரியர் வாசகர்களுக்குக் கூறுகிறார்.



எடுத்துக்காட்டுகள்









முதலிய

இப்பகுதியில் சொல்லவேண்டிய கருத்துகள் வாசகர்களிடம் இருக்குமானால் தொகுத்துச் சொல்லலாம்









முடிவுரை

இக்கதை ஆசிரியர் இச்சமூகத்திற்குச் சொல்லவேண்டிய கருத்துகளைச் சுருக்கமாகச் சொல்லியுள்ளார். உலகில் பல பிரச்சினைகள் நிறத்தை வைத்தே நடக்கின்றன. நிறவேறுபாடு பார்ப்பதைத் தவிர்த்தால் உலகம் இன்னும் சிறப்பாக அமையும். எனவே, கதை ஆசிரியர் கூறும் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மாணவப் பருவத்திலேயே இக்கருத்தினை ஊட்டவேண்டும். இனிய எளிய சிறந்த ஒட்டத்தை உடைய இக்கதை மக்கள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.



சிறந்த கதையை எழுதிய கதை ஆசிரியருக்கு நன்றி உரித்தாகுக.