Sunday, April 19, 2009

இலக்கியம் – பயிற்சி வினா

இலக்கியம் – பயிற்சி வினா

1 பின்னிணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ள இலக்கியம் – பயிற்சி வினா படித்து அதன் நயத்தினை விளக்கி எழுதுக.

2 பின்னிணைப்பு 2-இல் கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துத் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் கதைக்கரு, நிகழ்ச்சிப் பின்னல், பாத்திரப்படைப்பு, மொழிநயம் முதலியவற்றை விளக்கி எழுதுக.


பூமியைப்புனிதத் தாயென்றும்

புகழ்பெற்ற கங்கையை

அன்னையென்றும் நெடுங்காலமாய்ப்

போற்றி வந்தோம்

நம்மில்லவாழ் அன்னைதனை

என்றென்றும் போற்றுமுகமாய்

எழிலுடன் வணங்கிடவே

எடுத்திட்டோம் அன்னையர் தினம்!


வாழட்டு மன்னையர்புகழ்

வளமானநம் நாடுதனிலென்று

கொட்டிடுவோம் முழவுதனை

எல்லாரும் கேட்டிடவே

வாழ்க அன்னையர்தினம்

வளமான நெஞ்சுதனில் - நம்

இல்லந்தோறுங் கொண்டாடி

இல்லாரு மின்பமடைவோமே !

- குருசாமி





கனியும் மனம்!


அவனுகுள் எழுந்த இந்த மாற்றம், அறுபதைத் தாண்டியபோது, வாழ்க்கையில் சுறுசுறுப்பைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை அமுதன்.

ம்.. எப்பொழுதும் வாழ்க்கையைத் திட்டமிடுதல், உயர்வை எண்ணிப் போராடுதல் இவற்றைத் தவிர எதையும் பார்த்ததில்லை அவன். பிள்ளைப் பருவ உணர்வு அவனைத் தூண்டியது

`வாழ்கையின் இலக்கணம் அமுதன்` இது ஊரார் கூற்று.

கமலா அமுதனின் மனைவி. அன்பிற்கு இலக்கணம் கண்டவள். குடும்பத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவள். கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.

படித்துப் பட்டம் பெற்ற அன்புச் செழியன், ___ய்வுப் பட்டத்தை முடிக்கத் துடிக்கும் அகிலன்.. இவர்களின் வாழ்க்கையோட்டத்தோடும் தன்னைக் கரைத்தவள்தான் அவள் ..

எஞ்சியுள்ள காலத்தையும் இதுபோல் கழிப்போம் என்ற உணர்வு அவளுக்குள் இல்லாமல் இல்லை. அப்பாவி பெண்.. அழுதுகூடப் பார்த்ததில்லை..

படுக்கை அறையில் இருக்கும்போதும் இல்லறப் பணி முடிந்தபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்க மறந்தவள் ...

இன்னும் சொல்லப்போனால் .. அவள் ஓர் ஒளிவிடும் மெழுகு வர்த்தி!
இன்று அவள் மனம் கல்பாறை பனிப்பாறையாக உருகும்போது மகிழ்ச்சி கண்டது.

கமலா.. கமலா .. இனி நாம் இரவில் சேர்ந்து சாப்பிடுவோம்
சப்பாத்தி றினாலும் பரவாயில்லை .. ஒன்றும் நினைக்காதே என்று கூறியபோது அவளுக்குள் ____யிரம் வண்ணச் சிறகுகள்
முளைக்கத்தொடங்கினனந்த வெள்ளத்தில் மூழ்கினாள் .. அமுதன் மடியில் சாய்ந்தாள்

நெஞ்சுக்குள் யிரம் மருத்துவர் சொன்னபோது வாழ்க்கையில் செய்ய மறந்த செயல்கள் மீண்டும் முளைத்தன அவனுக்குள். அய்யகோ என்று அலறினான் அமுதன்.

தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு தாம் வாழும் நாடு நோக்கிப் பறந்தனர் அன்பறியா பிள்ளைகள் ..
கதை சிரியர் -
சி. குருசாமி


2 comments:

  1. ``கனியும் மனம்!`` திறனாய்வுக் கண்ணோட்டத்தில்
    எழுதியவர் - திவாகர் (உயர்நிலை 4 – இலக்கியம் 2)



    கனியும் மனம் என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கதை எழுதியுள்ளார் சிரியர் சி. குருசாமி. கணவனுக்கு மனைவியாகவும் பிள்ளைகளுக்குத் தாயாகவும் குடும்பத்திற்கு உழைப்பவளாகவும் இக்கதையின் கதைத்தலைவி கமலா என்னும் பெண்மணி உள்ளார். குடும்பத்திற்காகவே அவளை அர்ப்பணித்த கமலா, கடைசிக் காலத்தில்தான் அன்பைத் திரும்பவும் தன் கணவனிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் பெறுகிறாள். இதுவே இக்கதையின் கருவாக அமைத்துள்ளார் கதை சிரியர்.

    எதையும் சுற்றி வளைக்காமல் கதைக் கருவுக்கு ஏற்பவே சிரியர் இக்கதையை எழுதியுள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது.

    ``அன்பிற்கு இலக்கணம் கண்டவள், குடும்பத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவள்`` என்னும் எடுத்துக்காட்டுகளின் மூலம் கதை சிரியர் கமலாவின் குணத்தைச் சிறப்பாகவே சித்திரித்துள்ளார். இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் கதைத் தலைவன் அமுதன், ``எப்பொழுதும் வாழ்க்கையைத் திட்டமிடுதல், உயர்வை எண்ணிப் போராடுதல்`` என்னும் இலக்கைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவன். அவன் கடைசிக் காலத்தில் அவனுடைய மனைவியின்மீது தனி அன்பைப் செலுத்தியது கதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. நிச்சயமாக இக்கதை பல வாசகர்களைப் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கும் செழியனைப் பற்றியும் அகிலனைப் பற்றியும் குறைந்த விளக்கத்தைக்கொடுத்துக் கதையில் எந்தக் குழப்பத்தையும் கொடுக்காமல் கதையை எழுதியிருப்பது கதை ஒரு நல்ல ஓட்டத்தில் விறுவிறுப்பாகச் செல்ல உதவுகிறது.

    ``அவள் ஓர் ஒளிவிடும் மெழுகு வர்த்தி!`` என்பது போன்ற வாக்கியங்கள் கதையை மேலும் அழகு படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் கதையில் பல இடங்களில் ச்சரியக் குறிகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சில முக்கிய வாக்கியங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

    மொத்தத்தில் இக்கதையைப் படிப்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய தாய்க்கோ மனைவிக்கோ அன்பையும் பாசத்தையும் செலுத்தி அவர்கள் ஈடுபடும் பணிகளுக்கு மதிப்பளிப்பர். இக்கதை இன்றுள்ள வாழ்க்கை நிலைமையைச் சித்திரித்துள்ளது என்றே சொல்லலாம். சிரியர் குருசாமி பல ய்வுகளைச் செய்த பின்னர்தான் இக்கதையை எழுதியுள்ளார் என்று நான் நம்புகிறேன்.

    நன்றி
    மாணவர் திவாகருக்கு

    ReplyDelete
  2. ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும். ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு விடயத்தை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.

    ReplyDelete