Thursday, September 7, 2023

 


கவிதை - கூடியகம் மகிழ


சின்ன சின்ன பறவை

சிறகை விரிக்கும் பறவை

வண்ண வண்ண பறவை

வடிவம் மின்னும் பறவை


வட்டமிட்ட மிட்டுப் பறக்குதே 

வாழ நினைத்துப் பறக்குதே

காலால் பிடித்துப் பறக்குதே

காட்டில் போய் நிற்குதே!


துள்ளித் துள்ளிப் பறக்குதே

துயரம் மறந்து பறக்குதே

தன்னை மறந்து பறக்குதே

தன்வாழ்வு சிறக்கப் பறக்குதே!


அங்கும் இங்கும் பறக்குதே

அழகாய் விரித்துப் பறக்குதே

அலகால் கொத்தி எடுக்குமே

அளவாய் உண்டு மகிழுமே!


குஞ்சை நினைத்துப் பறக்குதே

கூட்டை நோக்கிப் பறக்குதே

கூடியகம் மகிழப்  பறக்குதே  

கொள்ளை இல்லா இன்பத்தாலே!

                                                 - சிகுரு

Thursday, August 24, 2023

 

அலுவலக மின்னஞ்சல்

ஒரு பிரிவு 

பாராட்டு மின்னஞ்சல்


எழுதுபவர் பற்றிய விவரம் 

கடிதம் எழுதுவதன் நோக்கம்

பாராட்டுக்குப் பொருத்தமான தகவல்களை அளித்தல்

எடுத்துக்காட்டு

சாதனைசெய்த மேதைகள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், குடும்ப வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள்,  நடுவு நிலைதவறாத தீர்ப்பு வழங்குபவர்கள், ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்கள், அன்பான குணம் படைத்தவர்கள், சிறந்த பண்பு நிறைந்தவர்கள், 

இயற்கைப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணத்தால் பாராட்டுதல், ஏழை நாடுகளுக்கு உதவி செய்ததால் பாராட்டுதல், முற்போக்குச் சிந்தனை வளர்ச்சி உடையவராக இருந்தால் பாராட்டுதல்

உழைப்பால் உயர்ந்த நல்வழிகாட்டியைப் பாராட்டுதல், அறிவியல் சிந்தனையாளர்களைப் பாராட்டுதல், பாராட்டும் வண்ணம் சிறப்புப் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரைப் பாராட்டுதல், இலக்கியச் சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் பாராட்டுதல், நல்வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்.


Tuesday, August 15, 2023

 

ஒலிப்பதிவு செய்யவும்

ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் வசித்தன. அவை இரண்டும் நன்றாகப் பழகும் குணமுடையவை. எப்போதும் மற்ற விலங்குகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்ளும். ஆனால், நாள்தோறும் பசிக்கும்போது தனக்குப் பிடித்த விலங்குகளை மட்டும் கொன்று தங்களுடைய பசியைப் போக்கிக்கொள்ளும்.


அதனால், மற்ற விலங்குகளுக்குச் சிங்கங்களைப் பிடிக்காது. அவை சிங்கத்தைப் பார்த்தாலே ஒழிந்துகொள்ளும். இந்தச் செயல் சிங்கங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அவை பசி இல்லாமல் இருந்தால் மற்ற விலங்குகளைக் கொல்லும் நிலை ஏற்படாது. அந்த இனமும் அழியாது என்று நினைத்தது. அதனால், அவ்வப்போது அவை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.  ஆனால், இயற்கை விலங்குகளைக் கொன்று தின்னும் பழக்கத்தை விலங்குகளுக்குக் கொடுத்ததன் ரகசியத்தை அவை புரிந்துகொள்ளவில்லை. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் அவை மகிழ்ச்சியுடன் வாழும்.  

சிகுரு

Monday, August 14, 2023

  பிழை நீக்கம்  

விலக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கறுத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாக புரியவில்லை என்றாலும் அதனை வக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுறுக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெலிவாகப் புரிந்துகொள்ளும் வன்னம்  இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாரும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் செல்லாகவும் கொள்ளலாம்.


பிழை நீக்கம் 

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கறுத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்கு  சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன்  பொருல் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பல்லமாக இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்கு காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமைநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 


 வாக்கியம் (சொற்றொடர்) 

விளக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கருத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாகப் புரியவில்லை என்றாலும் அதனை வாக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாறும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் சொல்லாகவும் கொள்ளலாம்.


கருத்துமாறா வாக்கியங்கள்

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கருத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன் பொருள் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பள்ளம் இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்குக் காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 



 

பிழை நீக்கம்


கோபாலும் அவனுடைய நண்பர்களும் காடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றனர். அவர்களைக் கண்ட கடைக்காரர் வருக வருக என்று கூறினார். இதைக் கேட்ட கோபாலுக்கு ஆச்சரியமாக இருந்தன. அவனுடைய நண்பர்களுக்குப் புதுமையா இல்லை. அதனால், அவர்கள் அக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அனுபவம் உடையவர்கள். கடைக்காரர் இப்படித்தான் பேசுவார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவிட்டு விட்டிற்குத் திரும்பிச் சென்றனர். 

அவர் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். பின்னர், வீட்டிற்குச் சென்றனர். அவர்களை கண்டவுடன் கோபாலன் அம்மாவுக்கு வறுத்தம் ஏற்பட்டது. அதனால், அவர் மதிய உணவு தயாரிக்க வேண்டிய நிலையில் இருந்தார். மதிய உணவு உன்பதற்கு நேரம் அதிகம் ஆகிவிடும் என்று நினைத்தார்.  ஆனால், அவர் வேகமாகச் சமைத்து உறிய நேரத்தில் அனைவருக்கும் விருந்தளித்தார். வீட்டிற்கு வந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். 


Thursday, August 3, 2023

 

சிறு கதை - புத்துணர்ச்சி


அதற்குக் கோபி, `அது ஒன்றும் இல்லை அம்மா, இன்று பள்ளிக்கூடம் போவதற்குச் சலிப்பாக இருக்கிறது. மனம் சோர்ந்துவிட்டது. சில நேரங்களில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியமாட்டங்கு. அதை மீண்டும் படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது. தேர்வும் வரப்போவதாக ஆசிரியர் சொன்னார் அதுதாம்மா நினைத்தாலே பயமாக இருக்கிறது`

இதற்கெல்லாம் சோர்வாகிவிடாதே இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் வரும் நாம் அவற்றை எல்லாம் சமாளித்துப் பழகிக்கொள்ளவேண்டும். எப்போதும் பிரச்சினையைப் பார்த்துப் பயப்படக்கூடாது. அதை எப்படிச் சரி செய்வது என்பதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் கோபி. நீ பள்ளிக்கூடம் போய்வா. நானும் அப்பாவும் இன்று இரவு உன்னிடம் சில யோசனைகளைச் சொல்கிறோம். எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார் அம்மா. 

கோபியின் மனத்தில் சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பலவீனமான மனம் பதட்டமில்லாமல் இருந்தது. அம்மா சொல்லிய ஆறுதல் கருத்துகளைப் பற்றி யோசித்துக்கொண்டே கோபி சாலையின் ஓரத்தில் நடந்து சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த அவனுடைய மாமாவைச் சந்தித்தான். அவனுடைய மாமாவும் கோபியைப் பார்க்க அவனுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னார். 


மாமாவைக் கண்டதும் கோபிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. மனக்கவலை காற்றில் பறந்துசெல்லும் இலையைப்போல் பறந்து சென்றது. அன்று முழுவதும் கோபி வகுப்பறையில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. 

பள்ளிமுடிந்து தன்னுடைய நண்பன் அரவிந்தனுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரவிந்தன் கோபியின் படிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றான். அரவிந்தன் படிக்கும் முறையைப் பற்றிக் கோபியிடம் சொல்லிக்கொண்டே சென்றேன். அவன் சொல்லிய கருத்துகளை எல்லாம் ஆழமாகப் புரிந்துகொண்டான் கோபி. 

கோபியை எதிர்பார்த்து வீட்டினர் காத்திருந்தனர். கோபி மகிழ்ச்சியுடன் வந்ததை நினைத்து பெற்றோர்களும் அவனுடைய மாமாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு நேரம் அனைவரும் அமர்ந்து கோபிக்குப் படிக்கும் முறை பற்றி எடுத்துக்கூறினர். கோபியின் மனத்தில் இருந்த சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைத்தது. மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றான் கோபி.