Monday, April 6, 2009

கடித வினா.

கடித வினா. (150 சொற்கள்)

1. நீவிர் உமது குடும்பத்தினரோடு திறந்தவெளி உணவங்காடிக்கு உணவு உண்ணச் சென்றிருந்தீர். அங்குப் பரிமாறிக்கொண்டிருந்தவர் கையுறை அணியாமல் உணவைக் கையாண்டார். இது போன்ற நிலைகளை நீவிர் பல இடங்களில் நடைபெற்றுவருவதைப் பார்த்திருப்பீர். இவற்றை விளக்கி நீவிர் சுற்றுப்புற அமைச்சுக்கு எழுதும் ஒரு கடிதம்.

(இவ்வினாவிற்கு விடையளிக்கும்போது உமது பெயரையும் முகவரியையும் குறிப்பிடாமல் ``பாரதி`` என்ற புனைபெயரையும், புளோக் 219, ங் மோ கியோ அவென்யூ 6 # 12-42, சிங்கப்பூர் 260219 என்னும் முகவரியையும் குறிப்பிடுக.)
சுகாதார அமைச்சின் முகவரி: சுகாதார அதிகாரி சுற்றுப்புற அமைச்சு ஸ்காட்ஸ்சாலை சிங்கப்பூர்260112 *********************************************************************

விடை

பாரதி
புளோக் 116
சிராங்கூன் செண்ட்ரல்
# 11-46சிங்கப்பூர் 260116

04.04.2006

சுகாதார அதிகாரி
சுற்றுப்புற அமைச்சு
ஸ்காட்ஸ் சாலை
சிங்கப்பூர் 260112

மதிப்பிற்குரிய ஐயா

பொருள்: சுகாதாரக் குறைபாடு குறித்துக் கருத்துக் கூறுதல்

என் பெயர் பாரதி. நான் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் உணவங்காடியிலும் பொது இடங்களிலும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காத ஒருசிலரைப் பற்றி இக்கடிதத்தில் எழுதுகிறேன்.


நான் எங்கள் குடும்பத்தினரோடு சென்ற வாரம் திறந்த வெளி உணவங்காடிக்குச் சென்றிருந்தேன். உணவங்காடியில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர் கையுறை அணியாமல் உணவைக் கையாளுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்று வேறு சிலரும் பொது இடங்களில் சுகாதாரமற்ற முறையில் நடந்து கொண்டது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. எனவே, சுகாதாரத்தைப் பற்றிய தகவல்களை அறியாதோருக்குச் சுற்றுப் புற அமைச்சு சுகாதாரத்தைப் பற்றி எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நம் முன்னோர், `வரும்முன் காக்கவேண்டும்` என்று கூறியுள்ளனர். நமக்கு நோய்வராமல் இருக்க முதலில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அதன் அருகில் இருந்த மீன் கடைக்குச் சென்ற போது மீன்விற்பவர் நடைபாதையின் அருகில் எச்சிலைத் துப்பினார். இதனைக் கண்டதும் என்மனம் வாடியது. ``சுத்தம் சுகம் தரும்`` என்ற பழமொழியை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். சுகாதார அமைச்சு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பட்டறைகளைப் பல இடங்களில் நடத்தலாம். இவற்றின் மூலம் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு ஏற்படும்.
சுத்தத்தைக் கடைப்பிடிப்போம்சுகாதாரமாய் வாழ்ந்திடுவோம் இச்சையுடன் இனிதே இருக்கும்வரை தொடர்ந்திடுவோம்
என்பது போன்ற கூற்றினை பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எழுதிவைக்கலாம். நமது சிங்கை ஒரு தூய்மை மிக்க நாடாகத் தொடர்ந்து இருப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். மேலும், இவற்றின் மூலம் வருங்காலத்தில் சார்ஸ், டெங்கி போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் சிங்கப்பூரில் வராமல் தடுக்கலாம் என்று கூறி என்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பாரதி

2 comments:

  1. Name:L.Madhuvanthi Date:13th April 2009
    Class:1HT1 Subject:Book Review
    நான் படித்த கதையின் தலைப்பு சீவக சிந்தாமணி .இதை எழுதிய ஆசிரியரின் பெயர் M.நாராயணவேலுப்பிள்ளை இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழாசிரியர் .இக்கதை பெருங்காப்பியங்கள் ஐந்தினுள் ஒன்று ஆகும்..
    கதைச் சுருக்கம்
    மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிக்க நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன்அறிவு எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.
    முக்கிய பாத்திரங்கள்
    சீவகன்
    சச்சந்தன – தந்தை,
    விசயமாதேவி--தாய்
    கந்துக்கடன்--வளர்ப்புத் தந்தை
    நந்தட்டன், நபுலன், விபுலன்--வளர்ப்புத் தந்தையின் மக்கள்
    புத்திசேனன்,சீதத்தன், பதுமுகன், தேவதத்தன்--நண்பர்கள்
    காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை--சீவகன் மனைவியர்
    அச்சணந்தி--ஆசிரியர்
    கட்டியங்காரன்--பகைவன்
    __________________________________________________________________
    இக்கதையிலிருந்து நாம் 'நன்மைகள் விளைய நன்மைகள் செய்வோம்.நமக்கென உள்ளதைப் பிறருக்கு கொடுப்போம்' என்ற நல்வாக்கை அறியலாம்.

    ReplyDelete
  2. பரமார்த்த குரு கதைகள்(book review by R.Tejasvene – 1HT2):


    முதல் கதை:

    • முதல் கதை ஐந்து சீடர்களின் பெயர் குறிக்கிறது.
    • அவர்களின் குணாதிசயங்களை பற்றி எழுதப்பட்டுள்ளது.
    • மேலும்,பரமார்த்த குருவை பற்றி ஒரு கண்ணோட்டம்.
    • இந்த கதையை படிக்க மிகவும் சளிப்பாக இருந்தது.
    • ஏனென்றால்,அந்த கதை மிகவும் நிளமாக இருந்தது.



    இரண்டாம் கதை;

    • முதல் கதையை விட இரண்டாம் கதை எவ்வளவோ மேல்.
    • இரண்டாம் கதை கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது.
    • இந்த கதை அவர்கள் ஐவரும் வெளிநாடு புறப்படுவதை பற்றிது.
    • அதில் ஐவரும் பல ஊர்களுக்கு சென்று நன்கொடை வாங்குவார்கள்.
    • அதை வைத்து தங்களுடைய ஆசிரத்தை புதுப்பிக்க திட்டமிட்டர்கள்.

    முன்றாம் கதை:


    • உப்பு மூட்டையை விழுங்கிய ஆறு எனும் கதை இது.
    • இது நகைச்சுலையாக இருந்தது.
    • ஒரு பையத்தியக்காரக் கதை.
    • நல்ல மொழி வளம் உள்ள கதை.
    • நம்மை பொழுதுப் போக்க வைக்குல் கதை.

    ReplyDelete