Thursday, September 23, 2010

உரையாடல்
அல்லியும் மல்லியும் சந்தித்தபோது கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்

அல்லி:
குமுதா, சீக்கிரம் வா, உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருப்பது?

மல்லி:
மன்னித்துவிடு அமுதா. வீட்டில் அப்பாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டது. அம்மாவுக்குத் துணையாக இருந்து உதவி செய்து வந்தேன்.

அல்லி:
அப்படியா! அவருக்கு என்ன?

மல்லி:
நேற்றுப் பெய்த மழையில் முழுமையாக நனைந்துவிட்டார். நடு இரவில் தும்மல் ஏற்பட்டது. காலையில் எழுந்தவுடன் உடம்பெல்லாம் கொதிப்பாக இருந்தது. அம்மா அவரை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அல்லி:
அடடா! நீ முதலிலேயே என்னிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே. வா உடனே நானும் வீட்டுக்கு வருகிறேன். உன் அப்பாவை நலம் விசாரிக்க வேண்டும்.

மல்லி:
மிகவும் நன்றி அமுதா. உன் அக்கறையான பேச்சைக் கேட்கும்போது மனம் ஆறுதலாக இருக்கிறது.

அல்லி:
அப்படியென்றால் ஒன்று செய். நான் நூலகம் சென்று நமக்குத் தேவையான புத்தகங்களை உன் வீட்டுக்குக் கொண்டுவருகிறேன். அங்கே அமர்ந்து ஆசிரியர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்போம். நீ முதலில் வீட்டுக்குச் செல். அப்பாவைக் கவனி.

மல்லி:
அப்படியா சொல்கிறாய். நான் உன்னை மட்டும் எப்படி இங்கே தனியாக.. ..

அல்லி:
அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதே. ஒருவருக்கொருவர் இதுபோன்ற நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பின்னர் நட்புக்குத்தான் அர்த்தம் என்ன?

மல்லி:
நன்றி அமுதா .. நான் வீட்டிற்கு முதலில்போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துணையாக இருக்கிறேன். நீ மெல்ல வந்தால் போதும்.


அமுதா:
சரி குமுதா. கவலைப்படாதே. என் பெற்றோருக்கும் தெரிவித்துவிட்டுப் பின்னர் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment