Sunday, July 12, 2009

அலைபாயும் மனம்

அலைபாயும் மனம்

கோமதி அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள், கதவைத் தட்டும் ஓசை .. வேகமாகச் சென்று கதவைத் திறந்த கோமதிக்குக் காத்திருந்தது அதிசயம்!

அவள் கண் ஓராண்டாகத் தேடிய பெற்றோர். நிழலா நிஜமா என்று யோசித்தாள். மகளின் தலையைத் தடவினாள். வேலைக்குச் செல்லவேண்டும் என்பதை மறந்தாள் கோமதி. ஒருவினாடியில் நினைவுக்கு வந்தது வேலையிடம்

`அம்மா அப்பாவுக்கு வீட்டில் இருக்கும் சாப்பாட்டைக்கொடு, சாயங்காலம் சீக்கிரம் வந்திருவேன்` என்று கோமதி சொல்லியபோது அவளது ஈரக்கூந்தல் வெளியில் செல்லச் சொட்டடித்தது.


மகிழ்ச்சியோடு வாசலில் வந்து வழியனுப்பினர் பெற்றோர். அவசரமாகப் பறந்தாள் வேட்டைக்குச் செல்லும் புலியைப்போல .. அவள் மனமோ மாலை நேர மயக்கத்தை அடைந்தது . . அருகில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்தாள் கோமதி, வண்டி புறப்பட்டது. அடேயப்பா நாள்தோறும் எவ்வளவு பயணப்போராட்டம் என்று அலுத்துக்கொண்டாள் .. அருகில் உள்ளவர் வாயைத்திறந்து கொட்டாவி விட்ட காற்று அவளை நோக்கி வந்தது. நெருங்கி நின்றவளின் மஞ்சள் மணம் அதற்குள் மூக்கிற்குள் பாய்ந்தது.


வேலையிடத்தில் இருப்பதற்கு இருப்பதோ 20 நிமிடங்கள். 10 நிமிடங்கள் பஸ் பயணம் என்று நினைத்துப் பஸ்ஸை நோக்கியபோது பஸ் விரைந்து சென்றது.


வேலை இடத்தை அடைவதற்கு ஒருமணி நேரம் ¬கிவிடும் என்று நினைத்தபோது அந்த மாத அனுமதி நேரம் அவள் மனத்தைத் தேற்றியது.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபோது இளைய மகள் குமுதாவின் அமைதியான வாழ்க்கை கண்முன் வந்தது. ``அம்மா சாப்பிடுங்க சமையல் வேலை எல்லாம் முடிஞ்சிருச்சு என் மாப்பிள்ளையும் பிள்ளைகளும் வர இன்னும் நாலு மணி நேரம் இருக்கிது. நம்ம வெளியே போய்ட்டு வருவோமா .. அம்மா, தம்பி எப்படி இருக்கான் நல்லா படிக்கானா, பக்கத்துவீட்டு பானு எப்படி இருக்கா .. என்றவாறு அவள் அம்மாவின் கையைப் பிடித்து நடந்து சென்றாள்


வீடு திருப்பினாள் கோமதி அவள் கணவரும் வந்தார் அவருக்கு வேண்டியதை உடனே செய்யத் தொடங்கினாள்.

கதை - சி. குருசாமி

No comments:

Post a Comment