Sunday, July 1, 2012


சுயவிடைக் கருத்தறிதல் (வினா விடை)

இலட்சியமும் மனித வாழ்க்கையும்

மனிதனின் பொதுவான மனப்போக்கு இலட்சியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். எனவே, உலகில் வாழும் பெரும்பாலோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்றே நினைப்பர். இதனை நினைத்தே அவர்களுடைய எதிர்கால குறிக்கோளை வகுப்பார்கள். நாம் மேற்கொள்ளும் இலட்சியத்தில்  தோல்வி அடையாமல் இருப்பதற்கு முதலில் நம் இலட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும். இதனைப் பற்றிக் கூறவந்த திருவள்ளுவர்,

              ``எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

                        எண்ணுவம் என்பது இழுக்கு’’

 என்று குறிப்பிடுகிறார். அதாவது, செய்யத்தொடங்கும் எச்செயலையும் நன்றாக ஆராய்ந்த பின்னரே அதனைத் தொடங்கவேண்டும். அச்செயலைச் செய்யத்தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும் என்று கூறுகிறார். எனவே, நம்முடைய  இலக்கு என்னவென்பதையும்   அதனை அடையும் வழிகள் எவை என்பதையும் பற்றி நன்கு சிந்தித்த பின்னரே அதனை அடையும்  செயலில் ஈடுபடவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.      

இலட்சியத்தை அடைய முயலும்போது ஒருசில நேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படும். அப்பிரச்சினைகள், அதனை அடைவதற்குத் தடைகளாய் இருக்கும். எனவே, எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட இலட்சியத்தை அடையத் தொடங்கும் முன்னர், ஏற்படவிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முன்கூட்டியே ஊகிக்கவேண்டும்.  அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இவற்றின் மூலம் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கலாம்.


இலட்சியத்தால் உயர்ந்தவர்

    வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு தடைகளை நீக்கி இலட்சியத்தை அடைந்தவர்கள்  பலர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் முனைவர் மு. வரதராசனார் என்று அழைக்கப்படும் மு.வ. இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். அவர், இளமையில் சிறந்த தமிழறிஞர் ஆகவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவருடைய நண்பர்கள் கூறுவர்.  மு.வ தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஓர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர், தமிழ்மொழியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் தமிழ் அறிஞர்கள் பலரிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியத்தைப் பயின்றார்.



மு.வரதராசனார் தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்தார். இறுதியில் அவர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணி ஆற்றினார்.  மு.வ ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். அதனால், என்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும்.  அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் நம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



எனவே, மு. வரதராசனாரைப் போல் நமக்கென்று ஓர் இலட்சியத்தை வகுத்து அதனை அடைவதற்கு இடைவிடாது முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.


வினாக்கள்



Q1
ஒருவரின் குறிக்கோள் எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________




Q2
ஒரு செயலில் ஈடுபடும் முன்னர் நாம் செய்யவேண்டிவை யாவை?

_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Q4
இவ்வுலகில் நிலைத்த இடத்தைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?
_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________






Q5
மு.வ தமிழ்மொழியின் மீது அதிகப் பற்றுக்கொண்டவர் என்பதை எவ்வாறு அறியலாம்?
_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



பின்வரும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை விடைத்தாளில் எழுதவும்.



Q6
எதிர்கால




Q7
நினைப்பது




Q8
ஏற்படவிருக்கும்




Q9
சமீபத்தில்


  

Q10
திண்ணம்


  

தொடர்நடவடிக்கை

கண்டு மகிழ்ந்த திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, நம் நிலைய மாணவர்கள் தயாரித்த குறும்படம், படித்துத் தெரிந்த கதைப் புத்தகப் பனுவல் ஆகியவற்றில் ஒன்றிற்கு மட்டும் மாறுபட்ட வினாக்களைத் (ஏன்?, எதற்கு?, எப்படி?, காரணம் என்ன?, என்னென்ன?, யாவை?, எதனால்?...) தொகுத்து வருக.              

             

இப்பாடத்திற்கு உதவிய இணையப் பக்கங்களுக்கும் நூல்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.




முற்றும்



முயல்வோம்!                                                    முழுமையான வெற்றி பெறுவோம்!















No comments:

Post a Comment