Wednesday, July 11, 2012

மாதிரி மின்னஞ்சல்

சென்று மகிழ்ந்த ஒரு வெளிநாட்டுப் பயணம் பற்றி நண்பனிடம் எழுத வேண்டுதல்

முதலில் அனுப்புநர், பெறுநரை  எழுதிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் இருக்கும்.



அன்புள்ள மணிக்கு,

உன் கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரம் அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வீட்டில் உள்ள தாத்தா பாட்டி எப்படி இருக்கிறார்கள். உன் அன்புத் தம்பியைக் கேட்டதாகச் சொல்லவும். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நலத்துடன் இருக்கிறோம்.

நாங்கள் செல்ல இருக்கும் கல்விப் பயணம் பற்றி நீ எழுதும்படி கடிதம் எழுதியிருந்தாய்.  

நாங்கள் இந்தியாவிலுள்ள கோயம்புத்தூர் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.  அங்குள்ள பள்ளிக்கூடங்களில் சிலவற்றையும் பாரதியார் பல்கலைக் கழகத்தையும் பார்க்க விருக்கிறோம். அந்த நாட்டு மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மேலும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் பற்றி அறிந்துகொள்ளவிருக்கிறோம். இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறோம்.

இக்கல்விப் பயணம் எங்கள் வாழ்க்கைக்கும்  மிகவும் பயன் அளிக்கும் என்று நம்புகிறோம்.

நீ சென்று மகிழ்ந்த வெளிநாட்டுப் பயணம் ஒன்றைப் பற்றி எழுதுக.

இப்படிக்கு
அன்புள்ள

கனி

No comments:

Post a Comment