Sunday, June 5, 2022

 


கதிரே கதிரே


கடலில் மறையும் கதிரே 
காற்றில் தெரியும் கதிரே 
அழகைக் கொட்டும் கதிரே  
அமிழ்தம்போன்ற  கதிரே! 

மலைமேல் தோன்றும் கதிரே
மக்கள் தேடும் கதிரே
வண்ணப் பிள்ளை நீயே
வானில் தோன்றும் கதிரே! 

பிள்ளை போன்றே கதிரே
பேணிக் காப்பாய் கதிரே
செல்வச் செழிப்பைத் தருவாய்
தேனைப் போன்ற கதிரே!

கள்ள  மில்லா கதிரே
கடலைக் குடிப்பாய் கதிரே
கனலாய் நிற்பாய் கதிரே
கன்னல் போன்ற  கதிரே!

உயிர்களைக் காப்பாய் கதிரே
உணவைத் தருவாய் கதிரே
உணர்வைத் தருவாய் கதிரே
உள்ளம் நிறைந்த கதிரே!!
                                 - சிகு






No comments:

Post a Comment