Sunday, September 26, 2010

பயிற்சி 30 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.



ஆதிகாலத்தில் மனிதன் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தான், இருட்டத்தொடங்கியதும் குகைகளில் தங்கினான். அவன் அங்கு விலங்குகளுக்கு அஞ்சியே வாழ்ந்தான். அதனால், தன்னோடு போராடும் விலங்குகளைக் கொன்று குவித்தான். அக்காலகட்டத்தில் அவன் விலங்குகளின் மாமிசத்தையே முக்கிய உணவாக உண்டான். அவன் சிந்திக்கத்தொடங்கியதும் அப்பகுதிகளை விட்டுவெளியேறத் தொடங்கினான். அவன் மலைப்பகுதியில் பயன்படுத்திய நெருப்பு அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றத்தொடங்கியது.

பின்னர், அறிவியல் துறை படிப்படியாக வளரத்தொடங்கியது. தற்காலத்தில் இத்துறையில் பல புதுமைகள் நடைபெறுகின்றன. இந்தப் புதுமைகள் வேகமாக நடந்து வருவதால் இக்காலத்தை அறிவியல் காலம் என்று கூறலாம்.

இன்று அறிவியலில் ஏராளமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனால், அதிகமான கழிவுகள் வெளி வருகின்றன. இவை இவ்வுலகை வெப்பம் அடையச் செய்கின்றன. இவ்வெப்பத்தால் பனிக்கட்டி உருகி வருகிறது. அதனால் பூமியின் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் காரணமாக ஒருசில சிறிய நாடுகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்க நாம் அனைவரும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உடனே முயற்சி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment