Sunday, June 5, 2022

 முக்கனி

 

·        மா, பலா, வாழை ஆகிய மூன்றும் முக்கனி ஆகும்.  

·        முக்கனிகள் மிகவும் சுவை உள்ளவை

·        தமிழ்நாட்டில் இம்மூன்று பழங்களும் அதிகம் விளைகின்றன

·        இவை மருத்துவக் குணம் நிறைந்தவை

·        உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இம்மூன்று கனிகளிலும் இருக்கின்றன

·        முக்கனிகளைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

·        மக்கள் முக்கனிகளைச் சில நேரங்களில் உணவுக்குப் பதில் உண்பர்

·        இக்கனிகளிலிருந்து `முப்பழம்` என்ற சுவையுடைய  பழக் கலவையைத் தயாரிப்பார்கள்

·        தமிழர்கள் பெரும்பாலும் முப்பழத்தை விழாக்காலங்களில் தயாரிப்பார்கள்

·        இம்மூன்று கனிகளின் மரங்களும் மக்களுக்கு மிகவும் பயன்படுகின்றன

·        இம்மூன்று மரங்களிலும் மருத்துவப் பயன்கள் உள்ளன என்று கூறுவர்

·        பண்டையத் தமிழ்நாட்டை ஒன்றிணைக்கும் பழங்களாக இவை விளங்குகின்றன

·        சேரநாட்டில் பலாக்கனிகளும், சோழநாட்டில் வாழைப்பழங்களும், பாண்டியநாட்டில் மாங்கனிகளும் அதிகம் விளைகின்றன

·        முக்கனிகள் தமிழரின் ஒற்றுமைப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன

·        இன்றும்கூடத் தமிழ் நாட்டில் இம்மூன்று மரங்களையும் வீட்டைச் சுற்றி வளர்ப்பர்

·        `ஒன்றுபட்டால் உயர்வைப் பெறலாம்` என்ற உயரிய தத்துவத்தை விளக்குவதற்கு நம்முன்னோர் `முக்கனி` என்ற பொருள் நிறைந்த சொல்லை மக்களிடம் அறிமுகப்படுத்தினர் எனக்கூறலாம்.

 

 

·        மா, பலா, வாழை வரிசை அமைப்பு முறை

 

·        மாமரம் அதிகக் கிளைகளையும் காய் கனிகளையும் உடையது. இதன் கிளைகளும் காய்களும் நெருக்கம் நிறைந்தவை. அதுபோல் குடும்பத்தில் உள்ளவர்களும் பிணைப்பு மிக்கவர்களாகவும் பயன் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். இதனால், நம் முன்னோர், மூன்று மரங்களில் மாமரத்திற்கு முதலிடம் கொடுத்தனர்.

 

·        பலா மரம் குறைந்த அளவு கிளைகளையும் சில பழங்களையும் உடைய மரம். பலா பழத்தை அரிய முயற்சிக்குப் பின்புதான் சுவைக்க முடியும். அதுபோல, நம்முடைய இலட்சியத்தை அடைவதற்குக் கடுமையாக முயற்சி செய்யவேண்டும். இறுதியில் நாம் இலட்சியத்தின் மூலம் இனிய  இன்பத்தை அடையலாம்.  அதனால், நம் முன்னோர்  பலாவை வரிசையில் இரண்டாம் இடத்தில் வைத்தனர்.

 

·        வாழை மரத்தில் கிளைகள் இல்லை. இது ஒரு குலையில் இனிய சுவையுடைய பல பழங்களைத் தரும்.  அதன் இனம் `வாழையடி வாழையாகத்` தொடர்ந்து வாழும். அதுபோல, மனித இனமும் இலட்சியத்துடன் தொடர்ந்து வாழவேண்டும் என்பதைக் குறிப்பதற்கு வாழை மரத்தை இம் மூன்று மரங்களில் மூன்றாவது இடத்தில் வைத்தனர்.   

 

 

தயாரித்தவர் – ஆசிரியர் சி. குருசாமி


No comments:

Post a Comment