Saturday, September 13, 2014




உயர்தமிழ் 3 தாள் 1 மாதிரி வினாத்தாள் 


மாதிரித் தாள் 2014
உயர்நிலை 3 உயர்தமிழ்
தமிழ் – தாள் 1
நாள்:                                            மொத்த மதிப்பெண்கள்: 90
                                                             நேரம்: 2 மணி



குறிப்பு: ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.


``’’ பிரிவு (மின்னஞ்சல்) 



பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 130 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும்.                  (20 மதிப்பெண்கள்)


  
1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
  எழுதவும்.



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSpNgmXGv52xQ6xFK9eN7Hud9JBIYIdDrGNi3klVl_tmxbEz306qFmsi_o File     Edit      View     Tools      Message     Help        

அனுப்புநர்
kamali @hotmail.com  
பெறுநர்
mala @gmail.com
தேதி
15.09.2014
பொருள்
பார்க்கத் தகுந்த இடங்களும் நன்மைகளும்

மாலா,
வணக்கம்.

நாங்கள் நலம். உன் குடும்பத்தினர் அனைவரும் நலமா? அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பண்பாட்டுத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். உங்கள் நாட்டில் பண்பாட்டுத் திருவிழா எப்படி நடைபெறும் என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் எங்கள் சமூக மன்றத்தின் சார்பில் மாபெரும்  திருவிழா ஒன்று நடைபெற உள்ளது.

உங்கள் நாட்டில் நடைபெறும் திருவிழாவினைக் கொண்டாட எப்படித் திட்டமிட்டீர்கள். திருவிழாக் கொண்டாட்டக்குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருந்தார்கள்.  அவர்களின் பணி என்னென்ன என்பன போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவை எங்களுக்குத் திட்டமிடும்போது மிகவும் உதவி செய்யும்.  

பதிலினை மின்னஞ்சல் ஒன்றில் நீ எனக்கு விளக்கி எழுதவும்.  


நன்றி.
கமலி












2 பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

உன் குடியிருப்புப் பேட்டையில் விளையாட்டுத் திடல் இல்லை. புதிதாக விளையாட்டுத்திடல் ஒன்றை அமைத்துத் தரும்படியும் அதன் மூலம் உன் வட்டாரவாசிகள் அடையவிருக்கும் பயன்கள் குறித்தும் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று எழுது.
மின்னஞ்சல் முகவரி:
அனுப்புநர்:      selva @hotmail.com
 பெறுநர்:    moorthy @gmail.com

``’’ பிரிவு (கட்டுரை)


பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 260 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.                                       (70 மதிப்பெண்கள்)


 3
உன மனநிலையைப் பாதித்த ஒரு சம்பவத்தையும் அதிலிருந்து நீ கற்றுக்கொண்ட பாடத்தையும் விளக்கி எழுது.

        
4
மூத்தகுடிமக்கள் நம் நாட்டிற்குச் செய்துள்ள நன்மைகளையும் அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும் விளக்கி எழுது.

5
ஒருவர் தம் அடையாளத்தை அறிந்துகொள்ள தாய்மொழி மிகவும் உதவிசெய்துவருகிறது கருத்துரைக்க.


முற்றும்
































அலுவலகக் கடிதம் மாதிரி


2 பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.


உன் குடியிருப்புப் பேட்டையில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. அங்குப் பயிற்சி செய்வதற்குப் பலர் வருகின்றனர். அவர்களுள் ஒருசிலர் பயிற்சிக்கூடத்தில் இருக்கும் கருவிகளைச் சேதம் செய்கின்றனர். அவர்களுக்கு அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்பதை நீ உணர்ந்துகொள்கிறாய். எனவே அவர்களின் செயல்பாடுகள் குறித்துச் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று எழுது.




http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSpNgmXGv52xQ6xFK9eN7Hud9JBIYIdDrGNi3klVl_tmxbEz306qFmsi_o File     Edit      View     Tools      Message     Help        

அனுப்புநர்
kamali @hotmail.com  
பெறுநர்
mala @gmail.com
தேதி
15.09.2014
பொருள்
பயிற்சிக் கருவிகளைப் பாதுகாப்பது குறித்து எழுதுதல் 

மாலா,
வணக்கம்.

நான் சிராங்கூன் வட்டாரத்தில் சுமார் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் பெயர் கமலி. நான் உயர்நிலை 3-இல் படித்து வருகிறேன். எங்கள் வட்டாத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெறும் குறும்புச் செயல்கள் பற்றி இக்கடிதத்தில் வட்டார வாசிகள் சார்பில் குறிப்பிட விருக்கிறேன். 

எங்கள் வட்டாரத்தில் பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு வட்டார வாசிகளின் சார்பில் முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் எங்கள் வட்டாரத்தில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைத்துத்தந்துள்ளீர்கள். அக்கூடத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை பல பயிற்சிகளைச் செய்து வருகின்றனர். இவற்றின் மூலம் எங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும், இவ்வட்டாரத்தில் வசிக்கும் முதியோர்கள் பலர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இக்கூடத்தில் செய்து வரும் பயிற்சிகள் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று கூறும்  திருமூலர் கூற்றை மெய்யாக்குவதற்கு எங்களுக்கு மிகவும் உதவி வருகின்றன.  

சில நாட்களாக அருகில் உள்ள வட்டாரத்தில் வசிக்கும் சிறுவர்கள் பலர் இங்கு வந்து உடற்பயிற்சி செய்வதுடன் பயிற்சிக்கூடத்தில் உள்ள பயிற்சிக்கருவிகளைச் சேதம் செய்து வருகின்றனர். இவர்களின் குறும்புத்தனம் எங்களுக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. நாங்கள் அவர்களிடம் பல முறை கூறியும் அவர்கள் தொடர்ந்து குறும்புத்தனம் செய்து வருகின்றனர். அவர்களுக்குப் பொதுச்சொத்தைப் பாதுகாக்கும் மனம் இல்லை. அவர்களைக் கண்காணிக்கும் வண்ணம் கேமராக்களை உடற்பயிற்சிக் கூடத்தில் பொருத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவற்றின் மூலம் பயிற்சிக் கருவிகளை நாசம் செய்யும் சிறுவர்களைப் பிடித்து அவர்களுக்குக் காவல்துறையின் மூலம் தக்க அறிவுரை கூறும்படி அன்புடன் வேண்டுகிறேன்.     

  

நன்றி.
கமலி



உயர்நிலை 1 உயர்தமிழ் மாணவருக்கான மாதிரி வினா


மாதிரித் தாள் 2014
உயர்நிலை 1 உயர்தமிழ்
தமிழ் – தாள் 1
நாள்:                                              மொத்த மதிப்பெண்கள்: 60
                                                             நேரம்: 2 மணி



குறிப்பு: ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.


``’’ பிரிவு (மின்னஞ்சல்)


பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 100 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும்.                (20 மதிப்பெண்கள்)


  
1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
  எழுதவும்.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSpNgmXGv52xQ6xFK9eN7Hud9JBIYIdDrGNi3klVl_tmxbEz306qFmsi_o File     Edit      View     Tools      Message     Help        

அனுப்புநர்
kamali @hotmail.com  
பெறுநர்
mala @gmail.com
பொருள்
பார்க்கத் தகுந்த இடங்களும் நன்மைகளும்

மாலா,
வணக்கம்.

நாங்கள் நலம். உன் குடும்பத்தினர் அனைவரும் நலமா? அடுத்த மாதம் எங்கள் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் வரத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு வேண்டிய திட்டத்தைச் செய்து விட்டோம். எங்கள் தாத்தா, பாட்டியையும் சிங்கப்பூருக்கு எங்களுடன் அழைத்து வருகிறோம். அவர்களுக்குச் சிங்கப்பூர் மிகவும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் பார்க்கத் தகுந்த இடங்கள் யாவை என்பதையும் அவற்றின் மூலம் எத்தகைய நன்மைகளைப் பெறலாம் என்பதையும் மின்னஞ்சல் ஒன்றில் நீ எனக்கு விளக்கி எழுதவும்.  


நன்றி.
கமலி


2 பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.


உன் குடியிருப்புப் பேட்டையில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. அங்குப் பயிற்சி செய்வதற்குப் பலர் வருகின்றனர். அவர்களுள் ஒருசிலர் பயிற்சிக்கூடத்தில் இருக்கும் கருவிகளைச் சேதம் செய்கின்றனர். அவர்களுக்கு அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்பதை நீ உணர்ந்துகொள்கிறாய். எனவே அவர்களின் செயல்பாடுகள் குறித்துச் சமூக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று எழுது.


மின்னஞ்சல் முகவரி:
அனுப்புநர்:      selva @hotmail.com
 பெறுநர்:    moorthy @gmail.com

``’’ பிரிவு (கட்டுரை)


பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 180 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.                                       (50 மதிப்பெண்கள்)


 3
மூதியோர்களால் நம் சமுதாயம் பல நன்மைகளை அடைந்து வருகின்றது. அவற்றைப் பற்றி விளக்கி எழுது.

        
4
உன் பள்ளி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை விளக்கி எழுது.

5
உன் நண்பனிடமிருந்து நீ கற்றுக்கொண்ட உயர்ந்த பண்புகளை விளக்கி எழுது.