Monday, April 6, 2009

இணையத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து வெளிநாட்டில் இருக்கும் தோழன் / தோழிக்கு நீ எழுதும் கடிதம்.


(கடிதத்தில் உன்பெயரை அல்லி என்றும் முகவரியை 14 அலெக்ஸாண்டர் சாலை, கட்டட எண் 32 #13-02 சிங்கப்பூர் 222632 என்றும் குறிப்பிடுக).


அல்லிகட்டட எண் 32#13-02
அலெக்ஸாண்டர் சாலை
சிங்கப்பூர் 222632
03.04.2009



அன்புள்ள தோழி அல்லிக்கு,


இங்கு நானும் எனது குடும்பத்திலுள்ளவர்களும் நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்குள்ள நீயும் உனது குடும்பத்தினர்களும் நண்பர்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உடல் நலமில்லாமல் இருந்த உனது பாட்டி இப்பொழுது எப்படி இருக்கிறார்? அவரை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல். உனது அண்ணன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல பணி கிடைக்க நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.

நீ சென்ற கடிதத்தில் இணையத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து என்னை உனக்குக் கடிதம் எழுதச் சொன்னாய். இன்றைய உலகில் இணையத்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், உலகோடு ஒட்டி வாழ்`` என்பதற்கு ஏற்ப நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள இணையம் மிகவும் உதவி செய்கிறது. இன்றைய சூழ்நிலையில் நாள் தோறும் வெளிவருகின்ற செய்தித் தாள்களைக் கூட நம்மால் பொறுமையாக அமர்ந்து படிக்க முடியவில்லை; படிக்க நினைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. உலகில் வெளிவரும் செய்திகள் அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இணையத்தால் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல தமிழிலும் ஏராளமான இணையப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். இவற்றின் மூலம் நமது பண்பாட்டைப் பற்றியும் பாரம்பரியத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளலாம். இவ்விலக்கியச் செய்திகளை நாம் படிக்கும் போது நமது முன்னோர்களைப் பற்றிய அரிய செய்திகள் நம் நெஞ்சில் `பசு மரத்தாணி போல` பதிந்து விடுகிறது.
இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. எந்த நாட்டிற்குப் போகவேண்டுமானாலும் நமது பயணச் சீட்டுகளை முன்கூட்டியே இதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். வேலை வாய்ப்புகளையும் அறிந்து கொள்ளலாம்
.
``புத்திமான் பயில்வான் வான்`` என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறந்து விளங்க எப்படிப்பட்ட கல்வியைக் கற்க வேண்டும் என்று தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இதன் மூலம் எளிமையாகப் புரியும் பாடங்களையும் விரும்பிய பாடங்களையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினைப் பெறுகிறோம். உடல் நலமில்லாதவர்கள் சிறந்த மருத்துவர்களிடம் இணையத்தின் மூலம் மருத்துவ லோசனையும் பெறலாம்.

மருத்துவர்கள் ஒரு நாட்டில் அறுவைச் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றொரு நாட்டில் இருக்கும் மருத்துவர்களிடம் உடனுக்குடன் லோசனை பெறவும் இணையம் மிகவும் உதவி செய்கின்றது. நம்மைப் போன்று படிக்கும் மாணவர்கள் பாடங்களைப் பற்றி விரிவாகப் படிக்கவும் செயல் திட்டங்களை எளிமையாக முடிக்கவும் உதவி செய்கின்றது.
இக்கடிதத்தில் எழுதியுள்ள கருத்துகள் மூலம் இணையத்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை நீ அறியலாம். இதுபோல் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக எனக்குக் கடிதம் ஒன்று எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

உன் அன்புத்தோழி
அல்லி.


கடிதம் செல்ல வேண்டிய முகவரி

. வளர்மதி,
22 அண்ணா சாலை,
சென்னை 600022,
தமிழ் நாடு,
இந்தியா.




கடிதம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை.



• கடிதம் எந்தப் பிரிவைச் சேர்ந்தது (அலுவலகக் கடிதம் அல்லது உறவுக் கடிதம்) என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.•


அனுப்புநர் முகவரியைத் தொடக்கத்திலும் அதன்பின்னர் தேதியையும் தேதிக்கு அடுத்து விழிப்பையும் (அன்புள்ள தோழிக்கு) கடிதம் எழுதிய பின்னர் கடிதம் செல்ல வேண்டிய முகவரியையும் உறவுக் கடிதத்தில் எழுதவேண்டும். •


தொடக்கத்தில் நலம் விசாரித்தல் (உறவுக் கடிதத்தில்) -

ஒரு பத்தி• தலைப்பைப் பற்றிய விளக்கம் –

இரண்டு பத்திகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் -

தலைப்பை ஒட்டிச் செல்ல வேண்டும்.•

கடிதத்தின் முடிவு - எழுதிய செய்திகளின் சுருக்கம் -

ஒரு பத்தி போதும்.• கேட்கப்பட்ட சொற்களின் எண்ணிக்கையில் கட்டாயம் எழுத வேண்டும் -

சொற்களை அடிக்கடி எண்ணக் கூடாது - கருத்தோட்டம் தடைபடும்.•

முடிவில் உள்நாட்டிற்கு அனுப்பும் கடிதமா? வெளிநாட்டிற்கு அனுப்பும் கடிதமா? என்பதை மனத்தில் கொண்டு கடிதம் செல்ல வேண்டிய முகவரியை எழுத வேண்டும்.

No comments:

Post a Comment