Thursday, September 23, 2010

பயிற்சி 21 / 2010
கீழ்கண்ட பகுதியைப் படித்து மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

மரத்தின் கிளையில் நின்ற பறவை கால் வலிப்பதாக நினைத்தது. அதனால், அது சிறிது தூரம் வானத்தில் பறந்து செல்ல யோசித்தது. பறக்கும் போது ஒருவேளை சிறகு வலிக்கும் என்று நினைத்து அது மரத்தில் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தது. மரத்திலிருந்த அடர்ந்த கிளையைத் தேடி அதில் பறவை சாய்ந்தது. அதற்கு அப்போது ஒரு தனிச் சுகம் கிடைத்தது. பறவை, நல்ல வேளை பறந்து செல்லவில்லை என்று மனத்திற்குள் மகிழ்ச்சி அடைந்தது.

அவ்வழியாக வேடன் ஒருவன் வந்தான். அவன் வெயிலில் களைத்து வந்ததால் மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தான். அப்போது பறவையின் எச்சம் வேடன் மீது பட்டது. மரத்தை நோக்கித் தலையைத் தூக்கி அவன் பார்த்தபோது ஒருமுறை தன் அம்புக்குத் தப்பிய பெரிய கொக்குதான் அது என்று கண்டுபிடித்தான். வேடன் குறிதப்பாது கொக்கைப் பார்த்து அம்பைச் செலுத்தினான். கொக்கு கதறியது.

வினாக்கள்

1. பறவை மரத்தில் தங்க நினைத்ததற்குக் காரணம் என்ன?

1. மரத்தில் ஓய்வெடுக்க நினைத்ததே
2. சிறகு வலிப்பதாக நினைத்ததே
3. கால் வலிப்பதை உணர்ந்ததே
4. கால் வலிப்பதாக நினைத்ததே ( )

2. பறவைக்கு அதிக இன்பம் எப்போது கிடைத்தது?

1. மரத்தில் ஓய்வெடுத்தபோது
2. கிளையில் சாய்ந்தபோது
3. அடர்ந்த கிளையைக் கண்டபோது
4. ஓய்வெடுக்க முடிவு செய்தபோது ( )

1. அம்பு பறவையின் உடலில் ஏன் குத்தியது?

1. பறவை அசையாமல் இருந்ததால்
2. பறவை எச்சம்போட்டதால்
3. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால்
4. நோக்கம் தப்பாமல் அம்பு பாய்ந்ததால் ( )

பகுதியைப்படித்த பின்னர் முப்பது சொற்களில் சுருக்கி வரைக.

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பகுதியைப் படித்தபின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்குரிய விடைகளைத் தட்டச்சு செய்து அனுப்புக.

1. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்ன?
____________________________________________________________________________________________________________________________________________________________

2. பறவை பறந்துசெல்லாததற்கு காரணம் என்ன?

__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. வேடனுக்குக் களைப்பு இல்லாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

4. இப்பனுவல் மூலம் நீ அறிந்துகொள்ளும் கருத்துகள் இரண்டைக் குறிப்பிடுக.
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

5. பறவை செய்தது சரியா ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
6. வேடன் செய்தது சரியா? ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

No comments:

Post a Comment