Friday, November 9, 2012


சொல்லாமல் சொல்லுவது

மனிதன் பண்பாட்டின் பொருளை உணர்ந்து கொண்ட நாள்முதல் சொல்லாமல் சொல்லும்  இனிய பழக்கத்தையும் கற்றுக்கொண்டான். இதைத்தான் `சாடை மாடையாக` என்று அழகிய இணைமொழியின் மூலம் ரத்தினச் சுருக்கமாக நம் முன்னோர் கூறினர்.

இதோடு தொடர்புடைய பழமொழி ஒன்றை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்கள் மனம் வளம் பெறும்.

`ஆமை சுடுவது மல்லாக்க அதையும் சொல்லப்போனா பொல்லாப்பு`

கணவன் மனைவியிடம் சொல்லாமல் சொல்வதாக இப்பழமொழி அமைந்துள்ளது. ஊடல் ஏற்பட்ட மனைவி, கணவன் ஆமை என்னும் உயிர்ப்பொருளைச் சமைக்க முற்படும்போது துன்பப்படுவதைக் கண்டாள். அவள் கணவனோடு பேசமாட்டாள். இருப்பினும்  அவள் ஆமையைக் குப்புறப் போட்டுப் பலமுறை தீயில் சுடப்போன கணவன் தோல்வி அடைவதைப் பார்க்கிறாள். அவன் தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி அவனைப் பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி இப்பழமொழியைக் கூறுகிறாள். இப்பழமொழியில் அடங்கியுள்ள உறவு முறைப் பண்பாட்டைப் பாருங்கள் ஆழமான கருத்தை உணருங்கள்.

நன்றியுடன்

சிகு

Friday, October 26, 2012


தொடர்ந்து வலைப் பக்கத்தைப் பயன்படுத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள்.
மாணவர்களே!
 அகர வரிசையில் தொடங்கும் இருசீர் கவிதையைப் பொருள் உணர்ந்து தொடர்ந்து எழுதுக.

உங்கள் கருத்துகளை இப்பக்கத்தில் ஏற்றம் செய்திடுக.

 

அவனைக் கண்டேனே

ஆறுதல் சொன்னேனே

இன்முகம் கொண்டானே

ஈகையை உணர்ந்தானே

உண்மையை அறிந்தானே

ஊரையும் நினைத்தானே

என்னையும் நினைத்தானே

ஏக்கம் கொண்டானே

ஐயம் தெளிந்தானே

பொருள் உணர்ந்து தொடர்க ......

Monday, July 16, 2012

புதையலைத் தேடி
 
கண்டுபிடிப்போம்!                                                                                                                                கற்றுப் பயனடைவோம்!வரிசை எண் & படம்
மூலிகையின் பெயரும் இயல்பும்
மருத்துவப் பயன்பாடு
1

படம்
மஞ்சள்
·        சிறந்த மணம் உள்ளது
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·        விரல் மஞ்சள், கிழங்கு மஞ்சள் என்று வகைப்படுத்துவர்
·        தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது

·        கிருமியைக் கொல்லும்
·        சளித்தொல்லையைப் போக்குதல்
·        மூக்கடைப்பை நீக்கும்
·        உடலின் வெப்பத்தைக் குறைக்கும்
·        சில மருந்துகள் தயாரிப்பதற்கு மஞ்சள் கலவைப் பொருளாகப் பயன்படுகிறது
2
வாழை மரம்
·        நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளில் வளரும்
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        பக்கக் கன்றுகள் உருவாகிப் பல ஆண்டுகள் பலன் தரும்
·        குறிஞ்சி, முல்லை, மருதம் என்ற மூன்று பெருநிலங்களிலும் வாழை வளரும்
·        மலைவாழை, நாட்டுவாழை என்ற பிரிவுகள் உள்ளன
·        வாழைப்பழம் மலச்சிக்கலைப் போக்கும்
·        வழைத்தண்டு மற்றும் வாழைப்பூ சிறுநீர்க்கோளாற்றை நீக்கும்
·        வாழைக்காய் ஊட்டச்சத்து நிறைந்தது
·        வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் உறுப்புகள் வளம் பெறும்
·        வாழை இலையில் பச்சையம் அதிகம் உள்ளது
·        நார்ச்சத்து அதிகம் உள்ளது
3
கற்பூரவல்லி
·        தோட்டப்பயிராகும்
·        சதைப்பற்று நிறைந்தது
·        மணம் நிறைந்த செடி
·        கிராம மக்கள் அதிகம் பயன்படுத்துவர்
·        வயிற்றுக் கோளாற்றைக் குறைக்கும்
·        காய்ச்சல் மற்றும் இருமலைக் குறைக்கும்
·        தலைவலிக்குப் பயன்படும்
·        குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உதவிசெய்யும் 
4
செம்பருத்தி
·        தோட்டங்களிலும் வேலிகளிலும் காணப்படும்
·        இதன் பூ, சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும்
·        தலையில் ஏற்படும் வழுக்கையைக் குறைப்பதோடு முடி உதிர்வதையும் குறைக்கும்
·        மூச்சுக்குழல் நோயைக் குணப்படுத்த உதவும்
·        உடல் வெப்பத்தைக் குறைக்கும்
5
துளசி
·        மழைக்காலத்தில் காணப்படும்
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பர்
·        வறண்ட பகுதிகளில்கூட வளரும்
·        நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது
·        சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுகிறது
·        காரத்தன்மை அளிக்கிறது
6
கரும்பு
·        தோட்டப் பயிராகும்
·        அதிகம் தண்ணீர் தேவைப்படும்
·        ஒருமுறை பயிரிட்டால் சில ஆண்டுகள் தொடர்ந்து கரும்பு உருவாகும்
·        தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
·        வெள்ளைக் கரும்பு, செங்கரும்பு என்ற பிரிவுகள் உள்ளன
·        குளிர்ச்சி தன்மை உடையது
·        மஞ்சள் காமாலை அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது
·        உடலுக்குத் தேவையான இனிப்புச் சத்தைத் தருகிறது
7
இஞ்சி
·        இஞ்சி எங்குத் தோன்றியது என்ற வரலாறு தெரியவில்லை
·        இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் பயிரிடப்படுகிறது
·        பழங்காலத்தில் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்துள்ளது

·        உணவு செரிப்பதற்குப் பயன்படுகிறது
·        தலைவலி, வயிற்று வலியைப் போக்குகிறது
·        வாந்தி, தலைச்சுற்றுக்குப் பயன்படுகிறது
8
கீரைகள்
·        நீர்வளம் நிறைந்த இடங்களில் இயற்கையாக வளரும்
·        சிறந்த ஏற்றுமதிப் பொருளாக விளங்குகிறது
·        ஏழைகளின் உணவுப் பொருளாக இருக்கிறது
·        உணவு தயாரிப்பதில் முக்கியப் பொருளாக இருக்கிறது
·        கண்பார்வைக்கு ஏற்றவை
·        மலச்சிக்கலை நீக்கும்
·        குடல் உறுப்புகளுக்குச் சிறந்தது
·        உயிர்ச்சத்துகள் அளிக்கிறது
9
எலுமிச்சை மரம்
·        குற்றுச் செடி வகையைச் சேர்ந்தது
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·        பல வடிவங்களில் இருக்கும்
·        அதிகச் செலவில்லாமல் வளரும் பயிர்
·        ஊறுகாய் செய்வதற்குப் பயன்படுகிறது
·        உணவுப் பொருள் தயாரிப்பதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது
·        `இராஜக் கனி` என்று அழைக்கப்படுகிறது

·        உணவு செரிமானத்திற்குப் பயன்படுகிறது
·        வாந்தி, வயிற்றோட்டம் போன்றவற்றைத்  தடுக்கும்
·        உடல் வெப்பத்தைக் குறைக்கும்
·        உடலில் ஏற்படும் பித்தம் குறைவதற்குப் பயன்படுகிறது
10
 மா மரம்
·        மாம்பழத்தைக் `கோடைக்காலக் கனி` என்று அழைப்பர்
·        `மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்` என்ற பழமொழி உள்ளது
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது

·        மாம்பழம் நீர்ச்சத்தும் உயிர்ச்சத்தும் ஊட்டச் சத்தும் நிறைந்தது
·        மலச்சிக்கலைப் போக்கும்
11
கொய்யா மரம்
·        உயரம் குறைந்த மரம்
·        எளிமையாக வளர்க்கலாம்
·        சில ஆண்டுகளில் அதிகப் பலன் தரும்
·        அனைவருக்கும் ஏற்ற பழம்
·        குறைந்த விலையில் கிடைக்கும்
·        கொய்யாப் பழம் பல் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கும்
·        மலச்சிக்கலைப் போக்கும்
·        ஊட்டச்சத்து நிறைந்த பழம்
12

படம்
ஆரஞ்சு மரம்
·        எலுமிச்சைப் பழத்தின் இனத்தைச்சேர்ந்தது
·        பல வகைகள் உள்ளன
·        உலகில் பல நாடுகளில் ஆரஞ்சுப் பழம் விளைகிறது
·        ஏற்றுமதிப் பொருளாக விளங்குகிறது
·        கோடைக் காலத்திற்கு ஏற்றப் பழத்தைத் தரும்
·        நோய்வராமல் தடுக்க நினைப்பவர்களும் நோயாளிகளும் ஆரஞ்சுப் பழத்தை  உண்ணலாம்
·        நீர்ச்சத்து நிறைந்த பழம்
·        பல் நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற பழம்
·        உடலின் வெப்பத்தைக் குறைக்கும்
13
பேரிக்காய் மரம்
·        `பேரிக்காய்` பொதுவாகப் பச்சை நிறத்தில் இருக்கும்
·        காடுகளிலும் பழத்தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும்  பயிரிடப்படுகிறது
·        முக்கிய ஏற்றுமதிப் பொருளாகப் பேரிக்காய் இருக்கிறது
·        பெரிய விதை இருக்காது
·        பல வகைகள் உண்டு
·        சிறுநீர்ப் பைகளில் உள்ள கற்களை நீக்கும் தன்மை உடையது என்பர்
·        உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழம்

14
வேம்பு (வேப்ப மரம்)
·        காடுகளிலும் நாட்டுப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும்  வளர்க்கின்றனர்
·        அதிக முயற்சி இல்லாமல் வளரும் மரம்
·        அடர்த்தி நிறைந்த இலைகளை உடையது
·        பல நோய்களுக்குப் பயன்படுத்துவதால் `கிராமத்தின் மருந்தகம்` என்பர்
·        சலவைக் கட்டி செய்வதற்குப் பயன்படுகிறது
·        அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது
·        பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்குப் பயன்படுகிறது
·        குடலில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்
·        பல் ஈறு நோய்களைக் குணப்படுத்தும்
·        செரிமானத்தை உண்டாக்கும்
·        தோல்வியாதிகளுக்குப் பயன்படும்
15
முருங்கை
காடுகளிலும் வீட்டின் சுற்றுப் புறங்களிலும்  தோட்டங்களிலும் வளரும்
·        அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது
·        சளியைப் போக்கும்
·        தலைவலிக்கும் தொண்டைப் புண்ணை ஆற்றுவதற்கும் பயன்படுகிறது
·        வயிற்றில் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்தும்
·        எண்ணெய் மூட்டு வலிக்குப்  பயன்படுகிறது
16
நெல்லி
·        மலைப் பகுதிகளிலும் காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        அதியமான் என்ற வள்ளல் மூலம் இதன் சிறப்பைப் புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
·        தாகத்தைக் குறைக்கும்
·        `ஏழைகளின் ஆப்பிள்` என்பர்
·        புளிப்புச் சுவையை உடையது
·        புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது
·        உயிர்ச்சத்து நிறைந்தது
·        வயிற்றுப் போக்கைத் தடுக்கும்
·        உடல் உறுப்புகளைப் பாதுகாக்கப் பயன்படும்
17
தீருநீற்றுப் பச்சிலை
·        காட்டுப் பயிராகவும் வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·        இயற்கையாகத் தோன்றி வளரும்
·        மணம் நிறைந்தது
·        பெண்கள் பூச்சூடுவதுபோல் இதனைச் சூடிக்கொள்வர்
·        தாவரம் முழுவதும் மருந்தாகப் பயன்படுகிறது
·        காய்ச்சலைக் குறைக்கும்
·        கிருமிகளைக் கொல்லும்
·        புண்ணைக் குணப்படுத்த உதவும்
·        சளியைக் குறைக்கப் பயன்படும்
18
நொச்சி
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        வெப்பச் சூழ்நிலையில் வளரும்
·        கிராம வைத்தியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது
·        ஐந்திலை நொச்சி, மூவிலை நொச்சி என்ற பிரிவு உள்ளது
·        அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் மிக்கவை
·        தலைவலி, மூக்கடைப்புக்கு ஏற்றது
·        மார்புச் சளியைக் குறைக்கும்
19
வெற்றிலை
·        தமிழரின் பண்பாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது
·        வெப்பம் மற்றும் குளிர்ச்சி நிறைந்த பகுதிகளில் வளரும்
·        மற்றப் பயிர்களுக்கு இடையில் வளர்க்கிறார்கள் 
·        படர்கொடி இனத்தைச் சேர்ந்தது
·        வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவை கொண்ட கலவையைத் தாம்பூலம் தயாரித்தல் என்பர்
·        கிராமியப் பாடல்களிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது
·         


·        வெற்றிலையும் வேரும் மருந்தாகப் பயன்படுகிறது
·        மூச்சுக் குழல் நோய்களுக்குப் பயன்படுகிறது
·        கிருமிகளை எதிர்க்கும் குணமுடையது
·        உணவு செரிப்பதற்குப் பயன்படுகிறது
·        தண்ணீர்த் தாகத்தைக் குறைக்கும்
·        இதனை மெல்லும்போது வாயில் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்
·        குரல் வளம் பெருகும்
20
 மருதாணி
·        மணமுள்ள சிறிய மரம்
·        முட்கள் சில இருக்கும்
·        நறுமணப்பொருள்
·        உடலில் அழகிய நிறம் தீட்டப் பயன்படுகிறது
·        தலைமுடிகளுக்குச் சாயம் தீட்டுவதற்குப் பயன்படும்
·        விழாக்காலங்களிலும் மழைக் காலங்களிலும் அதிகம் பயன்படும்

·        அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் உடையவை
·        தலைவலி மற்றும் தசை வலிக்குப் பயன்படும்
·        வயிற்றுப்போக்கைத் தடுக்கும்
·        புண்களை ஆற்றும்
·        தோல்வியாதிகளைக் குணப்படுத்த உதவும்
21
புதினா
·        மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        சிறிய செடி வகையைச் சேர்ந்தது
·        துவையல் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது
·        தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது
·        செரித்தலுக்குப் பயன்படுகிறது
·        காய்ச்சலைக் குணப்படுத்தும்
·        தலைவலி வயிற்றுவலிக்குப் பயன்படும்
22

படம்
·        காய்கறிகள்
·        வெண்டைக்காய், தக்காளி, பீக்கங்காய், புடலங்காய், பூசணி அவரைக்காய், பாகற்காய் போன்றவை
·        மலைப்பயிராகவும் தோட்டப்பயிராகவும் வீட்டுப் பயிராகவும் பயிரிடப்படுகிறது
·        எல்லாக் காலங்களிலும் பல காய்கறிகள் கிடைக்கின்றன
·        ஊட்டச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்தவை
·        குடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகின்றன
·        பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன
·        உமிழ்நீர்ச் சுரப்பியைத் தூண்டும்

23
·        மிளகு
·        மலைகளிலும் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·        வெப்பம் நிறைந்த பகுதிகளில் நன்கு வளரும்
·        நறுமணப் பொருளாகவும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது
·        சமையல் பொருளாகப் பயன்படுகிறது
·        மற்றவற்றைப் பிடித்துப் படரும்  கொடி இனத்தைச் சேர்ந்தது
·        விலை மதிப்பு நிறைந்தது
·        மதிப்பு மிக்க ஏற்றுமதிப் பொருளாகப் பயன்படுகிறது
·        சிறந்த செரிமானப் பொருளாகப் பயன்படுகிறது
·        மலச்சிக்கலைப் போக்கும்
·        மூட்டுவலி, தொண்டை கரகரப்பு, தோல்வியாதி போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது
·        காய்ச்சலைக் குணப்படுத்தும்
·        கிராம வைத்தியத்தில் விசத்தை முறிக்கப் பயன்படுகிறது
24
ஆமணக்கு
·        தோட்டப்பயிராகவும் காட்டுப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது
·        ஆண்டு முழுவதும் பயிராகும்
·        சிறு மரமாக வளரும்
·        கைவிரல் வடிவத்தில் இருக்கும்
·        இலைகள் வலியைக் குறைக்கும்
·        புண்ணை ஆற்றும்
·        பேதி மருந்தாகப் பயன்படுகிறது
·        தோல் நோயைக் குணப்படுத்த உதவும்
·        உடல் வெப்பத்தைக் குறைக்கும்
25
ரோஜா
·        மணமிக்க தோட்டப்பயிர்
·        புதர்ச்செடி இனத்தைச் சேர்ந்தது
·        முட்கள் நிறைந்திருக்கும்
·        வெள்ளை, சிகப்பு போன்ற நிறங்களில் இருக்கும்
·        பன்னீர் தயாரிக்க உதவுகிறது

·        சளியைக் குறைக்கும்
·        துவர்ப்பு சக்தி உடையது
·        உடல் ஆரோக்கியத்துக்குப் பயன்படுகிறது
26
·        மல்லிகை
·        சிறந்த மணமுள்ள மலர்
·        காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் விரும்புவர்
·        வாசனைப் பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது
·        சுவாச உறுப்புகள் தூய்மை அடைய உதவும்
·        கிருமியைக் கொல்லும்
·         
27
·        சீரகம்
·        தோட்டப் பயிராகவும் காட்டுப் பயிராகவும் பயிரிடப்படுகிறது
·        நல்ல வருமானத்தைக் கொடுக்கும் பயிர்
·        சில பிரிவுகள் உள்ளன
·        கண் எரிச்சல் குறையும்
·        உடல் சூடு தணியும்
·        வாயுத் தொல்லை நீங்கும்
·        வயிற்றுவலி குறையும்
28
·        தாமரை
·        நீர்ப்பூ வகையைச் சேர்ந்தது
·        வெண்தாமரை, செந்தாமரை என்ற பிரிவுகள் உள்ளன
·        சூரியனின் தோற்றத்தைக் கண்டு மலரும் என்பர்
·        கட்டடக் கலையில் அழகுபடுத்த தாமரை உருவத்தைப் பொறிப்பர்
·        குடல் புண்ணை ஆற்றும்
·        இருதய நோய்க்கு மருந்து தயாரிக்கப் பயன்படும்
·        வாந்தியைத் தடுக்க உதவும்
·        உடல் வெப்பத்தைக் குறைக்கும்
·        தோல் நோயைக் கட்டுப்படுத்தும்
29
பலா மரம்
·        முக்கனிகளில் ஒன்று பலா
·        மலைப் பகுதிகளிலும் காடுகளிலும் வீட்டுச் சுற்றுப்புறங்களிலும் வளர்ப்பர்
·        முள் நிறைந்த பழம்
·        தோல் மிகவும் வலுவாக இருக்கும்
·        இதில் பல வகைகள் உள்ளன
·        பழம் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்
·        காய், கறி சமைப்பதற்கு உதவும்
·        உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்
·        உடல் எரிச்சலையும் களைப்பையும் குறைக்கும்
·        தாகத்தைக் குறைக்கும்
·        இலைகள் காயங்களைக் குணப்படுத்தும்
·        இலைகள் தோல் நோய்க்குப் பயன்படும்
30
    அல்லி
·        நீர்ப்பூ வகையைச் சேர்ந்தது
·        மலர்கள் அழகாக இருக்கும்
·        பல வண்ணங்களில் இருக்கும்
·        நிலவின் தோற்றத்தைக் கண்டு மலரும் என்பர்
·        இனிப்பு நீரைக் கட்டுப்படுத்தப் பயன்படும்
·        புண்களை ஆற்றும்
·        காய்ச்சலைக் குணப்படுத்தும்
·        படபடப்பு ஏற்படுவதைக் குறைக்கும்
31
நந்தியாவட்டம்
·        தோட்டத்திலும் வீட்டுச் சுற்றுப் புறங்களிலும் வளர்க்கப்படுகிறது
·        புதர்ச் செடியாகும்
·        நல்ல மணமுடையது
·        ஆண்டு முழுவதும் பூக்கும்
·        கண்நோயைக் குணப்படுத்த உதவும்
·        காயங்களைக் குணப்படுத்தும்
·        எரிச்சலைக் குறைக்கும்
·        பல் வலியைக் குணப்படுத்த இதன் வேர் உதவும்
32
சோற்றுக் கற்றாழை
·        வெப்பப் பகுதிகளில் வளரும்
·        தோட்டப் பயிராகவும் மூலிகைப் பயிராகவும் பயிரிடப்படுகிறது
·        கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும்
·        முள் இருக்கும்
·        கிராம மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்
·        பானம் தயாரிப்பதற்கு உதவுகிறது
·        காயங்களைக் குணப்படுத்த உதவும்
·        வீக்கத்தைக் குறைக்கும்
·        நோய் எதிர்ப்பு சக்தி உடையது
·        தோலைப் பாதுகாக்க உதவும்
·        தலை முடியைச் சுத்தம் செய்யப் பயன்படும்
33
வெங்காயம்
·        பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது
·        சிறிய செடி இனத்தைச் சேர்ந்தது
·        வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளிலும் பயிரிடப்படுகிறது
·        வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது
·        சமையலுக்கு அதிகம் பயன்படுகிறது
·        பூச்சிகளைக் கொல்லும்
·        மூட்டு வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது
·        இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவும்
·        சளி, காய்ச்சலைக் குறைக்கும்
·        பல் நோய் வராமல் தடுக்க உதவும்
·        நீர்க்கடுப்பைப் போக்கப் பயன்படும்
·        இரத்தக் குழாய் சிறப்பாக இயங்க உதவும்
34
பப்பாளி மரம்
·        தோட்டங்களிலும் காடுகளிலும் வளரும்
·        சிறிய மரமாக இருக்கும்
·        வலுவற்ற மரமாக இருக்கும்
·        கறி சமைப்பதற்கு இதன் காய் உதவும்
·        சுமார் இரண்டு மூன்று வருடங்கள் காய் காய்க்கும்
·        பல், எலும்பு வளர்ச்சிக்கு உதவி செய்கிறது
·        இதன் பால் வயிற்று வலியைக் குணப்படுத்த உதவும்
·        ஊட்டச் சத்து நிறைந்த பழம்
·        மலச்சிக்கலைக் குறைக்கும்
35
தென்னை மரம்
·        தோப்புகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·        பல ஆண்டுகள் காய் காய்க்கும்
·        பாதுகாப்பு அதிகம் தேவை
·        மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்படும்
·        தேங்காய், கறி சமைப்பதற்கு மிகவும் பயன்படும்

 தயாரித்தவர் சி. குருசாமி
·        இளநீர் உடல் வெப்பத்தைக் குறைக்கும்
·        சிறந்த உணவுப் பொருளாகப் பயன்படுகிறது
·        கொழுப்புச் சத்தைத் தரும்
·        மலச்சிக்கலைக் குறைக்கும்
·        வயிற்றுக் கடுப்பு குறையும்
·        வயிற்றிலுள்ள புழுக்களைக் கட்டுப்படுத்தும்
·        நாக்குப் புண், உதட்டுப் புண், வயிற்றுப் புண் குறைய உதவி செய்யும்