Wednesday, May 21, 2014

    முதுமை

முற்றிய தேங்காய்
     விதைக்கு உதவும்
முற்றிய அறிவு
     சபைக்கு உதவும்
முற்றிய சிந்தனை
     முதன்மைக்கு உதவும்
முதுமை என்றும்
     நற்படியாய் உதவுமே!

உழைத்து உழைத்து
     ஓடாய்ப்போ யிடினும்
உழைக்கத் துடிக்கும்
     முடிவில்லா முதுமை
ஒட்டிய கன்னமும்
     உயர்ந்த நோக்கும்
ஒய்யாரமா என்றும்
     நிமிர்ந்து நிற்குமே!

வாழ்வு முடிந்ததென
     பழித்திட்ட போதும்புது
வாழ்வு உண்டென
     நினைத்திடும் முதுமை
முற்றிய கனிக்கு
     ஒப்பாகும் இதனை
முழுவதும் ஏற்போம்
     என்றென்றும் நாமே!
                  - சி. குருசாமி


No comments:

Post a Comment