Sunday, September 26, 2010

பயிற்சி 31 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் காணலாம். ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை செய்வதும் ஒருவகையால் பார்த்தால் கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். அவை அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். அதனால், அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் மிகவும் அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல நிலைகளில் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.

No comments:

Post a Comment