Thursday, July 30, 2009

ஒருபக்கக் கதை - கருத்தைக்கூறித் தலைப்பிடுக.

ஒருபக்கக் கதை - கருத்தைக்கூறித் தலைப்பிடுக.


`அப்பா.. . அப்பா இதோ இந்தியச் சாப்பாட்டுக்கடை` என்று வலாகச் சொன்னான் அமுதன். `உன் கண்ணுக்குத்தான் பட்டுன்னு எதுவும் தென்படும்` என்று சொல்லி அமுதனைப் பாராட்டினார் அழகேசன்.

`சரி சரி பேசிக்கிட்டே இருந்தேங்கன்னா வண்டி இந்த இடத்தைத் தாண்டிரும்` என்று கூறினாள் மனைவி மீனா. `ப்ளீஸ் ஸ்டாப்` என்று ங்கிலத்தில் அழகேசன் அன்பாக அந்த வாடகை உந்து வண்டி ஓட்டுநரிடம் கூறினான். அருகில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினர். `நல்ல வேளை இன்னும் ஒரு சிக்னல் இருந்தா மீட்டர் ஒரு வெள்ளி கூடக்காட்டிரும்` என்றான் அமுதன்.

பைகளை எடுத்த மாத்திரத்தில் மூன்றாவது மாடியிலுள்ள உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தனர். விடுதியின் உரிமையாளர் இந்திய முறைப்படி ஏதோ ஒருமொழியில் வணக்கம் கூறி அமரும் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.


மூன்றுநாள் ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு உணவுப்பட்டியலை விரித்தபோது அப்பளம் வந்துவிட்டது. `இது வடநாட்டு அப்பளம் மிளகு சற்றுத் தூக்கலாக இருக்கும் உடலுக்கு நல்லது` என்று அழகேசன் கூறினார்.


`உணவு அரைமணி நேரத்தில தயாராயிரும்` என்று வேலையாள் தமிழில் சொல்லிவிட்டுத் தென்னாட்டு வெங்காய வடகத்தை வேண்டுமளவு அழகிய மூங்கில் கூடையில் வைத்துச் சென்றார். `இது உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்` என்று சொல்லி முடித்தாள் பெற்றோரின் எதிரில் அமர்ந்திருந்த மேனகா.


உணவில் தமக்கு மிகவும் பிடித்த முளைப்பயற்றாலான கூட்டைச் சுவைத்துச் சாப்பிடும்போது பளிச்சென்று நினைவுக்கு வந்தது மினி சூட்கேஸ். அதை அமுதனிடம் கொடுத்து வண்டியில் இருக்கையின் பின்பக்கத்தில் பத்திரமாக வைக்கச் சொன்னாள். இது பற்றி உடனே சொல்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் மீனா.


`என்னங்க.. நம்ம அமுதங்கிட்ட கொடுத்த சூட்கேஸை வண்டியில மறந்து விட்டுட்டோமே அதிலதான நம்ம பாஸ்போட்டும் மீதப் பணமும் இருக்கு, இப்ப என்னங்க செய்றது. வண்டி நம்பரும் தெரியல. மொழி தெரியாத ஊர்ல யார்ட்ட சொல்ல` என்று கண்ணீர் ததும்பக் கூறினாள் மீனா.


`நீ பயப்படாத இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நம்மமொழி தெரிஞ்ச இந்தப் பையன்ட இதப்பத்திக் கேப்போம்` என்று வேலையாள் சொல்லியபோது இருவரின் கனத்த மனத்தைக் கரைத்தது வேலையாளின் றுதல் மொழி.

அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்தபோது இரண்டு மணி நேரம் சென்றதை அறிந்து வருந்தினர். கடையின் அருகில் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தபோது மூன்று வண்டிகள் நிற்காமல் சென்றபின் ஒரு வண்டி வந்து நின்றது. அதைக் கண்டபோது அனைவரின் மனமும் குளிர்ந்தது.


எழுதியவர்: சி. குருசாமி


கதைமாந்தர்கள்

1 அழகேசன் – குடும்பத்தலைவர்

2. மீனா - குடும்பத்தலைவி

3. அமுதன் – மகன்

4. மேனகா - மகள்

5. தமிழ்மொழி தெரிந்த பணியாளர் -
உணவு விடுதி உரிமையாளர்

6 வாடகை உந்துவண்டி ஓட்டுநர்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஒருபக்கக் கதை - மாணவர் பங்கு

1. கதையின் சுருக்கம்

2. கதையிலிருந்து நீ அறிந்துகொண்ட செய்திகள்

3. கதை உணர்த்தும் சமூகப் பழக்க வழக்கங்கள்

4. அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல்

5. கதையில் உன்னைக் கவர்ந்த வரிகள்

6. அந்த வரிகள் உணர்த்தும் செய்திகள்

7. கதையைத் திறனாய்வு செய்யவும்

(வீட்டுப்பாடம்)


தெரிந்துகொள்ளும்
செய்திகள்:

1. எந்தச் சூழலிலும் கவனமாக இருத்தல்

2. பாராட்டும் மனம் பெறுதல்

3. பொறுமையுடன் செயல்படுதல்

4. பாரம்பரியப் பழக்கத்தைப் பின்பற்றுதல்

5. மொழியுணர்வுடன் இருத்தல்

6. தாயுள்ளத்துடன் செயல்படுதல்
7. அவசரத்திலும் நிதானமாகச் செயல்படுதல்

8. பிரச்சினையைச் சமாளிக்கும் திறனறிதல்

9. நேர்மையுடன் செயல்படுதல்


################################################

முக்கியப் படிகள்

1. கதைத் தலைப்பு

2. கதையாசிரியரின் பெயர்

3. திறனாய்வின் விளக்கம்

4. கதைத் தளம் (நடைபெற்ற சூழல்)

5. கதைச் சுருக்கம்

6. கதைமாந்தர்களின் அமைப்பு

7. கதைமாந்தர்களின் பண்பு நலன்கள்

8. கதையின் தொடக்கம் – விளக்கம்

9. கதையின் வளர்ச்சி - விளக்கம்

10. கதையின் உச்சம்

11. கதையின் முடிவு

12. உன்னைக் கவர்ந்த வரிகள்

13. அவற்றின் மூலம் நீ தெரிந்துகொண்டவை

14. ஒப்பீட்டு அணுகுமுறை

15. கதை இன்னும் சிறப்பாக அமைவதற்கு யோசனைகள்

16. திறனாய்வின் முடிவு

தயாரித்தவர்: சி. குருசாமி
***************************************************************

தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

குழுமுறையில் அமைத்துள்ளவைகளில் சில

பொதுவாக இந்தியர்கள் ஒருசிலவற்றைக் குழுமுறையில் (குடும்ப முறையில்) வகைப்படுத்தி உள்ளனர். அவை நவதானியம், நவக்கிரகம், நவராத்திரி, நவரசம், நவமணி போன்றவை கும். நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்பது பொருளாகும்.


நவதானியம் (ஒன்பது வகைத் தானியங்கள்)

மனிதனின் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒன்பது வகையான உணவுப்பொருள்களை நவதானியம் என்று தமிழர்கள் அழைப்பர். இவை இந்திய உணவுமுறைப் பண்பாட்டோடு தொடர்புடையவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றைச் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம். நவதானியம் உடலுக்கு வலுவைத் தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்.


அவை: அவரை, உளுந்து, கடலை,
கொள்ளு, கோதுமை, துவரை, நெல்,
எள், பயறு.

நவகிரகம், நவராத்திரி - மக்களின் நம்பிக்கைக்குரியவை.

நவரசம் (ஒன்பது வகை இலக்கியச் சுவைகள்)

நவரசம் என்பது ஒன்பது வகை இலக்கியச்சுவைகளைக் குறிக்கும்.

நம்மிடம் உள்ள மிகப்பழமை வாய்ந்த தொல்காப்பியம் என்ற நூல் எட்டு வகை இலக்கியச் சுவையைக் குறிக்கின்றது. இத்துடன் சாந்தத்தையும் சேர்த்துக்கொள்ளும்போது ஒன்பது வகை இலக்கியச்சுவை தோன்றுகிறது. இச்சுவைகள் மனிதனின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.


நவமணி (ஒன்பது வகை மணிகள்)


மக்கள் விரும்பும் ஒன்பது வகை விலையுயர்ந்த பொருள்களை நவமணி என்று அழைக்கிறோம். அவை மரகதம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம், நீலம்.

நவமணிகளின் சிறப்பினை நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். சிலப்பதிகாரத்தில் நவமணிகளில் இரண்டு முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவை முத்து, மாணிக்கம். இவை இரண்டும் கண்ணகியும் பாண்டிய மன்னனின் மனைவியும் காலில் அணிந்திருந்த சிலம்பினுள் இருந்த பரல்கள் (சிறிய உருண்டைகள்) கும். இவை இரண்டும் சிலப்பதிகாரக் கதையின் ஓட்டத்திற்கும் கதையில் திருப்புமுனை ஏற்படுவதற்கும் மிகவும் பயன்படுகின்றன.


நவமணிகளில் சிலவற்றின் சிறப்பினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியப் பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், இவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியா என்ற பக்கத்தை நாடலாம்.


இவற்றுள் மாணிக்கத்தின் பொதுத்தன்மை







மாணிக்கம் என்பது பூமியிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள் (கல்). பொதுவாக இது பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகமாகக் கிடைக்கிறது. பெரும்பாலும் இது சிகப்பு நிறத்திலிருக்கும். புறாவின் இரத்தத்தை ஒத்த நிறத்தை உடைய மாணிக்கக்கல்லை மிகவும் மதிப்பு மிக்க கல் என்று கூறுவர். இது நகைகள் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. நம் நாட்டிலுள்ள நகைக்கடைகள் பலவற்றில் இதனை நாம் காணலாம்.

`கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?` என்ற வினாவினைத் தொடுத்துச் சென்றுள்ளார் கவிஞர் கண்ணதாசன். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.


எழுதியவர்: குருசாமி **************************************************************************************************************************
மாணிக்கம் காணாமல் போகிறான் –
கதை - ரெ. கார்த்திகேசுக்கு நன்றி உரித்தாகுக

கதையின் ஓட்டத்திற்குக் காரணமாக இருப்பவன் மாணிக்கம் என்பவன். இவன் முத்துச்சாமியின் தம்பி. அவருடைய தாய் தந்தையருக்கு இளைய மகன். இவன் எழுதிய கடிதத்தின் மூலம் இவன் மாணிக்கத்தின் தன்மையினைப் பெற்ற உயர்ந்த குணத்தை உடையவன் என்பதை நாம் அறியலாம்.


மாணிக்கம் காணாமல் போகிறான் – விளக்கம்


மலேசியத்திரு நாட்டில் வசிக்கும் சராசரி இந்தியக் குடும்பத்தைப் பற்றிய ஒரு கதை. இக்கதை சராசரி வாழ்க்கைத் தரத்தை உடைய இந்தியக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மலைத்தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவரின் பொறுப்பற்ற வாழ்க்கையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. இது பெற்றோர்களின் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது.

மாணவப் பருவத்தில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை இச்சமுதாயத்திற்கு விளக்குகிறது. பொறுப்பற்ற பெற்றோர் (மலைத்தோட்டத்தில் வசிப்பவர்கள் - எஸ்டேட் வாசிகள்) பிள்ளைகளால் (பினாங்கில் வசிப்பவர்கள் - நகரவாசிகள்) குடும்பத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை எளிமையாக விவரிக்கிறார்.


இச்சிறுகதை பொதுவாக மனிதர்கள் இருக்கும்போது ஒருவரின் சிறப்பினை உணர்ந்துகொள்வதில்லை என்பதையும் இல்லாதபோதுதான் அவரின் பெருமையை உணருவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.


கதாப் பாத்திரங்கள்

முத்துசாமியின் பண்பு நலன்கள்

1. மாணிக்கத்தின் அண்ணன்

(சிறந்த குடும்பத் தலைவன் – முன்னேறத் துடிப்பவன்)

2. அரசாங்கத்தில் மாதச்சம்பளம் பெறும் ஓர் ஊழியன்

3. பொருளாதாரச் சிக்கல் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்

4. குடும்பத்திற்காக இரவு பகல் கடுமையாக உழைப்பவன்

5. தம்பியின் மீதும் குடும்பத்தினரின் மீதும் அதிக அன்பு செலுத்துபவன்

6. மனைவியை விட்டுக்கொடுக்காத மனம் படைத்தவன்

7. குடும்பத்துப் பிரச்சினை நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டும் என்று நினைப்பவன்


8. மற்ற இனத்தவர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை உள்ளவன்

9. பெற்றோரிடம் அன்பாகவும் மதிப்புடனும் பேசும் குணமுடையவன்

10. சராசரி மனிதர்களிடம் உள்ள குறைகளை நினைத்துப் பார்ப்பவன்

கமலாவின் பண்பு நலன்கள்


1. முத்துச்சாமியின் மனைவி (இல்லத்தரசி)
பொறுப்புள்ள குடும்பத்தலைவி

2. மாணிக்கத்தின் மீதும் கணவன் மீதும் அதிக அன்பு செலுத்துபவள்

3. கணவனைப் போல் குடும்பப்பிரச்சினை நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவள்

4. பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும் கொழுந்தனைத் தம் வீட்டில் வைத்துப் படிக்க வைக்க நினைப்பவள்


மாணிக்கத்தின் பண்புநலன்கள்

1. கதை மாணிக்கத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது

2. மாணிக்கக்கல்லைப் போல மதிப்பு மிக்கவன்

3. மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்பவன்

4. செய்த தவற்றை நினைத்து வருந்துபவன்


கதையிலிருந்து வெளிப்படுபவை

1. பொறுப்புள்ள அண்ணன் முத்துச்சாமி

2. பொறுப்புள்ள அண்ணி கமலா

3. மாணவப்பருவத்தை உடைய மாணிக்கம்

4. மலேசிய நாட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தைப் பற்றிய கதை

5. பொறுப்பற்ற தாய் தந்தையர்

6. சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்

7. டிரைவர் பெரியசாமி - சிறந்த குடும்ப நண்பர்

8. கிராணியார் - முத்துச்சாமிக்குத் தெரிந்தவர்

9. காவல் நிலையத்தில் பணிபுரியும் பொறுப்பான கார்ப்பரல்



சிறந்த அமைப்புடைய சூழல்கள்
சில வரிகளுக்கு விளக்கம் அளித்தல்.


மாணிக்கம் அனாக் லெலாக்கி மாடசாமி
(மாணிக்கத்தின் அப்பா மாடசாமி)


``நண்பர்களை எல்லாம் கேட்டுவிட்டேன்
யார்வீட்டிலும் இல்லை. வெள்ளிக்கிழமை
மாலையில் போனவன்.
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை ..``



``இந்தக்காலத்துப் பையன்கள் கோழைகள்.
பரீட்சையில் பெயிலானால் தற்கொலை!
அப்பா அம்மா ஏசினால் தற்கொலை``



``வேலை செய்துகொண்டே படிக்கலாம்.
அதைவிட்டு ஏன் ஓடி ஒளியவேண்டும்?
என்முகத்தில் விழிக்கமுடியாத அளவுக்கு
நான் அவ்வளவு கொடுமைக்காரனா?``


``தன் வீட்டுக்கதவின் வெளியே சுருட்டுப்
பிடித்தவாறு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர்
அப்பாதான் என்று தெரிந்துவிட்டது.
அவர் பக்கத்தில் அவர்கள் குடும்ப நண்பரான
டிரைவர் பெரியசாமி நின்று கொண்டிருந்தார்.``


``வந்ததில இருந்து இப்படித்தாங்க!
அடுத்தடுத்த வீட்டுச் சீனக் குடும்பங்க
வந்து வேடிக்கை பார்க்குது``


``ஈ.பி.எப். பணம் வந்ததும் ஆயிற்று
என முத்துச்சாமிக்குத் தெரியும்.
பணம் வந்ததும் சில நண்பர்கள் வந்தார்கள்.
குடியுடன் விருந்துகள் நடந்தன.``


``என்னைச் சிறிது காலத்திற்குத்
தேடவேண்டாம் என்று அண்ணனிடம்
சொல்லுங்கள்.ஒருநாள் திரும்பி வந்தால்
விளக்கம் சொல்லுகிறேன். நான் சொல்லாமல்
ஓடிப்போனதால் உங்களுக்கு ஏதும்
சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.``

உங்கள் தம்பி மாணிக்கம்.


வடிவமைப்பு: சி. குருசாமி31.07.2009

Wednesday, July 29, 2009

கதை - மாணவர் பங்கு - முக்கியப் படிகள்

மாணவர் பங்கு

1. கதையின் சுருக்கம்

2. கதையிலிருந்து நீ அறிந்துகொண்ட செய்திகள்

3. கதை உணர்த்தும் சமூகப் பழக்க வழக்கங்கள்

4. அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல்

5. கதையில் உன்னைக் கவர்ந்த வரிகள்

6. அந்த வரிகள் உணர்த்தும் செய்திகள்

7. கதையைத் திறனாய்வு செய்யவும் (வீட்டுப்பாடம்)


கதையிலிருந்து தெரிந்துகொள்பவை

1. எந்தச் சூழலிலும் கவனமாக இருத்தல்

2. பாராட்டும் மனம் பெறுதல்

3. பொறுமையுடன் செயல்படுதல்

4. பாரம்பரியப் பழக்கத்தைப் பின்பற்றுதல்

5. மொழியுணர்வுடன் இருத்தல்

6. தாயுள்ளத்துடன் செயல்படுதல்

7. அவசரத்திலும் நிதானமாகச் செயல்படுதல்

8. பிரச்சினையைச் சமாளிக்கும் திறனறிதல்

9. நேர்மையுடன் செயல்படுதல்


முக்கியப் படிகள்

1. கதைத் தலைப்பு

2. கதையாசிரியரின் பெயர்

3. திறனாய்வின் விளக்கம்

4. கதைத் தளம் (நடைபெற்ற சூழல்)

5. கதைச் சுருக்கம்

6. கதைமாந்தர்களின் அமைப்பு

7. கதைமாந்தர்களின் பண்பு நலன்கள்

8. கதையின் தொடக்கம் – விளக்கம்

9 கதையின் வளர்ச்சி - விளக்கம்

10. கதையின் உச்சம்

11. கதையின் முடிவு

12. உன்னைக் கவர்ந்த வரிகள்

13. அவற்றின் மூலம் நீ தெரிந்துகொண்டவை

14. ஒப்பீட்டு அணுகுமுறை

15. கதை இன்னும் சிறப்பாக அமைவதற்கு நீ கூறும் யோசனைகள்

16. திறனாய்வின் முடிவு

உரிமை: ஆசிரியர் சி. குருசாமி

Tuesday, July 28, 2009

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.


இப்பூமி நீர்வளமும் நிலவளமும் நிறைந்த ஒன்றாகும். தண்ணீர் ஏரி, குளம், ஊற்று, கடல் (1) ___________________________ கிடைக்கின்றது. இவற்றில் கடல் நீர் விரிந்த எல்லையை உடையது. (2)________________________ உப்புத்தன்மை உடையது. இந்நீரில் நிலத்தில் வாழும் உயிரினங்களை (3) ________________ ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இவ்வுயிரினங்கள் நீண்ட காலமாக (4) ______________________________.

இவ்வுயிரினங்களில் மீன்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவற்றைப் பக்குவப்படுத்தி மனிதர்களில் பெரும்பாலோர் உணவுடன் (5) ____________________ உண்ணுகிறார்கள். மீன்கள் மிகவும் சத்துநிறைந்தவை. (6) _____________________ எளிதில் செரிக்கும் தன்மை வாய்ந்தவை. சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் (7) ______________________ மீன்களை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. (8)____________________ கண்பார்வை தெளிவடையும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக (9) _______________ மீன்களிலிருந்து மருந்தும் மாத்திரைகளும் ஏராளமாகத் தயாரிக்கின்றனர். மீன் மாத்திரைகள் தோலில் (10) _____________________ பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. மிகவும் மெலிந்த உடலை உள்ளவர்களுக்கு மீன்மாத்திரைகள் மிகவும் பயன்படுகிறது.




அமைப்புச் சொற்கள் - கோடிட்ட இடங்களை நிரப்புக.

மனிதன் சிறப்புடன் வாழ்வதற்குத் தேவையானவை பல உள்ளன. அவற்றுள் (1) ___________________ கல்வி. இது நம்முடைய பொது அறிவையும் உலக அறிவையும் வளர்ப்பதற்கு மிகவும் (2) _________________ செய்யும். அத்துடன் நாம் (3) __________________ வருமானம் பெறுவதற்கும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். (4) _________________ மற்றவர்களால் திருடமுடியாது. மிகப்பெரிய காட்டாற்று வெள்ளத்தாலும் கடல்நீராலும் இதனை அழிக்கமுடியாது. இது கொடுக்க (5) ____________ வளரும் மிகப் பெரிய செல்வம். இதனை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது கொடுத்தவர்களும் வளர்ச்சி (6) __________________ அதனைப் பெற்றவரும் தொடர்ந்து வளருவர். அதனால்தான் பழங்காலத்திலேயே மன்னர்களும் மக்களும் கல்வியைப் போற்றினர்.

நமக்குத் துன்பம் ஏற்படும்போது (7) ____________ துன்பத்திலிருந்து நம்மைக் காப்பதற்குக் கல்வி பயன்படுகிறது. நாம் நன்றாகச் சிந்தித்துச் செயல்படுவதற்கும் மிகவும் உதவி (8) _____________. இன்றைய உலகில் கல்விக் கூடங்களில் படித்தவர்கள் பட்டத்தைப் பெறுவதோடு பண்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கல்விக் கூடங்களுக்குச் செல்லாமல் பலர் (9)________________ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தையே கல்வியாகக்கொண்டு அவற்றின் மூலம் வாழ்க்கையில் உயர்வு பெறுகிறார்கள். வாழ்க்கை (10) ______________ சக்கரம் முறையாகச் சுற்றுவதற்குக் கல்வி மிகவும் உறுதுணையாக விளங்குகிறது.

Monday, July 27, 2009

கதையும் கருத்தும் – புரிதல்!

கதையும் கருத்தும் – புரிதல்!

முத்துவும் அவருடைய நண்பர்களும் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரே வட்டாரத்தில் வசித்து வந்தனர். அவர்களுடைய பெற்றோர் வறுமையில் வாடினர். அதனால், அவர்களைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தனர். அங்கு முத்து இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து நேர்மையாகச் செயல்பட்டார். எனவே, தொழிற்சாலையின் முதலாளி முத்துவைப் பொருள்களின் தரத்தை முடிவு செய்யும் குழுவில் ஓர் உறுப்பினராக நியமனம் செய்தார். நாளடைவில் முத்துவுக்குப் பதவி உயர்வும் அதிகச் சம்பளமும் கிடைத்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு முத்துவின் முதலாளி விபத்தில் மரணம் அடைந்தார். அதன்பின்னர் முதலாளியின் மகன் கதிரேசன் அத்தொழிற்சாலையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கதிரேசனுக்கு அத்தொழிற்சாலையை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லை. இருப்பினும், அவர் தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்க எண்ணினார்.

கதிரேசன் தன் தொழிற்சாலையில் இளையர்கள் பணி புரிந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார். அதனால், அவர் வயதுமிகுந்த முத்துவையும் அவருடைய நண்பர்களையும் வேலையிலிருந்து நிறுத்தினார். கதிரேசன் புதிய பணியாளர்களை அவ்வேலைக்கு அமர்த்தினார். புதிய பணியாளர்களுக்கு அனுபவம் குறைவாக இருந்ததால் சம்பளம் குறைவாகக் கொடுத்தார்.

முத்துவும் அவருடைய நண்பர்களும் தம் திறமைகள் வீணாகப்போவதை விரும்பவில்லை. அதனால், பக்கத்திலுள்ள தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தனர். கதிரேசனின் தொழிற்சாலையில் உற்பத்தியின் அளவு பெருகியதே தவிர அவை தரத்தில் குறைந்து இருந்தன. பொருள்களை விற்க முடியவில்லை. காலப்போக்கில் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியது. இதனை நடத்துவதற்குக் கதிரேசன் ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அந்நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நண்பனின் உதவியை நாடினார். அவருடைய நண்பர் தொழிற்சாலையை நடத்துவதற்கு வேண்டிய வழிமுறைகளை வழங்கினார்.

கதிரேசன் தம் நண்பரின் ஒத்துழைப்புடன் தொழிற்சாலையில் பல மாற்றங்களைச் செய்தார். அதன்பின்னர் தொழிற்சாலையில் அதிக லாபம் கிடைத்தது. அப்போதுதான் கதிரேசன் ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு அனுபவமும் திறமையும் தேவை என்பதைப் புரிந்து கொண்டார். மேலும், அனுபவம் பெறுவதற்குப் போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.

பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்புக் குறியினுள் எழுதுக. (10 மதிப்பெண்கள்)


Q1 நேர்மையாக உழைத்த முத்துவுக்கு முதலாளி என்ன
கொடுத்தார்?

1 பதவி உயர்வு கொடுத்தார்
2 அதிகச் சம்பளம் கொடுத்தார்
3 அங்கத்தினராக நியமனம் செய்தார்
4 தொழிலாளர்களின் பிரதிநிதியாக நியமனம் செய்தார்

( )


Q2 கதிரேசன் முதலில் எண்ணியது யாது?

1 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டுமென்று
2 தொழிற்சாலையைப் பெரிய நிறுவனமாக்க வேண்டுமென்று
3 தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்று
4 தொழிற்சாலைக்குப் புதிய ஆட்களைச் சேர்க்க
வேண்டுமென்று
( )

Q3 மூத்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச்
செல்லக் காரணம் என்ன?

1 அவர்கள் புதிய சூழலை விரும்பியதால்
2 அவர்கள் வேலையை இழந்துவிட்டதால்
3 அவர்கள் அதிக ஊதியம் பெற நினைத்ததால்
4 அவர்கள் ஆற்றல் பயனற்றுப்போவதை விரும்பாததால்
( )

Q4 தொழிற்சாலை ஏன் நஷ்டம் அடைந்தது?

1 பொருள்களை விற்க முடியாததால்
2 பொருள்களின் தரம் குறைந்திருந்ததால்
3 பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்
4 பொருள்களின் விலை அதிகமாக இருந்ததால் ( )

Q5 கதிரேசனின் பிரச்சினை எப்போது தீர்ந்தது?

1 நண்பன் வருகை தந்தபோது
2 தொழிற்சாலையின் கடன் தீர்ந்தபோது
3 நண்பனின் சொல்லைக்கேட்டு நடந்தபோது
4 தொழிலாளர்களைப் பயிற்சிக்கு அனுப்பியபோது
( )

************************************************************************************************************************************************

Sunday, July 19, 2009

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

`அப்பா.. . அப்பா இதோ இந்தியச் சாப்பாட்டுக்கடை` என்று ஆவலாகச் சொன்னான் அமுதன். `உன் கண்ணுக்குத்தான் பட்டுன்னு எதுவும் தென்படும்` என்று சொல்லி அமுதனைப் பாராட்டினார் அழகேசன்.

`சரி சரி பேசிக்கிட்டே இருந்தேங்கன்னா வண்டி இந்த இடத்தைத் தாண்டிரும்` என்று கூறினாள் மனைவி மீனா. `ப்ளீஸ் ஸ்டாப்` என்று ஆங்கிலத்தில் அழகேசன் அன்பாக அந்த வாடகை உந்து ஓட்டுநரிடம் கூறினான். அருகில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினர். `நல்ல வேளை இன்னும் ஒரு சிக்னல் இருந்தா மீட்டர் ஒரு வெள்ளி கூடக்காட்டிரும்` என்றான் அமுதன்.

பைகளை எடுத்த மாத்திரத்தில் மூன்றாவது மாடியிலுள்ள உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தனர். விடுதியின் உரிமையாளர் இந்திய முறைப்படி ஏதோ ஒருமொழியில் வணக்கம் கூறி அமரும் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.

மூன்றுநாள் ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு உணவுப்பட்டியலை விரித்தபோது அப்பளம் வந்துவிட்டது. `இது வடநாட்டு அப்பளம் மிளகு சற்றுத் தூக்கலாக இருக்கும் உடலுக்கு நல்லது` என்று அழகேசன் கூறினார்.

`உணவு அரைமணி நேரத்தில தயாராயிரும்` என்று வேலையாள் தமிழில் சொல்லிவிட்டுத் தென்னாட்டு வெங்காய வடகத்தை வேண்டுமளவு அழகிய மூங்கில் கூடையில் வைத்துச் சென்றார். `இது உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்` என்று சொல்லி முடித்தாள் பெற்றோரின் எதிரில் அமர்ந்திருந்த மேனகா.

உணவில் தமக்கு மிகவும் பிடித்த முளைப்பயற்றாலான கூட்டைச் சுவைத்துச் சாப்பிடும்போது பளிச்சென்று நினைவுக்கு வந்தது மினி சூட்கேஸ். அதை அமுதனிடம் கொடுத்து வண்டியில் இருக்கையின் பின்பக்கத்தில் பத்திரமாக வைக்கச் சொன்னாள். இது பற்றி உடனே சொல்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் மீனா.

`என்னங்க.. நம்ம அமுதங்கிட்ட கொடுத்த சூட்கேஸை வண்டியில மறந்து விட்டுட்டோமே அதிலதான நம்ம பாஸ்போட்டும் மீதப் பணமும் இருக்கு, இப்ப என்னங்க செய்றது. வண்டி நம்பரும் தெரியல. மொழி தெரியாத ஊர்ல யார்ட்ட சொல்ல` என்று கண்ணீர் ததும்பக் கூறினாள் மீனா.

`நீ பயப்படாத
இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நம்மமொழி தெரிஞ்ச இந்தப் பையன்ட இதப்பத்திக் கேப்போம்` என்று அவர் சொல்லியபோது இருவரின் கனத்த மனத்தைக் கரைத்தது அவனின் ஆறுதல் மொழி.

அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்தபோது இரண்டு மணி நேரம் சென்றதை அறிந்து வருந்தினர். கடையின் அருகில் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தபோது மூன்று வண்டிகள் நிற்காமல் சென்றபின் ஒரு வண்டி வந்து நின்றது. அதைக் கண்டபோது அனைவரின் மனமும் குளிர்ந்தது.

உரிமை: ஆசிரியர் சி. குருசாமி

Sunday, July 12, 2009

அலைபாயும் மனம்

அலைபாயும் மனம்

கோமதி அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள், கதவைத் தட்டும் ஓசை .. வேகமாகச் சென்று கதவைத் திறந்த கோமதிக்குக் காத்திருந்தது அதிசயம்!

அவள் கண் ஓராண்டாகத் தேடிய பெற்றோர். நிழலா நிஜமா என்று யோசித்தாள். மகளின் தலையைத் தடவினாள். வேலைக்குச் செல்லவேண்டும் என்பதை மறந்தாள் கோமதி. ஒருவினாடியில் நினைவுக்கு வந்தது வேலையிடம்

`அம்மா அப்பாவுக்கு வீட்டில் இருக்கும் சாப்பாட்டைக்கொடு, சாயங்காலம் சீக்கிரம் வந்திருவேன்` என்று கோமதி சொல்லியபோது அவளது ஈரக்கூந்தல் வெளியில் செல்லச் சொட்டடித்தது.


மகிழ்ச்சியோடு வாசலில் வந்து வழியனுப்பினர் பெற்றோர். அவசரமாகப் பறந்தாள் வேட்டைக்குச் செல்லும் புலியைப்போல .. அவள் மனமோ மாலை நேர மயக்கத்தை அடைந்தது . . அருகில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்தாள் கோமதி, வண்டி புறப்பட்டது. அடேயப்பா நாள்தோறும் எவ்வளவு பயணப்போராட்டம் என்று அலுத்துக்கொண்டாள் .. அருகில் உள்ளவர் வாயைத்திறந்து கொட்டாவி விட்ட காற்று அவளை நோக்கி வந்தது. நெருங்கி நின்றவளின் மஞ்சள் மணம் அதற்குள் மூக்கிற்குள் பாய்ந்தது.


வேலையிடத்தில் இருப்பதற்கு இருப்பதோ 20 நிமிடங்கள். 10 நிமிடங்கள் பஸ் பயணம் என்று நினைத்துப் பஸ்ஸை நோக்கியபோது பஸ் விரைந்து சென்றது.


வேலை இடத்தை அடைவதற்கு ஒருமணி நேரம் ¬கிவிடும் என்று நினைத்தபோது அந்த மாத அனுமதி நேரம் அவள் மனத்தைத் தேற்றியது.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபோது இளைய மகள் குமுதாவின் அமைதியான வாழ்க்கை கண்முன் வந்தது. ``அம்மா சாப்பிடுங்க சமையல் வேலை எல்லாம் முடிஞ்சிருச்சு என் மாப்பிள்ளையும் பிள்ளைகளும் வர இன்னும் நாலு மணி நேரம் இருக்கிது. நம்ம வெளியே போய்ட்டு வருவோமா .. அம்மா, தம்பி எப்படி இருக்கான் நல்லா படிக்கானா, பக்கத்துவீட்டு பானு எப்படி இருக்கா .. என்றவாறு அவள் அம்மாவின் கையைப் பிடித்து நடந்து சென்றாள்


வீடு திருப்பினாள் கோமதி அவள் கணவரும் வந்தார் அவருக்கு வேண்டியதை உடனே செய்யத் தொடங்கினாள்.

கதை - சி. குருசாமி

ஒரு பக்கக் கதையின் முக்கியக் கூறுகள்.

1. எளிய ஓட்டத்தில் கதை இருக்கவேண்டும்

2. கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கவேண்டும்


3. ஒவ்வொரு காதாப்பாத்திரமும் உயிரோட்டம் உள்ளதாக
இருக்க வேண்டும்


4. பொதுவாக ஓரிரு பிரச்சினைகள் மட்டும் இருக்கலாம்

5. கதை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக
இருக்கலாம்


6. படித்தவுடன் புதிய செய்தியைப் புரிந்துகொள்ளும் திறன்
இருக்கவேண்டும்


7. அன்பு, பாசம், பண்பாடு, நட்பு, கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
கொண்டிருந்தால் நல்லது


8. சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்

9. கதை எழுதப்பட்ட சூழலுக்கும் நாட்டுக்கும் ஏற்ப அந்தக்
கதையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


தயாரித்தவர் - சி. குருசாமி

ஒரு பக்கக் கதையின் முக்கியக் கூறுகள்.

1. எளிய ஓட்டத்தில் கதை இருக்கவேண்டும்
2. கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கவேண்டும்
3. ஒவ்வொரு காதாப்பாத்திரமும் உயிரோட்டம் உள்ளதாக
இருக்க வேண்டும்
4. பொதுவாக ஓரிரு பிரச்சினைகள் மட்டும் இருக்கலாம்
5. கதை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக
இருக்கலாம்
6. படித்தவுடன் புதிய செய்தியைப் புரிந்துகொள்ளும் திறன்
இருக்கவேண்டும்
7. அன்பு, பாசம், பண்பாடு, நட்பு, கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக்
கொண்டிருந்தால் நல்லது
8. ழமான கதைக் கருவும் இடம் பெறலாம்
9. சிந்தனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்
10. கதை எழுதப்பட்ட சூழலுக்கும் நாட்டுக்கும் ஏற்ப அந்தக்
கதையைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
.


தயாரித்தவர் - சி. குருசாமி

Wednesday, July 1, 2009

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்


சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இது தமிழில் உள்ள காப்பியங்களுள் (தொடர்நிலைச் செய்யுள்) மிகவும் பழமையானது. ஒருகாலத்தில் புலவர்கள் மன்னர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும்தாம் இலக்கியங்களைப் படைத்தனர். அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதனால், இதனைக் குடி மக்கள் காப்பியம் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைப்பர்.

சங்ககாலத்தில் தமிழ்நாடு மூன்று பெரும்பிரிவுகளாக இருந்தது. அம்மூன்று பிரிவையும் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைத்தனர். இதனை முப்பெரும் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இம்முப்பெரும் மன்னர்களின் சிறப்பையும் மக்களின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

இளங்கோவடிகள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காப்பியத்தைத் தொடங்குகிறார். இது மூன்று காண்டங்களை உடையது. இக்காண்டங்களை முப்பது உட்பிரிவுகளாகப் பிரித்துள்ளார். காப்பியத்தின் தொடக்கம் புகார்க்காண்டம்.
புகார்க்காண்டம் சோழமன்னன் சிறப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பு நலன்களையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் இது பாண்டிய மன்னனின் வாழ்க்கை முறையையும் அவனின் அவசரக்குணத்தையும் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் வஞ்சிக் காண்டம். இக்காண்டத்தில் இன்று கேரளா என்று அழைக்கப்படும் சேர மன்னனின் குண இயல்புகளையும் அவனின் வீரச் சிறப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.