Saturday, February 26, 2022

 

வாழும்முறை சொல்லித்தரும் கதைகள்


சின்ன சின்ன கதைகள்

சிங்காரச் சிந்தனைக் கதைகள் 

வண்ண வண்ண கதைகள்

வாழ்வை விளக்கும் கதைகள்!


வளம் கொழிக்கும் கதைகள் 

வாழும்முறை கற்றுத்தரும் கதைகள்

முன்னோர் சொல்லிவைத்த கதைகள்

முக்காலத்தை நற்காலமாக்கும் கதைகள்!


திண்ணமான கதைகள் தெவிட்டாவையே 

தென்றல் போன்ற  கதைகள்

தேடிப் படிக்கும் கதைகள்

தேன்போன்ற சிந்தனைக் கதைகளே!!

                                                                                   - சி.கு





 


                                         பிழைப்பைத் தேடி 

பிழைப்பைத்தேடி பெருங்காடு சென்றான் மனிதன்

பிழைப்பைத்தேடி பெருநாடு சென்றான் மனிதன்

பிழைக்கும்வழி அறிந்தான் பேதமை புரிந்தான்

பிழைக்கும்வழி அறிந்தபின் பெரும்பாதை காட்டிடுவான்


முந்திச்சென்றான் பின்னவன் அவனை

முன்னவனை வெல்ல நினைத்தான்

முனைப்போடு செயல்பட்டான் முக்காலமும் 

பொறுமையின்றிப் பொறாமை கொண்டான்


நன்றி மறப்பது நல்லதில்லை என்பான்

நன்றிமறப்பதைத் தொழிலாகக் கொள்வான்

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை

சொல்வதை மறைத்துச் சொல்லிநிற்பான்.


விழித்துக்கொள்வோர் பிழைத்துக்கொள்வர்

வழிப்பை மறந்தவர் வீழ்ந்துவிடுவர்

தலைமுறை பல தவங்கிடந்தாலும்

தலைநிமிர்ந்து நிற்க விழிப்பு வேண்டும்

.

சொல்லிடுவோம் பிள்ளைகளுக்கு அந்தச்

சூட்சமம் அனைத்தும் இன்றே தாமே!

பிள்ளைகள் விழிப்புற்றால் அவர்கள் 

பிழைக்கும் வழியைக் கற்றிடுவார்!!


                                                               சி.கு