Sunday, July 30, 2023

 


2 முன்னுணர்வுக் கருத்தறிதல்      

ஐந்து கோடிட்ட இடங்களுக்கு உரிய ஐந்து விடைகளை உதவிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுத்தல்.

 

ஒருநாள் ஒரு செடியில் பூத்த மலர் மறுநாள் வாடிப்போய்விடும். அதற்காக அந்தச் செடி வருந்துவது கிடையாது. ஏனென்றால்  மறுநாள் புதிய மலர் பூக்கத்தொடங்கிவிடும். பூத்த மலர்களைக் கண்ட நம் (Q1)__________  பூரிப்படைகிறது. அந்தச் செடியும் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும். மேலும், அது அடுத்த (Q2)__________  நோக்கி வளர்ச்சி பெறத்தொடங்கிவிடுகிறது.  அதுபோலதான் மனிதனுடைய வாழ்க்கையும் நாள்தோறும் பல மாற்றங்களை அடைந்துகொண்டே செல்கிறது. இந்த மாற்றங்கள் நம்மை அடுத்த கட்ட (Q3)__________ அழைத்துச் செல்கிறது. நாள்தோறும் புதுப்புது சிந்தனை ஏற்படுகிறது. இந்தச் சிந்தனையின் (Q4)__________  நாம் தொடர் வளர்ச்சி பெறுகிறோம். இந்த வளர்ச்சி  குடும்ப வளர்ச்சியாகத்  தோன்றிச் சமூக  வளர்ச்சியாக  (Q5)__________. இன்னும் சொல்லப்போனால்  ஒரு நாட்டின்  வளர்ச்சியாக மலர்கிறது. பல நாடுகளின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

(1)  கட்டத்தை              (2) உடம்பு

(3) மூலம்               (4) ஓட்டத்திற்கு

(5) மாறுகிறது            (6) இருக்கிறது

(7) உள்ளம்               (8) கட்டடத்தை

(9)  நகர்வுக்கு            (10) ஓட்டம்


No comments:

Post a Comment