Thursday, July 12, 2012

வாக்கிய அமைப்பில் கவனிக்கவேண்டியவை


வாக்கியம் அமைப்பு முறை

வாக்கியம் - விளக்கம்

      சில சொற்கள் சேர்ந்து ஒரு முழுக்கருத்தைத் தெரிவிக்கும்.

      பொதுவாக எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இருக்கும்.

      (எடு) - மாலா பள்ளிக்குச் சென்று பாடங்களைப் படித்தாள்.  

எழுவாய், பயனிலை பற்றிய விளக்கம்

*எழுவாய்

   * எழுவாய் கருத்தினை எழுதுவதற்கு இடமாக இருக்கும்.

   * அதாவது யார்? எது? என்ற கேள்விகளுக்குப் பதில் இருக்கும்.

     (எடு) - குமரன் புத்தகம் எழுதினான்.

பயனிலை

    என்ன செய்தான்? என்ன செய்தது? என்ற கேள்விக்குப் பதிலைத்      

    தருவது பயனிலையாகும்.

    (எடு) - பீட்டர் கடைக்குப் போனான்.

விளக்கம்

பீட்டர் என்ன செய்தான்? என்ற கேள்விக்குப் பதில் `போனான்` என்பது  ஆகும்.

பயனிலையின் முக்கியத்துவம்

·        ஒரு வாக்கியத்தில் அமைந்துள்ள பயனிலை, எழுவாய், திணை, பால், எண், இடம் ஆகியவற்றுடன் இசைந்திருக்கும்.

எழுவாய் பயனிலை இயைபு (தொடர்பு)

* எழுவாயும் (கந்தன்) பயனிலையும் (போனான்) நிச்சயமாகத்

  தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

* உயர்ந்த ஒழுக்கத்தை உடைய எழுவாய்க்கு உயர்ந்த ஒழுக்கத்தை  

  உடைய பயனிலையைப் பயன்படுத்தவேண்டும்.

  (எடு) - கந்தன் செய்தித்தாள் படித்தான்.

  இது போல உள்ள சொல்லுருபுகளைப் (ஆனவன், ஆனவள், ஆனவர்,  

  என்பவன், என்பவள், என்பவர்) பயன்படுத்தவேண்டும்.

* அஃறிணை எழுவாய்க்கு ஆனது, ஆனவை, என்பது, என்பவை என்னும்   

  சொல் உருபுகளைப் பயன்படுத்தவேண்டும்.

  (எடு) குரங்கு வேடிக்கை காட்டியது.

இருவகை எழுவாய் அமைப்பு முறை

  ஒருவாக்கியத்தில் அஃறிணை எழுவாய் பல இருந்தால் அது   

  அஃறிணைப் பன்மை வினைமுற்றுகளைக் கொண்டு முடியவேண்டும்.

  (எடு) கோபாலும் கிளியும் பூனையும் நாயும் சென்றன.

* ஒரு வாக்கியத்தில் உயர்திணை எழுவாய் பல இருந்தால் உயர்திணைப் பன்மை வினைமுற்றைக்கொண்டு அந்த வாக்கியம் முடியும்.

  (எடு) - கோபால், கந்தன், சலீம், பீட்டர் நாய் ஒரு வீட்டில்   

         வசிக்கிறார்கள்.

பயனிலையின் அமைப்பு முறை

எழுவாய் உயர்திணை பயனிலை உயர்திணை

(எடு) - வள்ளி கடைக்குப் போனாள்.

எழுவாய் அஃறிணை பயனிலை அஃறிணை

(எடு) - மாடுகள் காட்டில் மேய்ந்தன.

எழுவாய் மரியாதைப் பன்மை பயனிலை மரியாதைப் பன்மை

(எடு) - அவர் கடைக்குச் சென்று வேண்டிய பொருள்களை வாங்கினார்.

செயப்படுபொருள் – விளக்கம்

ஒரு வாக்கியத்தில் எதைச் செய்தான் என்ற கேள்விக்கோ எதைச் செய்தது  என்ற கேள்விக்கோ பதில் இருந்தால் அந்த வாக்கியம் செயப்படுபொருள் அமைந்துள்ள வாக்கியம் ஆகும்.

     (எடு) - கோபால் புத்தகத்தைப் படித்தான்.

ஒரு சில வாக்கியங்களில் செயப்படுபொருள் இல்லாமல் இருக்கும்.

(எடு) - முருகன் பாடினான்.

ஒருசில வாக்கியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள் இருக்கும்.

(எடு) - சலீம் அறிவியலும் தமிழும் படித்தான்.



********************************************************************************************************************************************************

No comments:

Post a Comment