Sunday, September 26, 2010

வாக்கியங்களை முடித்து எழுதும்போது கவனிக்கவேண்டியவை.

ஒருமை பன்மை (குருவி, குருவிகள, பழம், பழங்கள்
காலங்கள் (இறந்த காலம் – பழத்தைத் தின்றது, பழத்தைத் தின்கின்றது – நிகழ்காலம், எதிர்காலம் – பழங்களைத் தின்னும்.

வாக்கியங்களை முடித்து எழுதுக.
(முயன்று பார்த்துப் பகிர்ந்துகொள்ளவும்)




கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்றது.

கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ___________________________________.


கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்றன.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ___________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவியால் ____________________________________.

No comments:

Post a Comment