Saturday, March 28, 2009

உயர்நிலை 4. இலக்கியம் 2 மாணவர்கள் கவனத்திற்கு.

கீழ்க்கண்ட வினாக்களில் ஒன்றைத் தேர்வு செய்து குறைந்தது ஐந்து கருத்துகளைத் தமிழில் தட்டச்சு செய்து வலைப்பூ பக்கத்தில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில்

கோகிலா ________ பண்பு நலன்கள்.


2. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் முக்கியப் பாத்திரமாக வரும் அனந்தராமனின் பண்பு நலன்கள்

3. நாவலில் உங்களுக்குப் பிடித்த ஐந்து நல்ல வரிகள்

4. கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் நாவலில் இடம்பெறும் நண்பனின் உயர்ந்த குணங்கள்

5. சமூகக் கருத்துகள் ஐந்து


6. கீழ்க்காணும் பாடலில் வரும் நயத்தை மட்டும் விளக்கு.

``வலையில் சிக்கிய மீன்
வலையைக் கிழித்து வந்தது
வாழ மிகத் துடித்தது
வாமும் முறையைக் கற்றது!``


உயர்நிலை 1, 2, 4 வகுப்பு மாணவர்கள் இதுவரை தமிழில் படித்துத் தட்டச்சு செய்த கட்டுரை அல்லது கதைப் பகுதியை இப்பக்கத்தில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




9 comments:

  1. கோகிலாவின் நன்பன் கோகிலவுக்கும் அவலள் குடும்பத்திற்கும் நல்உறவு ஏற்படுத்த தூதுவனாக இருந்தான்.

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்த ஒருவர்
    நம் வாழ்க்கையில் நமக்குப் பிடித்த ஒருவர் இருப்பார். அவர் நம் அப்பாவாகவோ, அம்மாவாகவோ, அக்காவாகவோ, பாட்டியாகவோ அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். அவரிடம் காணப்படும் நற்குணங்களைக் கூட நாம் பின் பற்றி வருகிறோம். என் வாழ்க்கையிலும் எனக்குப் பிடித்த ஒருவர் இருக்கிறார்.

    அவருடைய முகம், அழகு, நடை, பாவனை, பேச்சு மற்றும் நல்ல குணம் எல்லாம் என்னைப்போல் இருக்கும். இதையே விரிவாகச் சொன்னால், நான் அவரை உரித்து வைத்தது போல் இருப்பேன். இதை எல்லாம் விட, அவரிடம் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடிக்கும். அவருடைய அறிவும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் யார் என்று அரிய ஆவலாக உள்ளதா? என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்று பாசமாக வளர்த்தவர். அவர் தான் என் ‘அம்மா’.

    என் அம்மாவைப் பற்றிக் கூறுவதற்கு நிறைய உள்ளது.அவர் எனக்குத் தாயாக மட்டுமின்றி ஒரு நல்ல தோழியாகவும் இருப்பார். என்னிடம் சகஜமாகப் பேசுவதும் பழகுவதும் என் அம்மா மட்டும் தான். அவருடைய நல்ல குணங்களும் என்னை மிகவும் ஈர்த்த ஒரு விஷயம். அவருடைய நல்ல குணம் என்று கூறினால் அது அவருடைய நேர்மையாகும். ஏனென்றால், எனக்குத் தெரிந்த வரைக்கும் அவர் அப்பாவிடமும் என்னிடமும் வேறு யாரிடமும் பொய் கூறியதில்லை.

    அவருடைய அறிவும், திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று முன்பே கூறினேன். ஆமாம், அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏன்னென்றால், அவர் படிக்கும் கானத்தில் அவருடைய வகுப்பிலேயே முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று என் அப்பா அடிக்கடி என்னிடம் கூறியது இன்றும் என் மனத்தில் அசையாத சிலை போல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு தாதியாகுவம் இருந்தவர். எனக்கோ அல்லது என் தம்பிகளுக்கோ படிப்பில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் என் அம்மா தான் தீர்த்து வைப்பார். அவர் ஓவியம் வரைவதிலும் நடனம் ஆடுவதிலும் மற்றும் நிறைய திறமைகளிலும் அவர் கெட்டிக்காரர்.

    அவருடைய நல்ல குணத்தால் நான் அடையும் பயன் என்னவென்றால், அவர் படிக்கும் காலத்தில் அவரால் அவருடைய வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ முடிந்தால், அவருடைய மகளாகிய நான், என்னால் முதல் மாணவியாக அல்லது படிப்பிலும் மற்றும் குணத்திலும் என்னால் என் பள்ளியில் பெயர் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன் மற்றும் என் அம்மாவும் நம்புகிறார். நான் பின்பற்றும் அவருடைய நற்குணங்கள் என்னவேன்றால் என் அம்மாவைப்போல் நேர்மையாக இரும்மதே ஆகும்.

    எல்லோருக்கும் அம்மா இருப்பார். ஆனால், பாசமும் ஆதரவும் எல்லா அம்மாவும் தன் பிள்ளைகளுக்குமக் காட்டுவதில்லை. நான் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ எனக்குப் பாசமும் ஆதரவும் கொடுக்கும் ஒரு நல்ல அம்மா கிடைத்திருக்கிரார். எனக்கு ஒரு நல்ல அம்மா கிடைத்ததிற்கு அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி கூறவேண்டும். அதனால் தான் மூன்று எழுத்தில் கூட ஒரு கவிதை எழுதிருக்கிறார்கள். ‘ஆம்மா’

    நன்று!
    கு.காயத்திரி
    வகுப்பு- 4NA
    ________________________________________________________

    ReplyDelete
  3. உன் பள்ளி விடுமுறையைப் பயனுள்ள வழியில் கழித்ததைப் பற்றி உன் தோழன் அல்லது தோழிக்கு ஒரு கடிதம் எழுது.

    காயத்திரி

    புளோக் 38
    அப்பர் பூன் கெங் சாலை
    #18-2402
    சிங்கப்புர் 380038

    06-03-09

    அன்புள்ள தோழி மீராவுக்கு,


    உன் அன்புத் தோழி காயத்திரி எழுதுவது. இங்கு நானும் என் பெற்றோரும் நலம். இதுபோல் அங்கு உன் நலமும் உன்னுடைய பெற்றோரின் நலமும் அறிய ஆவல். உன்னுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீ உன் பள்ளி விடுமுறையை உன் பெற்றோருடன் இந்தியாவிற்குச் சென்று கழித்ததாக எழுதிருந்தாய். நானும், என் பெற்றோருடன் கெனடாவில் என் விடுமுறையைக் கழித்தேன்.

    கெனடாவிற்குச் சென்றபோது அங்குக் குளிராக இருந்தது. ஆனால், அந்தக் குளிரிலும் நிறைய சந்தோஷத்தையும் அடைந்தோம். அங்கு மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால், எங்களால் நிறைய இடங்களைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்தோம். அங்கே, எனக்கு இரண்டாவதாகப் பிடித்த விஷயம் என்னவென்றால், அது அங்குள்ள உணவு தான். அங்குள்ள உணவுகள் எல்லாம் நன்றாக சமைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அதைச் சாப்பிடுவதற்கு மிக ருசியாகவும் அருமையாகவும் இருந்தது. அதோடு, அங்கு வசிக்கும் மக்கள் எல்லோரும் எங்களுடன் அன்பாகப் பழகினார்கள். நாங்கள் சிங்கப்பூர் திரும்பும் போது, என்னால் கெனடாவை விட்டு வர மனம் இல்லை. எனக்கு மட்டும், இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால், நான் நிச்சையமாக என் பெற்றோருடன் மீண்டும் கெனடாவிற்குச் செல்வேன்.

    எனவே, எனது பள்ளி விடுமுறையை என்னால் மறக்க முடியாது. இத்துடன் எனது கடிதத்தை முடித்துக் கொள்கிறேன். மறவாமல் பதில் கடிதம் எழுதி அனுப்பு.
    உன் பதில் கடிதத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இப்படிக்கு
    உன் அன்புத் தோழி
    காயத்திரி

    பெறுநர் முகவரி

    மீரா
    புளோக் 23, #12-789
    டார்சட் சாலை
    சிங்கப்புர் 340023

    ReplyDelete
  4. கருத்தறிதல்


    (1) வீக்டரின் பலவீனம் அவனுடைய கோபமே ஆகும். கோபமாக இருக்கும் போதெல்லாம், அவன் மரியாதையின்றிப் பேசியும் நடந்ததும் மற்றவர் மனத்தைப் புன்படுத்திவிடுவதுமே, அவன் கோபத்தால் ஏற்படும் பாதிப்பாகும்.

    (2) ஆணிகளை வேலியில் அடிப்பதைவிட விக்டருக்குத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயல்வது எலிதாக இருந்ததால், அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அதனால்தான், அவன் அடித்த ஆணிகளின் எண்ணிக்கை குறைந்ததிற்குக் காரணம்.


    (3) ‘‘இன்று நான் ஓர் ஆணிக்கூட அடிக்கவில்லை,’’ என்று விக்டர் கூறியதிலிருந்து நான் என்ன அறிகிறேன் என்றால், அந்த நாளில் அவன் யாரிடமும் கோபம் படவில்லை என்பதை ஆகும்.

    (4) விக்டரின் அப்பா சிரித்ததிற்குக் காரணம் என்னவேண்றால், விக்டர் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவன் அடித்த ஆணிகளுக்குச் சமம் என்பதாலும், அந்தத் தவற்றைச் செய்துவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்டது, அவன் ஆணிகளைப் பிடுங்கியதற்குச் சமம் என்பதாலும், அவன் தன் வார்த்தைகளால் மற்றவர்களின் மனத்தில் ஏற்படுத்திய காயங்களுக்குச் சமம் என்பதே ஆகும்.


    (5) விக்டர் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டதே அவன் முழு வெற்றிக்குக் காரணம்.

    ReplyDelete
  5. பெயர்- காயத்திரி
    தமிழில் தட்டச்சு செயும்போது கடினமாக இகுக்கும்.
    தொடர்ந்து செயும்பொது முதலில் கடினமாக இருக்கும்.



    நாம் நினைத்த செய்தியை தட்டச்சு செயல்லாம். அதனை, நண்பருக்கு அனுப்பலாம். நண்பர் படிக்கும்போது, எலிமையாகப் படித்து புரிந்துக்கொள்வார். நாம் இப்பொழுது
    பெறும் பயிற்ச்சி, நாம் எதிர் காலத்தில் உதவி செயும். நமக்கு தட்டச்சு முறையை சொல்லிக்கொடுத்த, ஆசிரியரையும், உதவி செய்தவரையும் என்றும் மறக்காமல் இருப்போம்.
    இப்பொழுது

    ReplyDelete
  6. அலுவலகக் கடிதம்
    உன்னுடைய பகுதியில் இரவுநேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துச் சமுகமன்றத்திற்கு எழுதும் ஒரு கனிதம்.

    ¬அனுப்புநர்
    காயத்திரி
    புளோக் என் 87
    பொங்கோல்
    அவென்யூ 4,#09-333
    சிங்கப்பூர் 310087

    08-04-2009

    பொறுப்பதிகாரி
    பொங்கோல் சமூகமன்றம்
    சிங்கப்பூர் 310097

    மதிப்பிற்குரிய ஐயா,
    பொருள் – சுற்று வட்டாரத்தில் உள்ள பிரச்சனைகள் மனுக்கொடுத்தல்.

    வணக்கம்! என் பெயர் காயத்திரி. நான் பொங்கோல் வட்டாரத்தில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறேன். மிக அமைதியான ஒரு இடம். ஆனால், சமிபக் காலமாக அந்த அமைதி குறைந்துக்கொண்டே வருகிறது. இந்த வட்டாரத்தில் நிறையப் பிரச்சனைகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமாக இரவு நேரங்களில் தான் இந்த பிரச்சனை நிகழ்கிறது. ஆகவே, அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    என் வட்டாரத்தின் கீழ் பகுதியில் ஆட்கள் போடும் சத்தம் பெறும் தொல்லையாக உள்ளது. அவர்கள் குடியால் மட்டுமின்றி, மற்ற சண்டைகளைப் போட்டு சத்தம் போடுகின்றனர். ஆதோடு, இங்கு ஒரு கொல்லைக் கூட்டமே நடமாடுகிறது. பக்கத்தில் உள்ள கடைக்குச் செல்லக் கூட நானும், இங்குள்ள குடியிருப்பார்களும் அஞ்சுகிறோம். ஏன்னென்றால், இங்கு திருடர்கள் நம்மை வழிமறைத்தும், மிரட்டியும் எங்களுடயை பணங்களையும், நகைகளையும் திருடிச் சென்றுவிடுகிறார்கள். எனவே, பல சிரமங்களை நாங்கள் எதிர் நோக்குகிறோம்.

    ஆகவே, இங்குள்ளப் பிரச்சனைகளை உங்களால் மட்டும் தான் தீர்த்து வைக்கமுடியும். மேலும், இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இப்படிக்கு,
    தங்கள் உன்மையுள்ள,
    காயத்திரி

    ReplyDelete
  7. கதையின் தலைப்பு -- இணைப்பாடம் நடவடிக்கைகளின் அவசியம்
    கதைப் பாத்திரங்கள் -- 0
    கதையின் கரு -- சிங்கப்பூரில் மாணவர்கள் இணைப்பாட நடவடிக்கைகளின் மூலம் எப்படி பயன் அடைகிறார்கள்
    கதையின் சுருக்கம் -- சிங்கப்பூர் அரசாங்கம் மாணவர்களை இணைப்பாட நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊக்குவிக்கிறது.
    கதையின் நீதி-- அரசாங்கம் மாணவர்களை இணைப்பாட நடவடிக்கைகளில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது



    கதையின் தலைப்பு -- நம் அன்றாட வாழ்வில் அறிவியல்
    கதையின் பாத்திரங்கள்-- 0
    கதையின் கரு -- அன்றாட வாழ்வில் அறிவியல் முக்கிய பங்கை ஆற்றுகிறது.
    கதையின் சுருக்கம் -- அன்றாட அறிவியல் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றுகிறது. சிறு மீன்பிடி கிராமமாகத் திகழ்ந்த நமது சிங்கப்பூர் இப்போது பலர் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்குப் பல வெற்றிகளை சாதித்து உள்ளது. அதற்கு காரணம் அறிவியலாகும்.
    கதையின் நீதி -- அறிவியல் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

    ReplyDelete
  8. கதையின் தலைப்பு -- மாணவரும் சமூக தொண்டும்
    கதையிப் பாத்திரங்கள் -- 0
    கதையின் கரு -- சிங்கப்பூர் குடிமகனான நாம் ஒவோருவரும் ஏதாவது வழியில் நம் சமுதாயத்திற்கு பனி புரிய வேண்டும்.
    கதையின் சுருக்கம் -- நாம் பெரிய சாதனைகளை செய்து பீரும் புகழும் வாங்குவது அவசியமல்ல. ஒரு சிறிய செயலை செய்து நம் சமுதாயத்திற்கு இடையுறாக இருக்காமல் ஒரு நல்ல குடிமகனாக திகழ்வது தான் இன்றியமையாதது.
    கதையின் நீதி -- மாணவர்களாலும் சமூகத் தொண்டு செய்ய முடியும் என்பதாகும்.

    ReplyDelete
  9. உமருப் புலவர் தமிழ் மொழி நிலையம்


    புத்தகத்தை படித்து ஏழுதல்
    1HT4
    கார்த்திகேசன்
    தழுவல்:புத்தகம்: உயர்நிலை 1 உயிர்நிலை 2 பரிசு பெற்ற கட்டுரைகள்

    முதல் கதை (பக்கம் 31)

    கதையின் தலைப்பு:
    வாழ்க்கையில் சிறந்து விளாங்குவதற்கு தேவையான பண்புகள்.

    கதையின் கரு:
    நல்லொழுக்கத்துடன் இருப்பதன் அவசியம்.

    கதை பாத்திரம்:
    எழுத்தாளர் மட்டுமே!

    கதையின் சுருக்கம்:
    சிங்கப்புர் போன்ற போட்டி தன்மை வாய்ந்த நாட்டில் குளுரைத்தவண்ணம் இருப்பதிலும் எந்த பயனும் இல்லை.செயலில் காட்டுவதொடு, வெற்றி பாதைக்கு செல்ல சில வகையான குணாதிசயங்கள் தேவை.மேலும் நலொழுக்ககத்தோடு இருக்க வேண்டும். சமுக குறிகோள்கள் கொண்டிருக்க வேண்டும்.கல்வி ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் குறிகோள்கள் அமைந்தால் சிறப்பாக இருக்கும். எந்த செயலில் இறங்கினலும் அதை முழுமுச்சுடன் செய்தல் வேண்டும்.ஒப்புரவு,ஓழுக்கம், அறனுடமை,தன்னட்க்கம் போன்ற பண்புகள் அதில் அடங்கும்.

    கதையின் நீதி:
    நல்லொழுக்கத்துடன் இருப்பதெ வெற்றியின் முதல் படிக்கல்..

    சமுக பண்பாடு:

    இப்பொழுதைய போட்டி தன்மை வாய்ந்த சமுதயாத்தில், ந்ம்மை போன்றவற்கள் கல்வியில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிகோள்கலை மட்டும் கொண்டிருந்தால் மட்டும் இருந்தால் போதாது. சமுக கூறிகோள்கலையும் கொண்டிருந்தால் தான் சிகரத்தை அடைய முடியும்.நல்ல பண்புகளை கொண்டிருப்பதே நம் கல்வியில் முன்னேற கட்ட வேண்டிய அடிதளம்.


    நல்லொழுக்கத்துடன் இருந்தால் எந்த துன்பம் வந்தாலும் அதை முறையடித்து விடலாம்.

    முற்றும்


    புத்தகத்தை படித்து ஏழுதல் 2
    தழுவல்:புத்தகம்: உயர்நிலை 1 உயிர்நிலை 2 பரிசு பெற்ற கட்டுரைகள்

    இரண்டாவது கதை
    கதையின் தலைப்பு:
    என் வாழ்க்கையில் நான் பின்பற்ற விரும்பும் ஒருவர்.

    கதையின் கரு:
    ஒரு தலைவர் புரிய வேண்டிய சேவைகள்.

    கதை பாத்திரம்:
    எழுத்தாளர் மட்டுமே!

    கதையின் சுருக்கம்:
    மிகவும் உன்னத நிலையில் சிங்கை உள்ளது. அவ்வாறு இருக்கிறது என்று கூறினால் அது திரு லி க்கு வான் யூ என்று கூறினால் அது மிகையாகாது . தன்னலம் கருதாமல் ,சிங்கையை நல்வழிப்டுத்த வேண்டும் தன் நாட்டை தலை குனிய வைக்க கூடாது,எல்ல நாட்டிற்க்கும் ஒரு முன் மாதிரியக இருக்க வேண்டும், யாரின் உதவியின்றி சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும் என்ற் நல்லெண்ணத்தில் அவர் செய்த உதவியால் தான் சிங்கப்பூர் இவ்வாறு முன்னெறி உள்ளது.சிங்கையில் மதிப்பு கூறிய திரு லீக்கு வான் யூ இல்லை என்றால் சிங்கை இல்லை,அது ஒரு மீன் பிடிகிரமமாகவே இருந்திருக்கும் .இதனாயிலே பலருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.
    கதையின் நீதி: --- இல்லை----

    சமுக பண்பாடு:

    நாம் ஒரு தலைவராக நியமிக்கப்பட்டால், பணத்திருக்காக்வோ பட்டத்திருக்காகவோ வேலை செய்யக்கூடாது.ஆனால் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாட்டை வள்முள்ளதாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் செய்ல் படுதல் வேண்டும். அப்பொது தான் மக்கள் நம்மை மதிப்பார்க்ள்.

    முடிவுறை:
    ஒரு தலைவ்ர் ஒவொறு நாட்டிற்கும் வேண்டும்.நாம் ஒரு தலைவராக நியமிக்கப்பட்டால் மதிப்பு கூறிய திரு லீக்கு வான் யூ அவரை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

    முற்றும்


    புத்தகத்தை படித்து ஏழுதல் 3
    தழுவல்:புத்தகம்: உயர்நிலை 1 உயிர்நிலை 2 பரிசு பெற்ற கட்டுரைகள்
    முன்றாவ்து கதை

    கதையின் தலைப்பு:
    மாணவரும் சமுகத்தொண்டும்

    கதையின் கரு;
    சமுக தொண்டால் வீளையும் பயன்.

    கதை பாத்திரம்:
    எழுத்தாளர் மட்டுமே!

    கதையின் சுருக்கம்:
    பெரியவர்களால் தான் சமுக தொண்டு புரிய முடியும், மாணவர்களால் புரிய முடியாது என்ற ஒரு தவறான எண்ணத்தை மாணவர்கள் வைத்து உள்ளார்கள்.ஆனால் மாணவர்களால் தினசரி வாழ்க்கையில் ஏதாவது சமுக தொண்டு புரிய முடியும் என்றும், புரிந்து கொண்டே இருக்கிரார்கள் என்பதையும் அவ்ர்கள் மறந்து விடுகிறார்கள்.குப்பையை பொருக்கி குப்பை தொட்டியில் பொடுவ்து,ஓய்வு நேரங்கலில் அருகில் உள்ள முதியோர் இல்லத்திருக்கு சென்று அங்கு பணியாற்றுவது, பள்ளியிலும் வகுப்பிலும் உள்ள குப்பைகளை அகற்றுவ்து, புரியாத பாடங்களை த்ன் சக மாணவர்களுக்கு கற்றுப்கொடுப்ப்து இதில் அட்ங்கும்.இதுபோனற சிருசிரு ச்முக தொண்டுகலை மாண்வர்கல் புரிந்து வ்ருகிறார்கள்.

    கதையின் நீதி: --- இல்லை----

    சமுக பண்பாடு:
    மாணவர்களாகிய நாம் சிறிய வழிகளில் ச்முக தொண்டுகலை புரிவதால் நம் தேசம் பெரும் வளர்ச்சி அடைகிற்து.ச்முக தொண்டுகலைப் புரியவ்ட்டாலும் உபத்த்ர்வம் செய்யக்கூடாது.உபத்த்ர்வம் செய்வது சமுகத்திருக்கு எதிராக செய்ல்ப்டும் செய்ல்.

    முடிவுறை:
    மாணவ்ர்கலாகிய நாம் ச்முக தொண்டுகல செய்யமுடியும்.

    ReplyDelete