Wednesday, May 21, 2014

சிறுகதை

கனியும் மனம்!

அவனுகுள் எழுந்தது இந்த மாற்றம் அறுபதைத் தாண்டியபோது. வாழ்க்கையில் சுறுசுறுப்பைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை அமுதன்.

ஆம்.. எப்பொழுதும் வாழ்க்கையைத் திட்டமிடுதல், உயர்வை எண்ணிப் போராடுதல் இவற்றைத் தவிர எதையும் பார்த்ததில்லை அவன். பிள்ளைப் பருவ உணர்வு அவனை எப்போதும் தூண்டியது.

`
வாழ்கையின் இலக்கணம் அமுதன்` இது ஊரார் கூற்று.

கமலா அமுதனின் மனைவி. அன்பிற்கு இலக்கணம் கண்டவள். குடும்பத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவள். கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.

படித்துப் பட்டம் பெற்ற அன்புச் செழியன், ஆய்வுப் பட்டத்தை முடிக்கத் துடிக்கும் அகிலன்.. பிள்ளைகளின் வாழ்க்கையோட்டத்தோடும் தன்னைக் கரைத்தவள்தான் அவள் ..

எஞ்சியுள்ள காலத்தையும் இதுபோல் கழிப்போம் என்ற உணர்வு அவளுக்குள் இல்லாமல் இல்லை. அப்பாவி பெண்..   

படுக்கை அறையில் இருக்கும்போதும் இல்லறப் பணி முடிந்தபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்க மறந்தவள் ...

இன்னும் சொல்லப்போனால் .. அவள் ஓர் ஒளிவிடும் மெழுகுவர்த்தி!
இன்று அவள் மனம் கல்பாறை பனிப்பாறையாக உருகும்போது மகிழ்ச்சி கண்டது.

``
கமலா! கமலா... இனி நாம் இரவில் சேர்ந்து சாப்பிடுவோம்
சப்பாத்தி ஆறினாலும் பரவாயில்லை .. ஒன்றும் நினைக்காதே'' என்று கூறியபோது அவளுக்குள் ஆயிரம் வண்ணச் சிறகுகள் முளைக்கத்தொடங்கின ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினாள்... அமுதன் மடியில் நீண்ட நாட்களுக்குப் பின் சாய்ந்தாள்

நெஞ்சுக்குள் ஆயிரம், மருத்துவர் சொன்னபோது வாழ்க்கையில் செய்ய மறந்த செயல்கள் மீண்டும் முளைத்தன அவனுக்குள். அய்யகோ என்று அலறினான் அமுதன்.


தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு தாம் வாழும் நாட்டை நோக்கிப் பறந்தனர் அன்பறியா பிள்ளைகள் ..
                                       ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment