Monday, April 6, 2009

கட்டுரை

சிங்கப்பூர் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற நாடாகத் திகழ்கிறது: கருத்துரைக்க. உமது கட்டுரை சுமார் சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


இன்றைய உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எல்லா நாடுகளிலும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு நாட்டின் தட்பவெப்பம் இயற்கை அமைப்பு ட்சிமுறை போன்றவை சிறப்பாக அமையும் போது அந்த நாட்டில் வாழும் மக்கள் மிகவும் சிறப்பாக வாழ்வார்கள். இத்தகைய சூழல் எல்லா நாட்டிலும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. இருப்பினும் ஒவ்வொரு நாடு இருக்கின்ற வசதிகளைப் பொருத்து முன்னேறி வருகின்றன. இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கின்ற போது நம்நாடு வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

நாட்டைப் பற்றி இலக்கணம் கூற வந்த வள்ளுவர்,
கியவை அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாடு சிறந்த நாடாக விளங்குவதற்கு அந்நாட்டு மக்கள் முதல் காரணமாக அமைகின்றனர் என்று சொல்லலாம். மிகக் குறைந்த இயற்கை வளத்தை உடைய நம் நாட்டில் மக்களின் கடின உழைப்பு முதலிடத்தைப் பெறுகிறது. இவர்கள் கடுமையாக உழைப்பதற்கு ஏற்ற வாய்ப்பும் இங்குக் காலங்காலமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று கூறலாம். இங்கு உழைப்பு முதலிடத்தைப் பெறுவதால் அந்த உழைப்பை நம்பி வாழும் மக்கள் இதனை சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறலாம்.

கல்வியில் சிறந்த நாடே உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். இதனைத்தான் வள்ளுவர் ``கண்ணுடையோர் என்போர் கற்றோர்`` என்று கூறுகிறார். இங்கு வாழும் மக்கள் அனைவரும் கட்டாயம் கற்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தலையாக நோக்கமாக அமைந்துள்ளது. ரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் கல்வி கற்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் சமூக அமைப்புகளும் அரசாங்கமும் மிகவும் கவனமாக இருக்கின்றன. இவை படிப்பதற்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தருகின்றன. `வானமே எல்லை` என்பதற்கு ஏற்ப எங்கும் சென்று கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இங்கு அதிகமாகச் செய்து தரப்படுகிறது.

இங்கு வாழும் மக்கள் தொழிற்சாலைகளின் மூலமும் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்வதன் மூலமும் வாழ்க்கை வசதியைப் பெருக்கிக் கொள்கின்றனர். மக்கள் தங்களின் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற சூழலும் உருவாக்கிக் தரப்படுகிறது. இதனால் மக்களின் பொருளாதாரம் சிறந்த நிலையில் அமைந்து வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுவருகிறது. இன்றைய உலகில் மனிதனின் தேவையை நிறைவேற்றி வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை இங்கும் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறியுள்ளன. புத்தம் புதிய உலகத்தைப் போல் இந்நாடு விளங்கிவருகிறது.

இன்று உலகில் ஒருசில நாட்டில் வாழும் மக்கள் அமையில்லாமல் வாழ்கிறார்கள். அவற்றில் போரும் பூசலும் நிறைந்து காணப்படுகின்றன. சிங்கப்பூரின் நிலை முற்றிலும் மாறுபட்டது. இது, பாதுகாப்பு நிறைந்த நாடாக விளங்கி வருகிறது. இளையர்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவையில் பங்குகொள்கின்றனர். இதன் மூலம் உடலும் உள்ளமும் வலுப்பெற்று விளங்குகின்றனர். `` அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பது இல்லையே`` என்ற பாடல் வரிக்கேற்ப இளையர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. பொது மக்கள் இரவு பகல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நம்மையும் தீமையும் பிறர் தர வாரா என்ற பொன்மொழியை மனத்தில் கொண்டு வாழ்ந்தால் நிறைவாக வாழலாம்.

உலக அரங்கில் சிங்கப்பூர் ஒரு பசுமை நிறைந்த நகரமாக காட்சியளிக்கிறது. எங்குப் பார்த்தாலும் பச்சை நிறமாகத் தெரிகிறது. பச்சை நிறம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நிறமாகும். மனத்திற்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் நிறமாகும். மேலும், இங்குச் சுகாதாரம் பேணிக்காக்கப்படுகிறது. ``சுத்தம் சுகம் தரும்`` என்ற பொன்மொழியை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொல்வோமானால், சுத்தமான குடிநீர், ஒழுகாத வீடு, தரம் நிறைந்த சாலைகள், சிறந்த உல்லாசப் பொழுபோக்குகள், சிறந்த உணவு மையங்கள், சிறந்த கல்விக்கூடங்கள், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் போன்றவை இங்கு அமைந்து மக்கள் வாழ்வதற்குச் சிறந்த இடமாக இந்நாடு விளங்குகிறது என்று கூறலாம்.










______________________________________________________________________________________________

************************************************************************************

ஓர் இலட்சியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீவிர் கருதுகிறீர்?

``குடும்பம் கோவிலுக்கு ஒப்பாகும்`` என்பது நமது முன்னோர்களின் வாக்கு. இக்கோவிலைக் கட்டிக்காப்பது நமது கடமையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தின் அமைப்பைப் பொறுத்தே அந்தக் குடும்பத்தில் வாழ்வோரின் வாழ்க்கைத் தரம் அமைகிறது. சிறந்த குடும்பம் அமைவதற்குச் சில திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் தொகுப்பாக ஓர் இலட்சியக் குடும்பம் விளங்குகிறது. எனவே, ஓர் இலட்சியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஓர் இலட்சியக் குடும்பம் பிணைப்பு மிக்க குடும்பமாக இருக்க வேண்டும். அக்குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். ``மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்`` என்ற தத்துவத்தைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும். மூத்தோர் ஒருசில நேரங்களில் கோபத்தில் சிலவற்றைச் சொன்னாலும் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் அக்கோபத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண்பினைப் பெற்றிருக்க வேண்டும். பிணைப்பு மிக்க குடும்பம் சிறப்புப் பெற்ற குடும்பமாகக் காலப்போக்கில் மாறும். அக்குடும்பத்தில் அன்பு நிறைந்திருக்கும். அது வள்ளுவரின், ``அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது`` குறளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.

குடும்பத்திலுள்ள அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். ``கற்கை நன்றே கற்கை நன்றே`` என்ற முதியோர் வாக்கிற்கேற்பக் கல்வியின் சிறப்பினை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தில் எப்படிப்பட்ட `ஏற்றத் தாழ்வு` ஏற்படினும் கல்விக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் கொடுக்க மறக்கக் கூடாது. வறுமையான குடும்பமாக இருந்தாலும் சிறந்த கல்வி அறிவைப் பெறும் போது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடையதாக அமைவற்குரிய வாய்ப்பு ஏற்படும்.

குடுபத்திலுள்ளோர் சிறந்த ஒழுக்கக் கூறுகளை உடையவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கக் கேடு வந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக அக்குடும்பத்தைக் காக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற குறள் வரியைப் பொன்னே போல் போற்றிப் பின்பற்ற வேண்டும். இதனைப் பின்பற்றும் போது சிறந்த பண்புடைய குடும்பமாக மாறும். அக்குடும்பம் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறும். ___ல்லொழுக்கமுடைய குடும்பத்தினரோடு தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் சிறந்த சமுதாயத்தைச் சமைக்கும் ற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். சமூகப் பண்புகளை எப்பொழுதும் மறக்கக் கூடாது. தாம் வாழும் நாட்டிற்கு அக்குடும்பம் கடப்பாடுடையதாக இருக்க வேண்டும். நன்றியுள்ள குடிமக்களாக அக்குடும்பத்தினர்கள் விளங்க வேண்டும். மேலும், நல்லதோர் லட்சியக்குடும்பம் பிறரது வாழ்வில் அக்கறை கொண்டு பிறர்நலனையும் போற்றி பிறரைப் பாராட்டும் நற்குணம் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment