புதையலைத் தேடி
கண்டுபிடிப்போம்! கற்றுப் பயனடைவோம்!
வரிசை
எண் & படம்
|
மூலிகையின்
பெயரும் இயல்பும்
|
மருத்துவப்
பயன்பாடு
|
1
படம்
|
மஞ்சள்
·
சிறந்த மணம் உள்ளது
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·
விரல் மஞ்சள்,
கிழங்கு மஞ்சள் என்று வகைப்படுத்துவர்
·
தமிழ்நாட்டில் ஈரோடு
மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது
|
·
கிருமியைக் கொல்லும்
·
சளித்தொல்லையைப் போக்குதல்
·
மூக்கடைப்பை நீக்கும்
·
உடலின் வெப்பத்தைக் குறைக்கும்
·
சில மருந்துகள் தயாரிப்பதற்கு
மஞ்சள் கலவைப் பொருளாகப் பயன்படுகிறது
|
2
|
வாழை மரம்
·
நீர்வளம் அதிகம் உள்ள
பகுதிகளில் வளரும்
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் வளரும்
·
பக்கக் கன்றுகள் உருவாகிப் பல
ஆண்டுகள் பலன் தரும்
·
குறிஞ்சி,
முல்லை, மருதம் என்ற மூன்று
பெருநிலங்களிலும் வாழை வளரும்
·
மலைவாழை,
நாட்டுவாழை என்ற பிரிவுகள் உள்ளன
|
·
வாழைப்பழம் மலச்சிக்கலைப்
போக்கும்
·
வழைத்தண்டு மற்றும் வாழைப்பூ
சிறுநீர்க்கோளாற்றை நீக்கும்
·
வாழைக்காய் ஊட்டச்சத்து
நிறைந்தது
·
வாழைப்பழத்தில் நார்ச்சத்து
அதிகம் உள்ளதால் குடல் உறுப்புகள் வளம் பெறும்
·
வாழை இலையில் பச்சையம் அதிகம்
உள்ளது
·
நார்ச்சத்து அதிகம் உள்ளது
|
3
|
கற்பூரவல்லி
·
தோட்டப்பயிராகும்
·
சதைப்பற்று நிறைந்தது
·
மணம் நிறைந்த செடி
·
கிராம மக்கள் அதிகம் பயன்படுத்துவர்
|
·
வயிற்றுக் கோளாற்றைக்
குறைக்கும்
·
காய்ச்சல் மற்றும் இருமலைக்
குறைக்கும்
·
தலைவலிக்குப் பயன்படும்
·
குடல் சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு உதவிசெய்யும்
|
4
|
செம்பருத்தி
·
தோட்டங்களிலும் வேலிகளிலும்
காணப்படும்
·
இதன் பூ,
சிவப்பு, மஞ்சள்,
வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும்
|
·
தலையில் ஏற்படும் வழுக்கையைக்
குறைப்பதோடு முடி உதிர்வதையும் குறைக்கும்
·
மூச்சுக்குழல் நோயைக்
குணப்படுத்த உதவும்
·
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
|
5
|
துளசி
·
மழைக்காலத்தில் காணப்படும்
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் வளர்ப்பர்
·
வறண்ட பகுதிகளில்கூட வளரும்
|
·
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
உள்ளது
·
சளி,
காய்ச்சல், தலைவலி,
உடல்வலி போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுகிறது
·
காரத்தன்மை அளிக்கிறது
|
6
|
கரும்பு
·
தோட்டப் பயிராகும்
·
அதிகம் தண்ணீர் தேவைப்படும்
·
ஒருமுறை பயிரிட்டால் சில
ஆண்டுகள் தொடர்ந்து கரும்பு உருவாகும்
·
தமிழ் இலக்கியங்கள் பலவற்றில்
குறிப்பிடப்பட்டுள்ளது
·
வெள்ளைக் கரும்பு,
செங்கரும்பு என்ற பிரிவுகள் உள்ளன
|
·
குளிர்ச்சி தன்மை உடையது
·
மஞ்சள் காமாலை அம்மை போன்ற
நோய்கள் வராமல் தடுக்கிறது
·
உடலுக்குத் தேவையான இனிப்புச்
சத்தைத் தருகிறது
|
7
|
இஞ்சி
·
இஞ்சி எங்குத் தோன்றியது என்ற
வரலாறு தெரியவில்லை
·
இந்தியாவிலும் சீனாவிலும்
அதிகம் பயிரிடப்படுகிறது
·
பழங்காலத்தில் முக்கிய
ஏற்றுமதிப் பொருளாக இருந்துள்ளது
|
·
உணவு செரிப்பதற்குப்
பயன்படுகிறது
·
தலைவலி,
வயிற்று வலியைப் போக்குகிறது
·
வாந்தி,
தலைச்சுற்றுக்குப் பயன்படுகிறது
|
8
|
கீரைகள்
·
நீர்வளம் நிறைந்த இடங்களில்
இயற்கையாக வளரும்
·
சிறந்த ஏற்றுமதிப் பொருளாக
விளங்குகிறது
·
ஏழைகளின் உணவுப் பொருளாக
இருக்கிறது
·
உணவு தயாரிப்பதில் முக்கியப்
பொருளாக இருக்கிறது
|
·
கண்பார்வைக்கு ஏற்றவை
·
மலச்சிக்கலை நீக்கும்
·
குடல் உறுப்புகளுக்குச்
சிறந்தது
·
உயிர்ச்சத்துகள் அளிக்கிறது
|
9
|
எலுமிச்சை மரம்
·
குற்றுச் செடி வகையைச்
சேர்ந்தது
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·
பல வடிவங்களில் இருக்கும்
·
அதிகச் செலவில்லாமல் வளரும்
பயிர்
·
ஊறுகாய் செய்வதற்குப்
பயன்படுகிறது
·
உணவுப் பொருள் தயாரிப்பதில்
முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது
·
`இராஜக்
கனி` என்று அழைக்கப்படுகிறது
|
·
உணவு செரிமானத்திற்குப்
பயன்படுகிறது
·
வாந்தி,
வயிற்றோட்டம் போன்றவற்றைத் தடுக்கும்
·
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
·
உடலில் ஏற்படும் பித்தம்
குறைவதற்குப் பயன்படுகிறது
|
10
|
மா மரம்
·
மாம்பழத்தைக் `கோடைக்காலக்
கனி` என்று அழைப்பர்
·
`மாதா
ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்` என்ற
பழமொழி உள்ளது
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
|
·
மாம்பழம் நீர்ச்சத்தும்
உயிர்ச்சத்தும் ஊட்டச் சத்தும் நிறைந்தது
·
மலச்சிக்கலைப் போக்கும்
|
11
|
கொய்யா மரம்
·
உயரம் குறைந்த மரம்
·
எளிமையாக வளர்க்கலாம்
·
சில ஆண்டுகளில் அதிகப் பலன்
தரும்
·
அனைவருக்கும் ஏற்ற பழம்
·
குறைந்த விலையில் கிடைக்கும்
|
·
கொய்யாப் பழம் பல்
சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கும்
·
மலச்சிக்கலைப் போக்கும்
·
ஊட்டச்சத்து நிறைந்த பழம்
|
12
படம்
|
ஆரஞ்சு மரம்
·
எலுமிச்சைப் பழத்தின்
இனத்தைச்சேர்ந்தது
·
பல வகைகள் உள்ளன
·
உலகில் பல நாடுகளில் ஆரஞ்சுப்
பழம் விளைகிறது
·
ஏற்றுமதிப் பொருளாக
விளங்குகிறது
·
கோடைக் காலத்திற்கு ஏற்றப்
பழத்தைத் தரும்
|
·
நோய்வராமல் தடுக்க
நினைப்பவர்களும் நோயாளிகளும் ஆரஞ்சுப் பழத்தை உண்ணலாம்
·
நீர்ச்சத்து நிறைந்த பழம்
·
பல் நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற
பழம்
·
உடலின் வெப்பத்தைக் குறைக்கும்
|
13
|
பேரிக்காய் மரம்
·
`பேரிக்காய்`
பொதுவாகப் பச்சை நிறத்தில் இருக்கும்
·
காடுகளிலும்
பழத்தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும்
பயிரிடப்படுகிறது
·
முக்கிய ஏற்றுமதிப் பொருளாகப் பேரிக்காய்
இருக்கிறது
·
பெரிய விதை இருக்காது
·
பல வகைகள் உண்டு
|
·
சிறுநீர்ப் பைகளில் உள்ள
கற்களை நீக்கும் தன்மை உடையது என்பர்
·
உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழம்
|
14
|
வேம்பு (வேப்ப மரம்)
·
காடுகளிலும்
நாட்டுப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வளர்க்கின்றனர்
·
அதிக முயற்சி இல்லாமல் வளரும்
மரம்
·
அடர்த்தி நிறைந்த இலைகளை
உடையது
·
பல நோய்களுக்குப் பயன்படுத்துவதால்
`கிராமத்தின் மருந்தகம்`
என்பர்
·
சலவைக் கட்டி செய்வதற்குப்
பயன்படுகிறது
|
·
அனைத்துப் பாகங்களும்
மருந்தாகப் பயன்படுகிறது
·
பூச்சிக்கொல்லி மருந்து
தயாரிப்பதற்குப் பயன்படுகிறது
·
குடலில் உள்ள பூச்சிகளைக்
கொல்லும்
·
பல் ஈறு நோய்களைக்
குணப்படுத்தும்
·
செரிமானத்தை உண்டாக்கும்
·
தோல்வியாதிகளுக்குப் பயன்படும்
|
15
|
முருங்கை
காடுகளிலும் வீட்டின் சுற்றுப் புறங்களிலும் தோட்டங்களிலும் வளரும் |
·
அனைத்துப் பாகங்களும்
மருந்தாகப் பயன்படுகிறது
·
சளியைப் போக்கும்
·
தலைவலிக்கும் தொண்டைப் புண்ணை
ஆற்றுவதற்கும் பயன்படுகிறது
·
வயிற்றில் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்தும்
·
எண்ணெய் மூட்டு வலிக்குப் பயன்படுகிறது
|
16
|
நெல்லி
·
மலைப் பகுதிகளிலும்
காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·
அதியமான் என்ற வள்ளல் மூலம்
இதன் சிறப்பைப் புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
·
தாகத்தைக் குறைக்கும்
·
`ஏழைகளின்
ஆப்பிள்` என்பர்
·
புளிப்புச் சுவையை உடையது
|
·
புண்களைக் குணப்படுத்தப்
பயன்படுகிறது
·
உயிர்ச்சத்து நிறைந்தது
·
வயிற்றுப் போக்கைத் தடுக்கும்
·
உடல் உறுப்புகளைப் பாதுகாக்கப்
பயன்படும்
|
17
|
தீருநீற்றுப் பச்சிலை
·
காட்டுப் பயிராகவும் வீட்டுத்
தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது
·
இயற்கையாகத் தோன்றி வளரும்
·
மணம் நிறைந்தது
·
பெண்கள் பூச்சூடுவதுபோல்
இதனைச் சூடிக்கொள்வர்
|
·
தாவரம் முழுவதும் மருந்தாகப்
பயன்படுகிறது
·
காய்ச்சலைக் குறைக்கும்
·
கிருமிகளைக் கொல்லும்
·
புண்ணைக் குணப்படுத்த உதவும்
·
சளியைக் குறைக்கப் பயன்படும்
|
18
|
நொச்சி
·
காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும்
வளரும்
·
வெப்பச் சூழ்நிலையில் வளரும்
·
கிராம வைத்தியத்தில் முக்கிய
இடத்தைப் பெற்றுள்ளது
·
ஐந்திலை நொச்சி,
மூவிலை நொச்சி என்ற பிரிவு உள்ளது
|
·
அனைத்துப் பாகங்களும்
மருத்துவப் பயன் மிக்கவை
·
தலைவலி,
மூக்கடைப்புக்கு ஏற்றது
·
மார்புச் சளியைக் குறைக்கும்
|
19
|
வெற்றிலை
·
தமிழரின் பண்பாட்டில் மிக
முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது
·
வெப்பம் மற்றும் குளிர்ச்சி
நிறைந்த பகுதிகளில் வளரும்
·
மற்றப் பயிர்களுக்கு இடையில்
வளர்க்கிறார்கள்
·
படர்கொடி இனத்தைச் சேர்ந்தது
·
வெற்றிலை,
பாக்கு, சுண்ணாம்பு ஆகியவை கொண்ட
கலவையைத் தாம்பூலம் தயாரித்தல் என்பர்
·
கிராமியப் பாடல்களிலும்
சிறப்பிடம் பெற்றுள்ளது
·
|
·
வெற்றிலையும் வேரும்
மருந்தாகப் பயன்படுகிறது
·
மூச்சுக் குழல் நோய்களுக்குப்
பயன்படுகிறது
·
கிருமிகளை எதிர்க்கும்
குணமுடையது
·
உணவு செரிப்பதற்குப்
பயன்படுகிறது
·
தண்ணீர்த் தாகத்தைக்
குறைக்கும்
·
இதனை மெல்லும்போது வாயில்
உமிழ்நீர் அதிகம் சுரக்கும்
·
குரல் வளம் பெருகும்
|
20
|
மருதாணி
·
மணமுள்ள சிறிய மரம்
·
முட்கள் சில இருக்கும்
·
நறுமணப்பொருள்
·
உடலில் அழகிய நிறம் தீட்டப் பயன்படுகிறது
·
தலைமுடிகளுக்குச் சாயம்
தீட்டுவதற்குப் பயன்படும்
·
விழாக்காலங்களிலும் மழைக்
காலங்களிலும் அதிகம் பயன்படும்
|
·
அனைத்துப் பகுதிகளும்
மருத்துவக் குணம் உடையவை
·
தலைவலி மற்றும் தசை வலிக்குப்
பயன்படும்
·
வயிற்றுப்போக்கைத் தடுக்கும்
·
புண்களை ஆற்றும்
·
தோல்வியாதிகளைக் குணப்படுத்த
உதவும்
|
21
|
புதினா
·
மலைப்பகுதிகளிலும் காடுகளிலும்
வீட்டுத் தோட்டங்களிலும் வளரும்
·
சிறிய செடி வகையைச் சேர்ந்தது
·
துவையல் தயாரிப்பதற்குப்
பயன்படுகிறது
·
தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது
|
·
செரித்தலுக்குப் பயன்படுகிறது
·
காய்ச்சலைக் குணப்படுத்தும்
·
தலைவலி வயிற்றுவலிக்குப்
பயன்படும்
|
22
படம்
|
·
காய்கறிகள்
·
வெண்டைக்காய்,
தக்காளி, பீக்கங்காய்,
புடலங்காய், பூசணி அவரைக்காய்,
பாகற்காய் போன்றவை
·
மலைப்பயிராகவும்
தோட்டப்பயிராகவும் வீட்டுப் பயிராகவும் பயிரிடப்படுகிறது
·
எல்லாக் காலங்களிலும் பல
காய்கறிகள் கிடைக்கின்றன
|
·
ஊட்டச்சத்தும் உயிர்ச்சத்தும்
நிறைந்தவை
·
குடல் உறுப்புகள் நன்கு செயல்பட
உதவுகின்றன
·
பல்வேறு நோய்கள் ஏற்படாமல்
தடுக்கின்றன
·
உமிழ்நீர்ச் சுரப்பியைத்
தூண்டும்
|
23
|
·
மிளகு
·
மலைகளிலும் தோட்டங்களிலும்
பயிரிடப்படுகிறது
·
வெப்பம் நிறைந்த பகுதிகளில்
நன்கு வளரும்
·
நறுமணப் பொருளாகவும் சிறந்த
மருந்தாகவும் பயன்படுகிறது
·
சமையல் பொருளாகப் பயன்படுகிறது
·
மற்றவற்றைப் பிடித்துப்
படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது
·
விலை மதிப்பு நிறைந்தது
·
மதிப்பு மிக்க ஏற்றுமதிப்
பொருளாகப் பயன்படுகிறது
|
·
சிறந்த செரிமானப் பொருளாகப்
பயன்படுகிறது
·
மலச்சிக்கலைப் போக்கும்
·
மூட்டுவலி,
தொண்டை கரகரப்பு, தோல்வியாதி
போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது
·
காய்ச்சலைக் குணப்படுத்தும்
·
கிராம வைத்தியத்தில் விசத்தை
முறிக்கப் பயன்படுகிறது
|
24
|
ஆமணக்கு
·
தோட்டப்பயிராகவும்
காட்டுப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது
·
ஆண்டு முழுவதும் பயிராகும்
·
சிறு மரமாக வளரும்
·
கைவிரல் வடிவத்தில் இருக்கும்
|
·
இலைகள் வலியைக் குறைக்கும்
·
புண்ணை ஆற்றும்
·
பேதி மருந்தாகப் பயன்படுகிறது
·
தோல் நோயைக் குணப்படுத்த
உதவும்
·
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
|
25
|
ரோஜா
·
மணமிக்க தோட்டப்பயிர்
·
புதர்ச்செடி இனத்தைச்
சேர்ந்தது
·
முட்கள் நிறைந்திருக்கும்
·
வெள்ளை,
சிகப்பு போன்ற நிறங்களில் இருக்கும்
·
பன்னீர் தயாரிக்க உதவுகிறது
|
·
சளியைக் குறைக்கும்
·
துவர்ப்பு சக்தி உடையது
·
உடல் ஆரோக்கியத்துக்குப்
பயன்படுகிறது
|
26
|
·
மல்லிகை
·
சிறந்த மணமுள்ள மலர்
·
காடுகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் வளரும்
·
பெரும்பாலான இந்தியர்கள்
மிகவும் விரும்புவர்
·
வாசனைப் பொருள்
தயாரிப்பதற்குப் பயன்படுகிறது
|
·
சுவாச உறுப்புகள் தூய்மை அடைய
உதவும்
·
கிருமியைக் கொல்லும்
·
|
27
|
·
சீரகம்
·
தோட்டப் பயிராகவும் காட்டுப்
பயிராகவும் பயிரிடப்படுகிறது
·
நல்ல வருமானத்தைக் கொடுக்கும்
பயிர்
·
சில பிரிவுகள் உள்ளன
|
·
கண் எரிச்சல் குறையும்
·
உடல் சூடு தணியும்
·
வாயுத் தொல்லை நீங்கும்
·
வயிற்றுவலி குறையும்
|
28
|
·
தாமரை
·
நீர்ப்பூ வகையைச் சேர்ந்தது
·
வெண்தாமரை,
செந்தாமரை என்ற பிரிவுகள் உள்ளன
·
சூரியனின் தோற்றத்தைக் கண்டு
மலரும் என்பர்
·
கட்டடக் கலையில் அழகுபடுத்த
தாமரை உருவத்தைப் பொறிப்பர்
|
·
குடல் புண்ணை ஆற்றும்
·
இருதய நோய்க்கு மருந்து
தயாரிக்கப் பயன்படும்
·
வாந்தியைத் தடுக்க உதவும்
·
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
·
தோல் நோயைக் கட்டுப்படுத்தும்
|
29
|
பலா மரம்
·
முக்கனிகளில் ஒன்று பலா
·
மலைப் பகுதிகளிலும்
காடுகளிலும் வீட்டுச் சுற்றுப்புறங்களிலும் வளர்ப்பர்
·
முள் நிறைந்த பழம்
·
தோல் மிகவும் வலுவாக இருக்கும்
·
இதில் பல வகைகள் உள்ளன
·
பழம் மிகவும் சுவையாகவும்
மணமாகவும் இருக்கும்
·
காய்,
கறி சமைப்பதற்கு உதவும்
|
·
உடலுக்குக் குளிர்ச்சியைத்
தரும்
·
உடல் எரிச்சலையும் களைப்பையும்
குறைக்கும்
·
தாகத்தைக் குறைக்கும்
·
இலைகள் காயங்களைக்
குணப்படுத்தும்
·
இலைகள் தோல் நோய்க்குப்
பயன்படும்
|
30
|
அல்லி
·
நீர்ப்பூ வகையைச் சேர்ந்தது
·
மலர்கள் அழகாக இருக்கும்
·
பல வண்ணங்களில் இருக்கும்
·
நிலவின் தோற்றத்தைக் கண்டு
மலரும் என்பர்
|
·
இனிப்பு நீரைக்
கட்டுப்படுத்தப் பயன்படும்
·
புண்களை ஆற்றும்
·
காய்ச்சலைக் குணப்படுத்தும்
·
படபடப்பு ஏற்படுவதைக்
குறைக்கும்
|
31
|
நந்தியாவட்டம்
·
தோட்டத்திலும் வீட்டுச்
சுற்றுப் புறங்களிலும் வளர்க்கப்படுகிறது
·
புதர்ச் செடியாகும்
·
நல்ல மணமுடையது
·
ஆண்டு முழுவதும் பூக்கும்
|
·
கண்நோயைக் குணப்படுத்த உதவும்
·
காயங்களைக் குணப்படுத்தும்
·
எரிச்சலைக் குறைக்கும்
·
பல் வலியைக் குணப்படுத்த இதன்
வேர் உதவும்
|
32
|
சோற்றுக் கற்றாழை
·
வெப்பப் பகுதிகளில் வளரும்
·
தோட்டப் பயிராகவும் மூலிகைப்
பயிராகவும் பயிரிடப்படுகிறது
·
கடற்கரைப் பகுதிகளில் அதிகம்
காணப்படும்
·
முள் இருக்கும்
·
கிராம மக்கள் அதிகம்
பயன்படுத்துகின்றனர்
·
பானம் தயாரிப்பதற்கு உதவுகிறது
|
·
காயங்களைக் குணப்படுத்த உதவும்
·
வீக்கத்தைக் குறைக்கும்
·
நோய் எதிர்ப்பு சக்தி உடையது
·
தோலைப் பாதுகாக்க உதவும்
·
தலை முடியைச் சுத்தம் செய்யப்
பயன்படும்
|
33
|
வெங்காயம்
·
பெரும்பாலான நாடுகளில்
பயிரிடப்படுகிறது
·
சிறிய செடி இனத்தைச் சேர்ந்தது
·
வீட்டுத் தோட்டங்களிலும்
காடுகளிலும் பயிரிடப்படுகிறது
·
வீட்டு மருந்தாகப்
பயன்படுகிறது
·
சமையலுக்கு அதிகம்
பயன்படுகிறது
|
·
பூச்சிகளைக் கொல்லும்
·
மூட்டு வலிக்கு மருந்தாகப்
பயன்படுகிறது
·
இரத்த ஓட்டத்தைச் சீராக்க
உதவும்
·
சளி,
காய்ச்சலைக் குறைக்கும்
·
பல் நோய் வராமல் தடுக்க உதவும்
·
நீர்க்கடுப்பைப் போக்கப்
பயன்படும்
·
இரத்தக் குழாய் சிறப்பாக இயங்க
உதவும்
|
34
|
பப்பாளி மரம்
·
தோட்டங்களிலும் காடுகளிலும்
வளரும்
·
சிறிய மரமாக இருக்கும்
·
வலுவற்ற மரமாக இருக்கும்
·
கறி சமைப்பதற்கு இதன் காய்
உதவும்
·
சுமார் இரண்டு மூன்று
வருடங்கள் காய் காய்க்கும்
|
·
பல்,
எலும்பு வளர்ச்சிக்கு உதவி செய்கிறது
·
இதன் பால் வயிற்று வலியைக்
குணப்படுத்த உதவும்
·
ஊட்டச் சத்து நிறைந்த பழம்
·
மலச்சிக்கலைக் குறைக்கும்
|
35
|
தென்னை மரம்
·
தோப்புகளிலும் வீட்டுத்
தோட்டங்களிலும் வளரும்
·
பல ஆண்டுகள் காய் காய்க்கும்
·
பாதுகாப்பு அதிகம் தேவை
·
மரத்தின் அனைத்துப் பாகங்களும்
பயன்படும்
·
தேங்காய்,
கறி சமைப்பதற்கு மிகவும் பயன்படும்
|
·
இளநீர் உடல் வெப்பத்தைக்
குறைக்கும்
·
சிறந்த உணவுப் பொருளாகப்
பயன்படுகிறது
·
கொழுப்புச் சத்தைத் தரும்
·
மலச்சிக்கலைக் குறைக்கும்
·
வயிற்றுக் கடுப்பு குறையும்
·
வயிற்றிலுள்ள புழுக்களைக்
கட்டுப்படுத்தும்
·
நாக்குப் புண்,
உதட்டுப் புண், வயிற்றுப் புண் குறைய
உதவி செய்யும்
|
No comments:
Post a Comment