Sunday, April 19, 2009

மரபுத்தொடர்கள் (சி. குருசாமி)


மரபுத்தொடர்கள் (சி. குருசாமி)
---------------------------------------------

ஏட்டிக்குப் போட்டி

குமுதாவும் அல்லியும் எப்பொழுதும் தம் தோழிகளிடம் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு கை பார்ப்பேன்

கோபு மதிப்பெண்ணின் பட்டியலில் முதலிடத்தை இழந்ததால் அடுத்த முறை ஒருகை பார்பேன் என்று தம் நண்பனிடம் கூறினான்.

ஒளிவு மறைவின்றி

அன்பரசி தம் அம்மாவிடம் ஒளிவு மறைவின்றிப் பேசும் பழக்கத்தை உடையவளாக இருந்ததால் அவளது அம்மா அவள் மீது மிகவும் அன்பு செலுத்தி வந்தார்.


ஓட்டைக் கை

டேவிட் ஓட்டைக் கையனாக இருந்ததால் அவனது பெற்றோர் அவனது செலவுக்கு அதிகப் பணம் கொடுக்க மாட்டார்கள்.

ஓட்டை வாயன்

பிரபு ஓட்டைவாயனாக இருந்ததால் அவனது நண்பர்கள் அவனிடம் மனம் திறந்து சில உண்மைகளைப் பேசமாட்டார்கள்.

கட்டுக் கதை

கமலா கட்டுக் கதை கூறுவதில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளது தோழிகள் அவளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.
கம்பி நீட்டினான்


அழகனின் சங்கிலியைத் திருடிய திருடன் காவலர்களைக் கண்டதும் அங்கிருந்து கம்பி நீட்டினான்.

கண்மூடித்தனம்

மீரான் கண்மூடித்தனமாக மற்றவர்கள் கூறும் கருத்தை எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நட்டாற்றில் விட்டான்

கபிலன் திருமணச் செலவிற்கு வேண்டிய பணத்தைத் தருவதாகச் சொல்லி கடைசி நேரத்தில் அவனது நண்பனை நட்டாற்றில் விட்டான்.

பகல் கனவு

தமிழரசன் தேர்வுக் குரிய பாடங்களைச் சரியாகப் படிக்காமல் உச்சமதிப்பெண்கள் பெற நினைத்தது பகல் கனவாக முடிந்தது.

பல்லைக் காட்டி

வளவன் தம் முதலாளிடம் பல்லைக் காட்டி தாம் விரும்பிய சம்பள உயர்வைப் பெற்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

புத்தகப் புழுஅரசி புத்தகப் புழுவாக இருக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததால் பத்துக் காலத்தில் பல நன்மைகளை அடைந்தாள்.

பூசி மெழுகுதல்

குமாரின் நண்பர்கள் அவன் செய்யும் சிறு சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டிக் காட்டாமல் பூசி மெழுகியதால் அவன் பெரிய தவறுகளைச் செய்யத் தொடங்கினான்.

வாய்க் கொழுப்பு

கவிதாவுக்கு வாய்க் கொழுப்பு அதிகமாக இருந்ததால் அவள் அவளது தோழிகளின் மனம் வருந்தும்படி செய்து கொண்டிருப்பாள்.

வாலாட்டினான்.

முத்து உடன்படிக்கும் மாணவர்களிடம் வாலாட்டியதால் தலைமை சிரியர் முத்துவை அழைத்து அவனைத்திருந்தும்படி லோசனை கூறினார்.

வெளுத்து வாங்கியதால்

பிரபு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெளுத்து வாங்கியதால் அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.



இணைமொழிகள் ( சி. குருசாமி)


அருமை பெருமையை


பெற்றோர்கள் பிள்ளைகளின் அருமை பெருமையை அறிந்ததால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்து நல்வழிப்படுத்தினர்.

அக்கம் பக்கம்

குமார் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்பாகப் பழகும் குணம் உடையவனாக இருந்ததால் அவனை அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.

அல்லும் பகலும்

பிரசாந் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்ததால் அல்லும் பகலும் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.

டல் பாடல்

நம் முன்னோர்கள் டல் பாடல் கலையைப் போற்றி வளர்த்து வந்துள்ளதால் இன்று அவற்றை நாம் ரசித்து மகிழ்ந்து வருகிறோம்.

டை அணி

வேணி திருமண வீட்டிற்குச் செல்லும் போது விலை உயர்ந்த டை அணிகளை அணிந்து சென்றாள்.

குறை நிறைகளை

நாம் ஒருவரின் குறை நிறைகளை நன்றாக ய்வு செய்த பின்னர் தான் அவரிடம் பழகத் தொடங்க வேண்டும்.

நாளும் கிழமையும்

தமிழர்கள் திருமண நாளைத் தேர்ந்தெடுக்கும் போது நாளும் கிழமையும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பழக்க வழக்கம்

நாம் சிறந்த பழக்க வழக்கங்களைச் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே பின்பற்றினால் எதிர்காலத்தில் சிறந்த முறையில் வாழலாம்.

பேரும் புகழும்

திரு லீ பேரும் புகழும் பெற்ற தலைவராக விளங்கி வந்ததால் அவர் வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.




உவமைத் தொடர்கள் (சி. குருசாமி)


அகல்வாரைத் தாங்கும் நிலம் போல


பெற்றோர்கள் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பிள்ளைகள் செய்யும் சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக் கொள்வர்


அடியற்ற மரம் போல


தாய் போர்களத்தில் தம் மகன் பெரிய காயம் பட்ட செய்தியைக் கேட்டவுடன் அடியற்ற மரம் போலக் கீழே சாய்ந்தார்.


அணை கடந்த வெள்ளம் போல

மேடைப் பேச்சாளர் அணை கடந்த வெள்ளம் போலத் தொடர்ந்து பேசி மக்களைக் கவர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

அனலில் இட்ட மெழுகு போல

குஜராத்தில் நடைபெற்ற பூகம்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கோபு அனலில் இட்ட மெழுகு போல துடித்தான்.

இலை மறை காய் போல

குமரன் செய்த தவற்றை அவனது சிரியர் இலை மறை காய் போல சுட்டிக் காட்டி அவனைத் திருத்தினார்.


உயிரும் உடலும் போல

கபிலரும் பாரியும் உயிரும் உடலும் போல எப்பொழுதும் ஒன்றாகவே இருந்தனர்.


ஊமை கண்ட கனவு போல


பல்லவன் தாம் கண்ட திருட்டுச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை வெளியில் சொல்லமுடியாமல் ஊமை கண்ட கனவு போல இருந்ததால் அவனது மனம் பாதிப்படைந்தது.


எலியும் பூனையும் போல


முல்லைக் கொடியும் அவளது தங்கையும் எலியும் பூனையும் போலச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் அவர்களது பெற்றோர் கண்டித்தனர்.

No comments:

Post a Comment