Monday, March 28, 2011

வாக்கியங்களில் அமைக்கவும் நிலவு ______________________________________________ பார்த்த ______________________________________________ பார்த்த பொழுது _____________________________________________ வாழ்க்கைத் துணையை ______________________________________________ வரலாற்றில் ______________________________________________ வாக்கியத்தில் ________________________________________________ மிகநீண்ட ________________________________________________

Monday, March 21, 2011

வாக்கியங்களில் எழுதவும்

திட்டமிடுதல்
_________________________________________________________

வெற்றி
_________________________________________________________

அடைவதற்குரிய
_________________________________________________________

குறிக்கோளை
_________________________________________________________

உருவாக்கினர்

_________________________________________________________

சவால் விட்டனர்
_________________________________________________________

உரியவர்
_________________________________________________________

வாக்கியங்களை முடித்து எழுதுக
ஜப்பானில் ஏற்பட்ட கடல் சீற்றம் உலகமக்களைச் சிந்திக்கத்தூண்டியது.

உலக மக்களின் சிந்தனை தூண்டக் காரணமாக இருந்தது _______________________.

உலகக் கோப்பையை வெல்வதற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

பல நாடுகள் போட்டி போடுவதற்குக் காரணமாக இருப்பது __________________________.

பிறருக்கு முடிந்த வரை உதவி செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவோம்.

நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவதற்கு __________________________.

பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாவிட்டால் _________________________________________________________________________.

Friday, March 18, 2011

பாரதியார்

புதுமைப் பெண்
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாதவப் பெரியோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
- பாரதியார்