Wednesday, March 25, 2009

VANAKKAM

VANAKKAM

16 comments:

  1. àé¢è÷¢ ê¤ï¢îù袰

    ï£ñ¢ õô¢ôõó¢è÷£è Þ¼ð¢ðîõ¤ì ïô¢ôõó¢è÷£è Þ¼è¢è ºòø¢ê¤ ªêò¢ò «õí¢´ñ¢.

    ï£ñ¢ ªêò¢»ñ¢ ºòø¢ê¤ ïñ¢ñ ïô¢õö¤ð¢ð´î¢î ºòø¢ê¤ ªêò¢»ñ¢

    ï£ñ¢ ïô¢õö¤ð¢ð´ñ¢«ð£ ïñ¢ à÷¢÷ñ¢ Éò¢ñ Üì»ñ¢

    ïñ¢ à÷¢÷ñ¢ Éò¢ñ Üì»ñ¢«ð£ ï¤ê¢êòñ¢ àìô¢ Éò¢ñ Üì»ñ¢

    âð¢ªð£¿ñ¢ ð¤øó¢ ñùñ¢ ¹í¢ðì£ñô¢ Þ¼è¢è ñùî¢î÷õ¤ô¢ ºòø¢ê¤ ªêò¢ò «õí¢´ñ¢

    «è£ðñ¢ ïñ¢ºìò ºîô¢ âî¤ó¤

    «è£ðî¢î Üì袰ñ¢«ð£ ï£ñ¢ ñùî¢î÷õ¤ô¢ ê£ï¢îñ¢ Üì«õ£ñ¢ ..

    ªî£ì¼ñ¢

    ReplyDelete
  2. சீவகசிந்தாமணி

    ஏமாங்கத நாட்டில் தலைநகர் இராசபுரம். மன்னன் சச்சந்தன் சீவகனின் தந்தை. மன்னனின் பண்புகளை மக்கள் புகழ்தனர். எனினும் சச்சந்தன் ஒரு தவரு இழைத்தான். தன் மனைவியை பிரியாமல் இன்ப வள்ளத்தில் மூழ்கினான். அதனால் ஆட்சி பொறுப்பை மறந்தான். தன் ஆட்சியை கட்டயங்காரனிடம் ஒப்புவித்தான். கட்டியங்காரன் அரசனை கொல்ல கருதனான். உடனே அரசன் தன் மனைவியை மயில் பொறியில் ஏற்றி அனுப்பினான். போரில் மாண்டான். மயில் பொறி சுடுகாட்டில் இறங்கியது. அங்கே அவள் ஒரு ஆன் குழந்தையை பெற்றாள். வணிகன் தன் குழந்தயை அடக்கம் செய்ய வந்தான். அரசி குழந்தயை விட்டுவிட்டு மரத்தின் பின் ஒழிந்துகொண்டாள் அக்குழந்தையை கண்டு அதை எடுத்து வீடு திரும்பினான்.
    அவனுக்கு சீவகன் என்று பெயர் இட்டனர். அவளை அன்புடன் வளர்த்தான். அரசி துறவி வாழக்கை மேற்கொண்டாள். சீவகன் சிறுவன் சிறு வயதிலேயே பல வித்தைகளை கற்று வல்லவன் ஆயினான்.

    சிறு வயதிலேயே பல நாடுகளை சென்று காணவேன்டும் என்று எண்ணினான். ஒவ்வொரு நாட்டிலும் அவனுடைய இனிய பேச்சினாலும் திறமையினாலும் இளவரசிகளையும் மங்கையர்களும் கவர்ந்து அவர்களை மனமுடித்துக் கொள்கிறான்.சீவகன் தன் தாயை தேடிச் செல்கிறான் அவளை வணங்குகிறான். இறுதியாக பகையை வெல்வதற்கு மாமன் கோவிந்தன் துனையை கொள்ளுமாறு கூறுகிறாள். தன் பயணத்தை தொடர்ந்த சீவகன் தன் மனைக்கு வந்து காந்தருவத்தைக்கம், குணமாலைக்கும் ஆறுதல் கூறினான். மாமன் கோவிந்தனை சந்தித்து கட்டயங்காரனிடம் போரிட்டு கொன்றான். தன் நாட்டை கைப்பற்றினான்.இறுதியில் தன் மாமன் மகள் இலக்கணையை திருமணம் செய்துக்கொண்டு தன் தேவிமார்களை அனைவரையும் வரவழைத்தான். சீவகன் தன்
    எட்டு தேவிமார்களுடன் மகிழ்ச்சியுடன் ஆட்சிசெய்தான்.
    நண்பனிடம் இருக்கும் நற்பண்புகள்

    என் நண்பனின் நற்பண்புகளை கூறும் போது நான் மிக்க பெருமை படுகிறேன். அவனின் நற்பண்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் பெயர் ரவி. நானும் ரவியும் சிறுவயதிலிருந்தே சேர்ந்து படித்து வருகிறோம். இருவரும் ஒரே வட்டாரத்தில் வசித்தும் வருகிறோம். அவனின் நற்பண்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ரவிக்கு உதவும் மணப்பான்மை உடையவன். ஒருவருக்கு சிறு பிரச்சனையாக இருந்தாலும் முன்வந்து உதவுவதற்கு தயாராக இருப்பான். படிப்பில் சந்தேகங்கள் இருந்தால் நான் அவனிடம் கேட்பேன். அவன் முடிந்த அளவிற்கு எனக்கு உதவுவான்.

    ரவி ஒரு திறமையானவனும் தைரியசாலியும் என்று கூறலாம். நிறைய பேச்சுப் போட்டிகளில் கலந்து பலமுறை முதல் பரிசு பெற்றுருக்கிறான்.எல்லாரிடமும் அஞ்சாமல் பேசும் தன்மையுடையவன்.

    ரவி எப்போதும் படிப்பிலேயே மூழ்கியிருக்கமாட்டான். விளையாட்டிலும் ஈடுபாடு காட்டுவான் அவனுக்கு காற்பந்தில் மக்க ஆர்வம் உண்டு. வார இறுதி நாள்களில் நண்பர்கள் சேர்ந்து காற்பந்து விளையாடுவோம்.

    ரவி கடினமாக உழைப்பான். இதுதான் அவனிடம் எனக்கு மிகவும் பிடித்த நற்பண்புகளில் ஒன்று. ஒரு சமயம் அவன் டெங்கியில் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வர இயலவில்லை. சில வாரங்கள் ஆயின. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.அவன் வீட்டிலேயே விடாமுநற்சியுடன் படித்து வகுப்பில் முதல் மாணவனாக வந்தான்.

    இவைதான் ரவியின் நற்பண்புகள். இந்த நற்பண்புகள் ஒருத்தனிடம் இருந்தால் அவனே ஒரு நல்ல நண்பன்.

    புலாக் 63 சர்கிட் ரோட்
    #04-341
    230063

    அன்புள்ள அவினாஷ்,
    நீ அங்கு நலமா? நான் நலம் நேற்று நண்பர்களுடன் வரவிற்கும் விழாக்களை எப்படி கொண்டாடலாம் என்று உரையாடினோம். அப்போது போன ஆண்டு சிறுவர் தினத்தை கொண்டாடியது என் நினைவுக்கு வந்தது. அதை பற்றி உன்னிடம் கூறுகிறேன்.
    போன ஆண்டு சிறுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடினோம். ஆசிரியர்கள் சிலர் மேடையில் ஒரு நகைச்சுவையான நாடகத்தை படைத்தனர். அவர்களின் கேளிக்கையான ஆடைகளும் நடிப்பும் எங்களை வயிர் வளிக்கும்வரை சிரிக்க வைத்தது. அவர்கள் எங்களுக்கு பரிசுகளும் தந்தனர்.
    ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பள்ளியில் இறுதி ஆண்டு என்பதால் எங்களுக்கு அறுசுவையான உணவு கொடுத்தனர். இதையல்லாம் என் மனதில் பசுமரத்தானியைபோல் பதிந்தது. உன் அனுபவங்களை பற்றி என்னிடம் கூறு.

    இப்படிக்கு
    மு.ஷமீர் அகமது
    புலோக் 99 அல்ஜூனெட் க்ரெஸன்ட்
    #08-343
    380099

    pas

    எழுத்துபிளை குறைத்தல்
    பேசுவதற்கு ஊக்கம்
    கட்டுரை உதவுதல்

    ReplyDelete
  3. சீவக சிந்தாமணி கதை


    என் பெயர் ஆதித்யா. எனக்கு பொழுதுப்போக்கே புத்தகம் படிப்பது தான்.நான் புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.தமிழ் புத்தகங்களை விட ஆங்கில புத்தகம் தான் அதிகம் படிப்பேன்.தமிழ் புத்தகங்களில் நான் படித்த ஒன்று சீவக சிந்தாமணி கதை.நான் மிகவம் ஆர்வத்துடன் படித்த தமிழ் புத்தகங்களில் இது ஒன்று.

    ஓர் நகரில் சச்சந்தன் என்ற மன்னன் இருந்தான்.அவனுக்கு விசையை என்ற மனைவி இருந்தாள்.சச்சந்தன் தன் மனைவியின் மீது மிகவும் காதல் கொண்டதால் அவன் அவளுடன் இன்ப வெள்ளத்தில் மூழ்கி அவனுடைய ஆட்சிப் பொறுப்பை மறந்தான்.அமைச்சன் பிறகு பொறுப்பை கட்டியங்காரனிடம் ஒப்புவித்தான்.கட்டியங்காரன் இறுதியில் அரசனைக் கொள்ள வந்தான்.சச்சந்தன் உடனே அவனுடைய மனைவியை ஒரு மயில் பொறியில் ஏற்றி அனுப்பினான்.ஆனால் மன்னன் இறுதியில் சண்டையில் மாண்டான்.விசையை ஏற்றிச் சென்ற மயில்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது.அங்கே அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.அரண்மனையில் பிறக்க வேண்டியக் குழந்தை சுடுகாட்டில் பிறந்ததை எண்ணி விசையை மனம் வருந்தினாள்.

    பின்னர் ஒரு தெய்வம் அவளை அணுகி அவளுக்கு ஆறுதல் கூறியது.அப்போதுக் கந்துக்கடன் என்ற ஒரு வணிகன் அங்கு வந்து குழந்தையைக் கண்டு அது மன்னன் குழந்தை என்றுத் தெரிந்துக்கொண்டு அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அதை சீவகன் என்றுப் பெயர் சூட்டி வளர்த்தான்.விசையை இதைக் கண்டு அழுது அழுது மயங்கினாள்.அடுத்த நாள் விசையை ஒரு தவப்பள்ளியில் போய் சேர்ந்துத் தன்னுடையக் காலத்தைக் கழித்தாள்.சீவகன் வாழ்க்கையின் கதை தான் இது.

    ReplyDelete
  4. ஸ்ரீராம் 12 மார்ச் 2009

    நான் படித்த ஒரு கதை

    ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பது என் பொழுது போக்கு. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் புத்தகங்களையும் நான் விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த புத்தகங்களில் ஒன்றுதான் 'சிறுவர்க்கான சீவக சிந்தாமணி கதை'. இது ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் என்ற படிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் வித்துவான் M. நாரயணவேலுப்பிள்ளை அவர்கள்.
    இக்கதை சீவகன் என்பவனின் அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சீவகன் தான் இக்கதையின் முக்கிய பாத்திரம். சச்சந்தனும் விசயமாதேவியும் இவனுடைய பெற்றோர் ஆவர். கந்துக்கடனும் சுநந்தையும் அவனுடைய வளர்ப்புப் பெற்றோர். சீவகனின் சிநேகிதர்கள் என்று பார்த்தால் சீத்த்தன், புத்திசேனன், பதுமுகன், மற்றும் தேவதத்தன் என்று நால்வர் உள்ளனர். காந்தருவத்தை, குணமாலை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகியோர் அவனுடய மனைவிகள் ஆவர். கட்டியங்காரன் பகைவன்.
    மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிக்க அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான். இதுதான் கதை.
    இக்கதையை படிக்கும்போது உறங்குவது, சாப்பிடுவது, வீட்டுப்பாடம் செய்வது போன்றவற்றை முற்றிலும் மறந்துவிட்டேன். அந்த அளவிற்கு கதை சுவாரசியமாக இருந்தது. நீங்களும் வாங்கிப் படித்து மகிழுங்கள்.

    ReplyDelete
  5. சீவக சிந்தாமணி
    நான் இதுவரை பல புத்தகங்கள் படித்துள்ளேன். அவையுள்ள எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம் தான் சீவக சிந்தாமணி. சீவக சிந்தாமணி தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் ஐந்து பெருங்காப்பியங்களில் ஒன்றாகும். இஃது ஓர் வருணனைக் காப்பியம்.
    சீவகன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்ற எட்டு மகளிரை மணந்துகொண்ட காரணத்தால் இதனை ‘மணநூல்’ என்றும் கூறுவர்.
    எனக்கு சீவக சிந்தாமணியின் எளிய நூலை படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்து. இந்த நூல் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சீவக சிந்தாமணியின் கதை சுருக்கத்தை எளிதில் அறிந்துக்கொள்ளும் படியுள்ளது.
    ஓர் நகரில் சச்சந்தன் என்ற மன்னன் இருந்தான்.அவனுக்கு விசையை என்ற மனைவி இருந்தாள்.சச்சந்தன் தன் மனைவியின் மீது மிகவும் காதல் கொண்டதால் அவனுடைய ஆட்சிப் பொறுப்பை மறந்தான். பிறகு பொறுப்பை அமைச்சனாகிய கட்டியங்காரனிடம் ஒப்படைத்தான். கட்டியங்காரன் இறுதியில் அரசனைக் கொள்ள முயன்றான். சச்சந்தன் உடனே அவனுடைய மனைவியை ஒரு மயில் பொறியில் ஏற்றி அனுப்பினான்.ஆனால் மன்னன் இறுதியில் மாண்டான். விசையை ஏற்றிச் சென்ற மயில்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது. அங்கே அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.அரண்மனையில் பிறக்க வேண்டியக் குழந்தை சுடுகாட்டில் பிறந்ததை எண்ணி விசையை மனம் வருந்தினாள்.
    பின்னர் ஒரு தேவதை அவளுக்கு ஆறுதல் கூறியது.அப்போதுக் கந்துக்கடன் என்ற ஒரு வணிகன் அங்கு வந்த்தான். குழந்தையைக் கண்டு அது மன்னன் குழந்தை என்றுத் தெரிந்துக்கொண்டு அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அதை சீவகன் என்றுப் பெயர் சூட்டி வளர்த்தான்.சீவகன் எப்படி தன் தந்தையின் மரணத்திற்கு பலி வாங்குகிறான் என்ற கதை தான் இது.

    ஆசிரியர் மற்றும் பெரியவர் சொல்லுக்கும் மரியாதைக் கொடுத்து, கட்டுபட்டு நடக்க வேண்டும் என்பதையும் இக்கதை நமக்கு உணர்த்தும் ஓர் சிறந்தப் பண்பாகும். இந்த நூல் சீவகனின் வளர்ப்பு தந்தையான கந்துக்கடனின் பெருந்தன்மையை குறிக்கிறது. தனக்கு ஒரு சொந்த மகன் பிறந்த பிறகும் சீவகனை தன் சொந்த மகனை போல வளர்த்தார்.
    மோத்ததில் சீவக சிந்தாமணி ஓர் சிறந்த வருணனைக் காப்பியம்.

    விசாலி
    1HT1

    ReplyDelete
  6. UMAR PULAVAR TAMIL LANGUAGE CENTRE

    ன் வீட்டுப்பாடம் 2009

    நான் பரமார்த்த குரு கதைகளை படித்தேன். அதில் என்னை கவர்ந்த 3 கதைகளை பற்றி கைபட எழுத உள்ளேன்.

    1.பகுதி 4 (Chapter 4)
    ஆறு விழுங்கிய நபர் திரும்பி வருதல்!

    இந்த கதையில் இருந்த நகைச்சுவை தன்மை என்னை ஈர்த்து உள்ளது. அது மட்டும் இன்றி அந்த நகைச்சுவை தன்மையை கொண்டு வந்த விதம் பாராட்ட தகுதி பெற்றது. தன்னை விட்டுவிட்டுமற்றவர்களை எண்ணியது என்னுல் சிரிப்பை உண்டாக்கியது. பிறகு ஒரு வழிபோக்கர் வந்து எல்லாரையும் ஏமாற்றியது என்னை கல கல வென்று சிரிக்க வைத்தது.இந்த கதையின் மொழி வளம் கூட பாராட்ட தகுதி பெற்றது. மொத்தத்தில்,இந்த பகுதி நன்றாக எழுதப்பட்டுள்ளது.

    2. பகுதி 10 (chapter 10)
    தண்ணீரில் உப்பை சுத்தப்படுத்திய மட்டி

    இந்த கதையிலும் நகைச்சுவை தன்மை உள்ளது. அவன் செய்த மடத்தனமான காரியம் என்னை நகைக்க வைத்துவிட்டது.இதுப் போலக் கூட மாந்தர்கள் உள்ளனரவா என்பதை சிந்திக்கும் அளவுக்கு இக்கதை என்னை சிந்தனையில் ஆழ்த்திவிட்டது. சுத்தப்படுத்துவதற்கு நீரை உபயோகிப்பது சகஜம். ஆனால் உப்பை கூட சுத்தப்படுத்த நீரை உபயோகிப்பது மடத்தனம். நீரை உபயோகித்து உப்பை சுத்தப்படுத்தினால் உப்புகரைந்து விடும்.இந்த கதையின் மொழி வளம் கூட பாராட்ட தகுதி பெற்றது. மொத்தத்தில்,இந்த பகுதி நன்றாக எழுதப்பட்டுள்ளது.

    3.பகுதி 18 (chapter 18)
    இப்படியா மரக்கிளையை வெட்டுவதா!

    இந்த கதையிலும் நகைச்சுவை தன்மை உள்ளது.மட்டி் செய்த மடத்தனமான காரியம் என்னை நகைக்க வைத்து விட்டது என்றுக்கூட சொல்ல்லாம். யாராவது வெட்ட போகிற மரக்கிளையில் அமர்ந்தவாறு மரக்கிளையை வெட்டுவார்களா. இதுப் போலக் கூட மாந்தர்கள் உள்ளனரவா என்பதை சிந்திக்கும் அளவுக்கு இக்கதை என்னை சிந்தனையில் ஆழ்த்திவிட்டது. வெட்ட போகிற மரக்கிளையில் அமர்ந்தவாறு மரக்கிளையை வெட்டினால் நாமும் விழதானே செய்வோம்.இந்த கதையின் மொழி வளம் கூட பாராட்ட தகுதி பெற்றது. மொத்தத்தில்,இந்த பகுதி நன்றாக எழுதப்பட்டுள்ளது.



    முற்றும்@@@@@@

    ©Karthigesan works.

    ReplyDelete
  7. எனக்கு புத்தகங்ள் படிக்க பிடிக்கும். நான் படித்த புத்தகங்களில் சீவக சிந்தாமணியும் ஒன்று.
    அந்த புத்தகத்தின் தலை கதாப்பாத்திரம், சீவகன். அவனுடைய தந்தை சச்சதன். அவன்
    ஏமாகத நாட்டை ஆண்ட போது நாடு செல்வ செழிப்படைந்தது. ஆனால், சச்சதன் அவனுடைய மனைவி, விசையை மீது அளவில்லாத காதல் கொண்டு ஆட்சி பொறுப்பை மறந்தான். அவனைக் கொல்ல அவன் அமைச்சன் படையடுத்து சுற்றி வளைத்தான். அப்போது, அவன் விசையை ஒரு மயில் பொறியில்
    அனுப்பினான். அவன் மாண்டான். சீவகன் ஒரு சுடுக்காட்டில் பிறந்தான். கந்துக்கடன் என்ற வணிகன்அவனை தன் வீட்டுக்கு தூக்கிச்சென்றான். தன் குந்தை ஒரு அரண்மனையில் பிறப்பதற்கு பதிலாக
    சுடுக்காட்டில் பிறந்ததைக் கண்டு விசயை கதறி அழுதாள்.
    சீவகனின் ஆசிரியர் அவனுடைய அடையாளத்தை கூறினார். ஒரு வருடம் கழித்து, சீவகன் கட்டியகாரனை கொல்ல தீர்மானித்தான். பிறகு, அவன் ஒவ்வொரு நகரத்துக்கு சென்றான். அவன் எட்டு மகளிரை மணந்ததால் இதை மண நூல் என்றும்
    கூறப்படுகிறது. எட்டு மகளிர்: காத்தருவை, குணமாலை, பதுமை, கேமசரி, விமலை, கனகமாலை, கந்துக்கடன், இலக்கணை. இதில் மற்ற காதாபாத்திரகள்: விசயை, இவள் சச்சதனின் மனைவி.
    பதுமுகன், சீவகனின் நண்பன். சுதசணன், சீவகனின் தோழன். இறுதியில், நாம் முதுமையும் இறப்பும் மனித வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்று கற்றுக்கொள்கிறோம். கதையின் சிறப்பு, யோகியைப் போல் ஒரு நண்பன் கிடைப்படு கடினம். சீவக சிந்தாமணி ஒரு வரலாற்று கூறும் கதை ஆகும்.

    நிஹாரா
    1HT1

    ReplyDelete
  8. பாத்திரங்கள்
    - சீவகன்
    - சச்சந்தன் - அப்பா
    - விசயமாதேவி - அம்மா
    - சுதந்தை - வளர்ப்புத் தாய்
    - கந்துக்கடன் - வளர்ப்புத் தந்தை
    - அச்சணந்தி - ஆசிரியர்
    - கட்டியங்காரன்

    என் பெயர் ஐஸ்வரியா. நான் இந்தக் சீவகச்சிந்தாமணி என்ற காப்பியக் கதையை விடுமுறையில் படித்தேன். இக்கதையின் கதாசிரியர் திரு. தக்கதுரை. இந்தக் கதையின் சாரத்தை நான் சுருக்க விளக்கவிருக்கிறேன்.

    சச்சந்தன் என்னும் அரசரின் மகன் தான் சீவகன். விதி வசத்தால் சுடுகாட்டில் அவன் பிறந்தன். தன் குழந்தையை அடக்கம் செய்வதற்கு வந்த கந்துகடன் சீவகனைத் தத்தெடுத்து வளர்த்தான். பின்னர், அவர் அச்சணந்தி என்ற ஆசானிடம் சீவகனைக் கல்வி கற்க அனுப்பினார். சீவகன் சிறந்த தோற்பொலிவும், அறிவு நிரம்பியவனுமாக விளங்குவதோடு பல கலைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தான். அவன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்தான். அவன் எட்டு மங்கையரை மணந்தாலும் மிகவும் நல்லவன். அவனுடைய மணவாழ்க்கை அரசபதவியைப் பெருக்கிக்கொள்ள ஒரு தடையாக அமையவில்லை. முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி புரிந்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை தன் மகனிடம் அளித்துவிட்டு துறவறம் ஏற்றான்.

    ReplyDelete
  9. நான் படித்த புத்தகம் சீவக சிந்தாமணிக் கதை. இக்கதையில் சீவகன் என்பவர் சுடுகாட்டில் பிறந்தவர். ஆனால், அவர் ஒரு இளவரசர். அவரின் தந்தை, இராசமாபுரத்தின், அரசர் சச்சந்தன் ஆவார். அவரின் அமைச்சர், கட்டியங்காரன் அவரைக் கொன்றார். கட்டியங்காரனும் சச்சந்ந்தனும் போரிடும் போது, தன் நிறை கற்பிணி நிலையில் இருந்த மனைவி விசையை ஒரு மயில் பொறியில் வழியனுப்பினார். பிறகு, ஒரு சுடுகாட்டில், சீவகன் பிறந்தார். அப்போது, கந்துகடன் என்ற ஒரு வியாபாரி, தான் இறந்தக் குழந்தையுடன் வந்து, சீவகனை கண்டார். அவர் சீவகனை எடுத்தார். சீவகனின் தாயார், தன் மகனின் விரலில் போட்ட மோதிரத்தால், சீவகன் ஒரு அரசரின் பிள்ளை என்பதை அறிந்துக்கொண்டார் கந்துகடன். தான் பெற்றக் குழந்தையை யாரோ எடுத்துச் செல்வதை கண்டு, சோகம் அடைந்த விசை, தவம் செய்ய சென்றாள்.
    கந்துகடன் சீவகனை தன் மகனைப் போல வளர்த்து வந்தார். தக்க வயது வந்தவுடன், சீவகனுக்கு ஓர் ஆசிரியர்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீவகன் ஒரு பெரிய புத்திசாலி என்பதை அறிந்துக்கொண்டார் ஆசிரியர். ஒரு சமயத்தில், அவர் சீவகனிடம் உண்மையைச் சொன்னார். சீவகன் கட்டியங்காரனின் மீது ஆத்திரம் அடைந்தார். ஆனால், அவர் தன் ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டு ஒரு வருடத்திற்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. பிறகு, அவரின் ஆசிரியர் தவம் செய்ய சென்றார். அப்போது, சீவகன் படைக்கலப் பயிற்ச்சியைக் கற்றுக்கொண்டார்.
    அதன் பின், சீவகன் ஒரு யாழ்ப் போட்டிக்குச் சென்றார். அதில் வெற்றி அடைந்து, காந்தருவதத்தையைத் திருமணம் செய்தார். இதனால், கட்டியங்காரன் கோபம் கொண்டார். பிறகு, ஒரு நீராணி விழாவில், ஒரு மதங் கொண்ட யானை ஒரு பெண்னைத் தாக்கியது. சீவகன் அப்பெண்னைக் காப்பாற்றினார். இருவரும் காதலித்து, திருமணம் செய்தார்கள். இச்செய்தியை அறிந்த கட்டியங்காரன் சீற்றம் கொண்டார். சீவகனைக் கொல்ல திட்டம் செய்தார். சீவகனின் உயிர்த்தோழன், சுதஞ்சணன் அவரைக் காப்பாற்றி, விண்ணுலகத்திற்கு இருவரும் சென்றனர். அங்கே, சீவகன் உலகத்தை சுற்றிப் பார்க்க எண்ணினார். சுதஞ்சணன் சீவகனிடம் மூன்று மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து வழியனுப்பினான். சீவகன் தன் பயணத்தைத் தொடங்கினார். தான் சென்ற இடங்களிலிருந்து நான்குப் பெண்களுடன் திருமணம் செய்துக்கொண்டார்.
    ஒரு நாள், சீவகன் தன் அம்மாவை, அவர் தவம் செய்யும் சோலையில் சந்தித்தார். சீவகனின் மாமனாகிய கோவிந்தனின் துணைக்கொண்டு ஆட்சியை கைப்பற்ற ஆசி கூறினார். பிறகு, ஏமாங்கத நாட்டில் விமலை என்பவளை திருமணம் செய்தார். அதன் பின், சுரமஞ்சரியையும் திருமணம் செய்தார்.
    அச்சமயம் பார்த்து கட்டியங்காரன் கோவிந்தனிடம் நட்புக்கொள்ள வேண்டினார். தன் மாமாவின் விதேய நாட்டை அடைந்தார். இத்தருணத்தைத் தனக்கு சாதகமாக உபயோகித்து, நால்வகைப் படைகளுடன் சீவகன் தன் மாமாவுடன் இராசமாபுரத்திற்குச் சென்றார். சீவகன் உயிருடன் இருக்கும் செய்தியை கேட்ட கட்டியங்காரன் இடி விழுந்ததுப் போல ஆனார். அவரும் ஒரு பெரியப் படையைத் திரட்டினார். போரில், சீவகன் வென்றார். அதன் பின், முடி சூட்டி, மன்னர் ஆனார். மாமன் மகள், இலக்கணையை மணந்துக்கொண்டார். பிறகு, தன் எட்டு மனைவிகளுடன் இன்பமாக வாழ்ந்தார், சிறப்பாக அரசு ஆண்டார். சீவகன் நாற்பத்தைந்தாம் வயதில் அரசை துறந்து துறவறம் பூண்டார்.
    தன் எட்டு மனைவிகலையும் துறவறம் ஏற்க்ச் செய்தார். அவருடைய புதல்வன் சச்சந்தனை மன்னர் ஆக்கினார். அவருடைய தம்பி நந்தட்டனும் துறவறம் ஏற்றான்.

    ReplyDelete
  10. என் தோழிக்கு இருக்கும் நற்பண்புகள்

    என் தோழியின் பெயர் சங்கீதா. அவள் என் உயிர் தோழி. அவளிடம் பல நற்பண்புகள் உள்ளது. அவள் தினமும் தன் பாடத்தை ஒழுங்காக செய்து முடிப்பாள். அவள் எல்லரிடம் அன்பாக பழகுவாள். ஒழுக்கம், அன்பு,கட்டொழுங்கு,தன்னம்பிக்கை போன்ற பண்புகளுக்கு சங்கீதா, மாட்டுமே. அவள் என்னை மாதிரி பல மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறாள். வகுப்பில் எப்போதும் முதல் மாணவியாக இடம் பிடிப்பாள். பாடிப்பில் மாட்டும் இல்லாமல் விளையாட்டிலும் முதல் மாணவியாக திகழ்வாள்.
    ஒரு நாள் நானும் அவளும் பூங்காவிற்க்கு செல்ல முடிவு செய்தோம். பூங்காவுற்கு நடந்து செல்லும் வழியில் ஒரு விளையாட்டுத் திடல் இருந்து. அங்கே மூன்று சிறுவர்கள் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோது அவர்கள் எங்களுடன் படிக்கும் மாணவர்கள் எனத் தெரிந்தது.
    அவர்கள் வாயில்லா பிராணியான ஒரு கிளியைத் துன்புறுத்திபக் கொண்டிந்தார்காள். அதைப் பார்த்த எங்களின் மனதில் இருள் சூழ்ந்த்து. பிறகு அந்தச் சிறுவர்கள் கிளியைக் கூண்டியில் அடைத்துவிட்டு கேலி செய்து கொண்டிருந்தார்கள். உடனே சங்கீதா, அவர்களுக்கு புத்திமதி கூறினாள். திடுக்கிட்ட மூவரும், அவர்கள் செய்த தவறை உணர்ந்து சங்கீதாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
    பிறகு,அவர்கள் கிளியை விடுவித்தார்கள். சங்கீதா ஒரு தைரியசாலி. இதிலிருந்தே நாம் சங்கீதா பல நற்பண்புகள் உடையவள் என்று தெரிந்துக்கொள்ளாம். சங்கீதாவை போன்ற ஒரு பெண் எனக்கு தோழியாக இருப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறோன்.

    விசாலி 1HT1

    ReplyDelete
  11. சிக்கனம்
    மனைவி அதிகமாக செலவு செய்தார். தன் கணவன் அறிவுரைக்கூறியும், அவர் செவிசாய்க்கவில்லை. தன் மகளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால், ஆப்ரேசன் செய்யவேண்டியிருந்தது. சிக்கனமாக செலவு
    செய்யாமால் இப்போது துன்பப்பட்டார். அப்போது தான், மனைவி சிக்கனத்தை உணர்ந்தார்.

    உரிமை
    இந்த கதை ஒரு தந்தை உரிமை என்ற முறையில் அவரின் மகனின் ஆசைகளுக்கும் உண்ர்ச்சிகளுக்கும் இடம்கொடுக்கவில்லை. அவர் தன் மகன் திருமணம் பதிவாளர் ஆகவேண்டும் என்றும் அவர் மகன் தன் வணிகம் செய்யவேண்டும் என்று வெவ்வேறு கனவுகள் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது, தீடீரென்று, தந்தைக்கு வழி ஏற்பட்டது. தன் தந்தையின் நிலைமையை புரிந்துக்கொண்டு தன் ஆசையை கைவிட்டான் மகன்.

    தியாகம்-புதுமைப்பெண்
    தன் சகோதரிக்காக அனைத்தையும் தியாகம் செய்தவள், சரிதா.அவளுக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் தியாகம் செய்வாள். ஆனால், அவள் காதல் என்று வந்தபோதுகூட, சிந்திக்காமல் அவள் தியாகம் செய்ய துணிந்துவிட்டாள்

    ReplyDelete
  12. எனக்குப் பிடித்த கலை

    எனக்குப் பிடித்த கலை பரதக் கலையாகும். பரதக் கலை மிகவும் பழமையானது. பரத முனிவர் பரத நாட்டியக் கூறுகளை விளைக்கி நூல் ஒன்றை எழுதினார். அதுவே இக்கலை வளர்வதற்கு அடிப்படையாக இருந்தது.

    பரத நாட்டியம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த களைப்பைப் போக்கி மனதை மகிழ்விக்கவும் உதவுகிறது. இப்புனித, உன்னதமான கலையை நான் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கற்று வருகிறேன். இக்கலையை மேடையில் ஆடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, எனக்கு மேடையில் ஆடும் அனுபவமும் உள்ளது. சிறப்பாக ஆடியதால் எனக்குப் பரிசுகளும் கிட்டியுள்ளன.

    இந்தச் சிறந்த கலையை மேலும் கற்றுக்கொள்ள நான் தனியாத வேட்கை கொண்டுள்ளேன்.

    ஐஸ்வரியா
    உயர்நிலை 1

    ReplyDelete