Wednesday, July 24, 2013

கவிதை நயம் முக்கியக்கூறுகள்


வரிசை
எழுதவேண்டிய செய்திகள்
1
கருத்துகள்
2
கருத்து நயம்
3
சொல்லாட்சி
4
முதலியன





சிறுகதை - (கதை - திறனாய்வுக் கண்ணோட்டம்)

வரிசை
எழுதவேண்டிய செய்திகள்
1
கதைக்கரு
2
நிகழ்ச்சி பின்னல்
3
பாத்திரப்படைப்பு
4
மொழி நயம்
5
ஆசிரியர் சொல்லவிழையும் கருத்து
6
முதலியன


கோகிலா என்ன செய்துவிட்டாள்? துணைப்பாத்திரங்கள்


1. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள் கதை ஓட்டத்திற்கு எவ்வாறெல்லாம் உதவுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் விளக்குக.

இடம்பெற்றுள்ள துணைப்பாத்திரங்கள்
1 `அவன்
2 அலுவலகத்தில் கடிதம் கொண்டுவரும் வேலையாள்
3 முதலாளி
4 இரண்டு கூலித்தொழிலாளிகள் - சண்டைபோட்டுக்கொள்ளுதல்
5 உணவுவிடுதி வெயிட்டர்
6 வீட்டுக்கார அம்மா
7 வீட்டுக்கார அம்மாவின் கணவர்
8 வீட்டுக்கார அம்மாவின் மகள்
9 ஸ்டேசன் மாஸ்டர்
10 கோகிலாவின் பெற்றோர்
11 அனந்தராமனின் அம்மா - பழம்பெருமை வாய்ந்த கலைப்பொருள்களைப் பாதுகாத்து
   வைத்திருத்தல்
12 அலுவலகத்தில் கோகிலாவுடன் பணியாற்றிய பணியாட்கள் (வரவேற்பாளர்கள்)


மதிப்பீடுகள் - கையெழுத்துப்படிகளில் உள்ளவை.

`மதிப்பீடுகள்' என்னும் சிறுகதையில் கார்த்திகேயன் தன் நண்பனிடம் கொடுத்த கையெழுத்துப்படிகளில் காணப்பட்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

1 நாட்டுக்கு ஆபத்தானவர்கள் இல்லை என்பதை அறிந்த பின்னரே விடுதலை செய்தல்
2 கொடுமையான கைதிகளை அந்தக் காலத்தில் அந்தமான் எனப்படும் தீவுக்கு
அனுப்புதல்
3 சிவகாமசுந்தரரும் அவருடைய வங்காளி நண்பன் லத்தீப்பும் புக்கிட்தீமா மலைப்
  பக்கம் புதுவாழ்வு தேடினர்
4 கடும் உழைப்பு, காட்டை அழித்துக் காய்கறிகளைப் பயிரிடுதல்
5 மக்களின் பார்வை - கேவலமாகப் பார்த்தல், நடத்துதல், ஒதுக்கிவைத்தல்– ஊர்
   உருவாகக் காரணமாக இருத்தல்
6 `கிள்ளிங் கிள்ளிங்' என்று அழைத்தல்–மலாயர்களும் சீனர்களும் இந்தியாவில்
  இருந்துவந்த அத்தனைபேரையும்,`கிள்ளிங் கிள்ளிங் என்று அழைத்தல்
7 சொந்த ஊர்க்காரனும் கொடிய கைதிகளாக நினைத்து ஒதுங்குதல்
8 மற்றவர்கள் இந்தியர்கள் எல்லோரையும்,`கிள்ளிங்' என்று அழைத்தல்
9 லத்தீப் குடும்பஸ்தன் ஆகிவிட்டான், பணக்காரனும் ஆகிவிட்டான் - மலாய்ப்
பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்
10 கவிதைகளிலும் கனவுகளிலும் மயக்கம் கொண்ட சிவகாமசுந்தரர் பணக்காரராகவும்
   ஆகமுடியவில்லை, ஓர் இந்தியப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளவும்
   முடியவில்லை.
11 மதத்தின் முன் `கிள்ளிங் என்று அழைப்பது லத்தீப் வாழ்க்கையில் மறைந்துவிட்டது
12 குற்றக்கைதி என்னும் அடையாளத்தைத் தூக்கி எறிதல்
13 மதமும் இனமும் சிவகாமசுந்தரருக்கு நல்வழி காட்டவில்லை, அவர் மலாக்காச் செட்டிப் பெண்ணைத் திருமணம் செய்தல்
14 `துபாஸ்', சதாசிவப்பண்டிதரோடும், சிங்கை நேசன் ஆசிரியர் மகதூம் சாயுபோடும்
   சிவகாமசுந்தரருக்குப் பழக்கம் ஏற்படுதல் அவர்களிடமும் சிவகாம சுந்தரர் அவர்
ஒரு பிரிட்டிஷ் குற்றக்கைதி என்ற விசயத்தைச் சொல்லவில்லை. நான் சொல்லி
ஒருவேளை அவர்களும் மற்றவர்களைப்போல் என்னைப் பார்க்கத் தொடங்கிவிட்டால்...


ஆறுசெல்வம் - சுருக்கம்

1. ஆறு செல்வங்களுள்,`அறிவுச் செல்வமே' சிறந்தது என்பதை டாக்டர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின்,`அறிவுச் செல்வம்' என்னும் கட்டுரையின் துணைகொண்டு விளக்குக.

1 அறிவே செல்வம்
2அறிவுச் செல்வத்தைப் பெற்றுவிட்டால் அனைத்துச் செல்வமும் வந்துசேரும்
3 அறிவுச் செல்வம் தன்னைக் காப்பதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காக்கும்
4 அறிவுச்செல்வம் காலத்தால் அழியாது
5 மனம் மயங்கும் அறிவு மயங்காது
6 அறிவு கலங்காது (மனம் வாய்க்காலில் ஓடும் நீர், அறிவு அதன் இருகரை)
7 ஒரு கருத்தைப் பகுத்துப் பார்க்கும் ஆற்றல் அறிவுக்கு உண்டு
8 அனைவரையும் நண்பர்களாக்கிக்கொள்ளும் ஆற்றல் உண்டு, எதிர்காலத்தை அறியும்
ஆற்றல் அறிவுச் செல்வத்துக்குண்டு
9 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் பழி பாவங்களைக் கண்டு அஞ்சுவர்
10 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் குறைவாகப் பேசி, பகைவர் உள்ளத்தில்
பதிக்கவேண்டிய கருத்தைப் பதிப்பர்
11 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் உண்மைகளை ஆராய்வர்
12 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள்,``ஒன்றே குலம், ஒருவனே தேவன், யாதும் ஊரே
யாவரும் கேளிர்'' என்ற கொள்கையைப் பின்பற்றி நடப்பர்
13ஒரு செயலைச் செய்யும் முன்னர் அதன் நன்மை தீமைகளை ஆராய்வர்
14 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவர்
15 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்கள் தங்களை அறிவாளி என்று
நினைத்துக்கொள்வதில் தவறு இல்லை
16 அறிவுச் செல்வம் கல்வி மற்றும் கேள்விச் செல்வத்தைவிடப் பெரியது
17 அறிவுச் செல்வத்தைப் பெற்றவர்களால் நாடும் மொழியும் வளம்பெறும்


Thursday, July 18, 2013

விருந்தோம்பல், மக்கட்பேறு விளக்கம்

தமிழ் இலக்கியம்  - திருக்குறள் மக்கட்பேறு, விருந்தோம்பல் பற்றிய விளக்கம்

உதவிய நூல்களுக்கு நன்றி உரித்தாகுக.

1. திருக்குறள்

மக்கட்பேறு (மக்கள் செல்வம்)

அதிகார விளக்கம்

நன்மக்களால் அடையும் இன்பமும் பயனும் பிறவும் பற்றிப் பத்துப்பாடல்களில் தெளிவாகத் திருவள்ளுவர் விளக்குவதால் இவ்வதிகாரம் மக்கட்பேறு அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

குறள்

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற        (61)


பொருள்

பெறுமவற்றுள் - ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள்
அறிவு - அறியவேண்டுவனவற்றை
அறிந்த - அறியக்கூடிய
மக்கட்பேறு - சிறந்த மக்களைப் பெறுதல்
அல்ல - அல்லாமல்
பிற - மற்ற செல்வங்களை
யாம் அறிவதில்லை யாம் அறிந்திருக்கவில்லை

விளக்கம்

ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்ற செல்வங்களை யாம் மதிப்பது இல்லை



குறள் 2.


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்         (64)


பொருள்:

அமிழ்தினும் - அமிழ்தத்தினைவிட
ஆற்ற மிகவும்
இனிதே - இனிமையானதாக இருக்கும்
தம் - தமது
மக்கள்- குழந்தைகள்
சிறு - சிறிய
கை- கைகளால்
அளாவிய-கலைக்கப்பட்ட
கூழ்-சோறு

விளக்கம்

தமது மக்கள் சிறுகைகளால் பிசைந்த சோறானது சுவையான அமிழ்தத்தினையும்விட மிகவும் இனிமையானதாக இருக்கும்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்         (64)


ஈன்ற பொழுதின் பெதிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேடட தாய்    (69)

மக்கட்பேறு

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்   குறள் 67

பொருள்

தந்தை - தகப்பனார்
மகற்கு - தனது மகனுக்கு
ஆற்றும் - செய்ய வேண்டிய
நன்றி - நன்மையான கடமை (எது என்றால்)
அவையத்து - கற்றோர் இருக்கும் சபையில்
முந்தி - சிறப்பாக முற்பட்டு
இருப்ப இருக்குமாறு
செயல்-செய்வதாகும்


தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை எதுஎன்றால் கற்றவர் நிறைந்த சபையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும். அதாவது தந்தையின் கடமை என்னவென்று சொல்வோமானால் அறிஞர்கள் நிறைந்த சபையில் சிறப்புப் பெறுமாறு மகனை உண்டாக்குவது ஆகும்.




விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள்.

இல் இருந்து இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டு
ஓம்பி - பொருள்களைக் காத்து
வாழ்வது வாழ்கின்றது
எல்லாம் - எல்லாம்
விருந்து விருந்தினரை
ஓம்பி - போற்றிப் பேணி
வேளாண்மையை - உதவியை
செய்தல் - செய்யும்
பொருட்டு - காரணத்திற்கே ஆகும்


கருத்து

இல்வாழ்க்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து
வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்தற்
பொருட்டே ஆகும்.

நன்றி - உரையாசிரியர் வீ. முனிசாமி

விருந்தோம்பல்

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார் - குறள் 88

பொருள்

விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - விருந்தினரைப் பேணி அவருக்கு
                                   வேண்டிய உயர்ந்த உணவை
                                   விரும்பிப் படைக்காமல் இருப்பவர்

பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் -   அந்த தர்மகாரியங்களுக்குச்
                                     செலவிடவேண்டிய பொருளை
                                     நிலையான பொருள் என்று
                                    பாதுகாத்துப் பின்பு இழந்து
                                    விட்டதனால் இன்று எனக்கு      
                                    எந்தப் பற்றுக்கோடும் இல்லை
                                     என்று வருந்துவர்
கருத்து 

அறிவற்றவர்கள் விருந்தினரைப் பாதுகாத்து அந்த வேள்வியின் மூலம் கிடைக்கக் கூடிய நற்பயனை அடையமாட்டார்கள். அவர்கள் பொருளை வீணே காத்துவைப்பர். பின்னர் அப்பொருளை இழந்து ஆதரவற்றவர்களாக ஆகிவிடுவர். அதனால், அவர்கள் வருந்தும் நிலை ஏற்படும்.



விருந்தோம்பல்


 உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு குறள் 89



 உடைமையுள் இன்மை
விருந்துஓம்பல் ஓம்பா
மடைமை -                 செல்வம்உடைய காலத்திலும் வறுமை
                          என்று சொல்வது விருந்தினரை
                          புறக்கணிக்கும் தன்மை அறிவற்ற தன்மை
                          ஆகும்.

மடமை மடவார்கண் உண்டு - அது அறிவற்றவர்களிடத்தில் இருக்கிறது.


கருத்து:

செல்வ நிலையிலும் உள்ள வறுமை என்பது, விருந்தினரைப்
போற்றிப் பாதுகாக்காத அறியாமை ஆகும். இத்தன்மை   
அறிவுடையவர்களிடம் உண்டாகாது. அறிவற்றவர்களிடம் மட்டும்
இருக்கும்.

விளக்கம்:
ஒருவர் செல்வம் நிறைந்திருக்கும் காலத்திலும் விருந்தினரை
உபசரிக்காமல் இருப்பது வறுமையை உடையவராக
இருப்பதற்குச் சமமாகும். இத்தகைய நிலைமை
அறிவுடையவர்களிடம் ஏற்படாது. வறுமை அறிவற்றவர்களிடம்
தோன்றும்.


தயாரித்தவர்
ஆசிரியர். சி. குருசாமி