Monday, July 2, 2012

முக்கனி - விளக்கம் அறிவீர்



முக்கனி

 ·       மா, பலா வாழை ஆகிய மூன்றும் முக்கனி    
   என்று அழைக்கப்படுகிறது

·       முக்கனிகள் மிகவும் சுவை உள்ளவை

·       தமிழ்நாட்டில் இம்மூன்று பழங்களும் அதிகம் விளைகின்றன

·       இவை மருத்துவக் குணம் நிறைந்தவை

·      உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இம்மூன்று கனிகளிலும் இருக்கின்றன

·      முக்கனிகளைக் குழந்தைகள் மூதல் முதியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

·       இக்கனிகளிலிருந்து முப்பழம் என்ற இனிய உணவைத் தயாரிப்பார்கள்

·      தமிழர்கள் பெரும்பாலும் முப்பழத்தை விழாக்காலங்களில் தயாரிப்பார்கள்

·      இம்மூன்று கனிகளின் மரங்களும் மக்களுக்கு மிகவும் பயன்படுகின்றன

·      இம்மூன்று மரங்களிலும் மருத்துவப் பயன்கள் உள்ளன என்று கூறுவர்

·       பண்டையத் தமிழ்நாட்டை ஒன்றிணைக்கும் பழங்களாக இவை விளங்குகின்றன

·      சேரநாட்டில் பலாக்கனிகளும், சோழநாட்டில் வாழைப்பழங்களும், பாண்டியநாட்டில் மாங்கனிகளும் அதிகம் விளைகின்றன

·      முக்கனிகள் தமிழரின் ஒற்றுமைப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன

·      முக்கனிகள் உணவுப் பற்றாக்குறையைப் போக்கும் கனிகளாக விளங்குகின்றன

·      ஒன்றிணைந்தால் உயர்வைப் பெறலாம் என்ற உயரிய தத்துவத்தை விளக்குவதற்கு நம்முன்னோர் முக்கனியை என்ற பொருள் நிறைந்த சொல்லை அறிமுகப்படுத்தினர்.



உரிமை – ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment