Tuesday, June 26, 2012

தேர்வுப் பகுதி, வருக வருக! பயிற்சி பெறுக!

கருத்தறிதல் வினாக்களுக்குரிய விடைகளின் தொகுப்பு 

எண்ணப்பதிவு வெளிவர உதவியவைகளுக்கு நன்றி உரித்தாகுக.

வ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர்.  முதல் பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக் கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.

முதல் பிரிவினர் எதிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் மனச்சோர்வு ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள்.   அவர்கள் வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.

மேலும், முதல் பிரிவினர் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள்,  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள்.  

இரண்டாவது பிரிவினர் `நம்மால் எதுவும் செய்ய முடியாது` என்று நினைத்து வருத்தப்படுபவர்கள். இவர்கள் தங்களின்  தலைவிதி தானாக மாறாதா? என்றும் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறோம் என்றும் நினைத்து மிகவும் வருத்தப்படுவர்.

மேலும், இரண்டாம் பிரிவினர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்கள் துன்பம் தானாக விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். இவர்களைத் தவறான மனப்போக்கினை உடையவர்கள் என்று கூறலாம்.  

இந்தியக் கிரிக்கட் வீரர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் கபில்தேவ். அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவரின் திறமையைக் குறைவாக மதிப்பிட்ட ஆசிரியர்கள் அவரை விட்டுவிட்டு மற்ற மாணவர்களைக்  கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இது அந்த இளைஞனின் மனத்தில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தன் நண்பர்களிடம்,``விளையாட்டில் சாதனைசெய்து காட்டுவேன்  என்று சபதம் செய்தான்.

கபில்தேவ், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு கோடை விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடினான். விடுமுறைக்குப் பின்னர், கபில்தேவின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். அதனால்தான் கபில்தேவ் என்ற விளையாட்டு வீரன் முதல் பிரிவினரோடு ஒப்பிடப்படுகிறான்.

வினாக்கள்

1.  வாழ்க்கையில் சாதனை செய்ய நினைப்பவர்கள் எந்தப் பிரிவினர்? ஏன்?

   2.  ஒருவர் எப்போது வெற்றி பெறும் சூழல் உருவாகும்?

3. வெற்றி பெறுபவர்கள் அடையும் நன்மைகள் யாவை?

4.  இரண்டாம் பிரிவினர்கள் எப்படிப்பட்ட குணத்தை          உடையவர்கள்?

      5. தவறான மனப்போக்கினை உடையவர்கள் யாவர்?

        6. கபில்தேவின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய   
       நிகழ்ச்சி எது?

7. கபில்தேவை எந்தப் பிரிவினரோடு ஒப்பிட்டுக் கூறலாம்? ஏன்?

 விடையைக் கண்டுபிடியுங்கள் 

வினாக்களோடு தொடர்புடைய தனிப் பகுதிகள்

இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர்.  முதல் பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக் கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.

முதல் பிரிவினர் எதிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் மனச்சோர்வு ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள்.   அவர்கள் வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.

மேலும், முதல் பிரிவினர் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள்,  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள். 

இரண்டாவது பிரிவினர் `நம்மால் எதுவும் செய்ய முடியாது` என்று நினைத்து வருத்தப்படுபவர்கள். இவர்கள் தங்களின்  தலைவிதி தானாக மாறாதா? என்றும் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறோம் என்றும் நினைத்து மிகவும் வருத்தப்படுவர்.

மேலும், இரண்டாம் பிரிவினர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்கள் துன்பம் தானாக விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். அதனால், இவர்களைத் தவறான மனப்போக்கினை உடையவர்கள் என்று கூறலாம்.  

இந்தியக் கிரிக்கட் வீரர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் கபில்தேவ். அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவரின் திறமையைக் குறைவாக மதிப்பிட்ட ஆசிரியர்கள் அவரை விட்டுவிட்டு மற்ற மாணவர்களைக்  கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இது அந்த இளைஞனின் மனத்தில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தன் நண்பர்களிடம்,``விளையாட்டில் சாதனைசெய்து காட்டுவேன்  என்று சபதம் செய்தான்.

கபில்தேவ், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு கோடை விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடினான். விடுமுறைக்குப் பின்னர், கபில்தேவின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். அதனால்தான் கபில்தேவ் என்ற விளையாட்டு வீரன் முதல் பிரிவினரோடு ஒப்பிடப்படுகிறான்.

தொடர்புடைய வினாக்களின் பட்டியல்

1
வாழ்க்கையில் சாதனை செய்ய நினைப்பவர்கள் எந்தப் பிரிவினர்? ஏன்?

2
ஒருவர் வெற்றி பெறுவதற்கு எவற்றைப் பின்பற்ற வேண்டும்?

3
சிலரின் பாராட்டுகளைப் பெறுபவர்கள் யாவர்?

4
இரண்டாம் பிரிவினர்களின் வருத்தத்திற்கான காரணங்கள் யாவை?

5
இரண்டாம் பிரிவினரைத் தவறான எண்ணப்போக்கு உடையவர்கள் என்று ஏன் கட்டுரை ஆசிரியர் கூறுகிறார்?

6
கபில்தேவின் மனநிலையில் மாற்றத்தை  ஏற்படுத்திய நிகழ்ச்சி எது?

7
கபில்தேவை எந்தப் பிரிவினரோடு ஒப்பிட்டுக் கூறலாம்? ஏன்?

சுயவிடைக் கருத்தறிதல் 

மனிதனின் பொதுவான மனப்போக்கு இலட்சியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். எனவே, உலகில் வாழும் பெரும்பாலோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்றே நினைப்பர். இதனை நினைத்தே அவர்களுடைய எதிர்கால குறிக்கோளை வகுப்பார்கள். நாம் மேற்கொள்ளும் இலட்சியத்தில்  தோல்வி அடையாமல் இருப்பதற்கு முதலில் நம் இலட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும். இதனைப் பற்றிக் கூறவந்த திருவள்ளுவர்,

              ``எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

                  எண்ணுவம் என்பது இழுக்கு’’

என்று குறிப்பிடுகிறார். அதாவது, செய்யத்தொடங்கும் எச்செயலையும் நன்றாக ஆராய்ந்த பின்னரே அதனைத் தொடங்கவேண்டும். அச்செயலைச் செய்யத்தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும் என்று கூறுகிறார். எனவே, நம்முடைய  இலக்கு என்னவென்பதையும்   அதனை அடையும் வழிகள் எவை என்பதையும் பற்றி நன்கு சிந்தித்த பின்னரே அதனை அடையும்  செயலில் ஈடுபடவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.      

லட்சியத்தை அடைய முயலும்போது ஒருசில நேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படும். அப்பிரச்சினைகள், அதனை அடைவதற்குத் தடைகளாய் இருக்கும். எனவே, எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட இலட்சியத்தை அடையத் தொடங்கும் முன்னர், ஏற்படவிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முன்கூட்டியே ஊகிக்கவேண்டும்.  அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இவற்றின் மூலம் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கலாம்.

இலட்சியத்தால் உயர்ந்தவர்

 வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு தடைகளை நீக்கி இலட்சியத்தை அடைந்தவர்கள்  பலர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் முனைவர் மு. வரதராசனார் என்று அழைக்கப்படும் மு.வ. இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். அவர், இளமையில் சிறந்த தமிழறிஞர் ஆகவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவருடைய நண்பர்கள் கூறுவர்.  மு.வ தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஓர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர், தமிழ்மொழியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் தமிழ் அறிஞர்கள் பலரிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியத்தைப் பயின்றார். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்தார். இறுதியில் மு.வரதராசனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணி ஆற்றினார்.  அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். அதனால், என்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும்.  அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் நம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எனவே, மு. வரதராசனாரைப் போல் நமக்கென்று ஓர் இலட்சியத்தை வகுத்து அதனை அடைவதற்கு இடைவிடாது முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

வினாக்கள்

Q1
ஒருவரின் குறிக்கோள் எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
_________________________________________________________________________

Q2
ஒரு செயலில் ஈடுபடும் முன்னர் நாம் செய்யவேண்டிவை யாவை?

____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Q3
ஒருவர் வெற்றி பெறுவதற்கு எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Q4
இவ்வுலகில் நிலைத்த இடத்தைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Q5
மு.வ தமிழ்மொழியின் மீது அதிகப் பற்றுக்கொண்டவர் என்பதை எவ்வாறு அறியலாம்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பின்வரும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை விடைத்தாளில் எழுதவும்.

Q6
எதிர்கால

Q7
நினைப்பது

Q8
ஏற்படவிருக்கும்

Q9
சமீபத்தில்

Q10
திண்ணம்

தொடர்நடவடிக்கை

 நீ கண்டு மகிழ்ந்த திரைப்படம் / தொலைக்காட்சி நிகழ்ச்சி / நம் நிலைய மாணவர்கள் தயாரித்த குறும்படம் / படித்துத் தெரிந்த கதைப் புத்தகப் பனுவல் ஒன்றிற்கு மாறுபட்ட வினாக்களைத் தொகுத்து வருக.              

தொடரும்

Monday, June 25, 2012

மாதிரி வாக்கியங்களும் கருத்தறிதல் பகுதியும்

விழிப்புணர்வுடன்-

அரசாங்கம் நடத்திய மறுபயனீட்டு இயக்கம் பலரை விழிப்புணர்வுடன் செயல்பட செய்தது.

எச்சிரிக்கையாக-

விபத்துகளை தவிர்க்க நாம் எச்சிரிக்கையாக செயல்படவேண்டும்.

அன்புடன்-

சிவா எல்லொரிடமம் அன்புடன் பழகியதால், அவனுக்கு பல நண்பர்கள் கிடைத்தன.

குடும்பத்தினரோடு

குடும்பத்தினரோடு ஒரு நல்ல வலுவான உறவை வளர்த்துக்கொள்ள நாம் பல நடவடிக்கைகளை கையாளவேண்டும்,.

வினாக்களுக்குரிய விடைகளின் தொகுப்பு 

இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர்.  ஒரு பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக் கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.

வெற்றி பெற முடியும் என்ற மன இயல்பினைக் கொண்டவர்கள் மனச்சோர்வு ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள்.  இறுதியில் அவர்கள் வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.

இத்தகைய மன நிலையைப் பெற்ற இரண்டாம் பிரிவினர், இறுதியில் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்டுவார்கள். அவர்கள் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள்,  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள்.  

இரண்டாவது பிரிவினர் `நம்மால் எதுவும் செய்ய முடியாது` என்று நினைத்து வருத்தப்படுபவர்கள். இவர்கள் தங்களின்  தலைவிதி தானாக மாறாதா? என்றும் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறோம் என்றும் நினைத்து மிகவும் வருத்தப்படுவர்.

இரண்டாம் பிரிவினர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்கள் துன்பம் தானாக விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். இவர்களைத் தவறான மனப்போக்கினை உடையவர்கள் என்று கூறலாம்.  

இந்தியக் கிரிக்கட் வீரர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் கபில்தேவ். அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவரின் திறமையைக் குறைவாக மதிப்பிட்ட ஆசிரியர்கள் அவரை விட்டுவிட்டு மற்ற மாணவர்களைக்  கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இது அந்த இளைஞனின் மனத்தில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தன் நண்பர்களிடம்,``விளையாட்டில் சாதனைசெய்து காட்டுவேன்  என்று சபதம் செய்தான்.

கபில்தேவ், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு கோடை விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடினான். விடுமுறைக்குப் பின்னர், கபில்தேவின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். அதனால்தான் கபில்தேவ் என்ற விளையாட்டு வீரனை இரண்டாம் பிரிவினரோடு ஒப்பிட்டுக்காட்டுகிறோம்.

தகுந்த வினாக்களைத் தேர்ந்தெடு

1.  வாழ்க்கையில் சாதனை செய்ய நினைப்பவர்கள் எந்தப் பிரிவினர்? ஏன்?

2.  ஒருவர் எப்போது வெற்றி பெறும் சூழல் உருவாகும்?

3. சிலரின் பாராட்டுகளைப் பெறுபவர்கள் யாவர்?

4.  இரண்டாம் பிரிவினர்கள் எப்படிப்பட்ட குணத்தை உடையவர்கள்?

5. இரண்டாம் பிரிவினர்களின் வருத்தத்திற்கான காரணங்கள் யாவை?

6. கபில்தேவின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி எது?

7.  கபில்தேவை எந்தப் பிரிவினரோடு ஒப்பிட்டுக் கூறலாம்? ஏன்?
 
இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர்.  ஒரு பிரிவினர் நம்மால் எதுவும் முடியும் என்று நினைப்பவர்கள். இம்மன நிலையைக் கொண்டவர்கள் என்னுடைய விதி என் கையில், எனது வாழ்வும் மகிழ்ச்சியும் என்னைப் பொறுத்தது என்று நினைப்பர்.

வெற்றி பெற முடியும் என்ற மன இயல்பினைக் கொண்டவர்கள் மனச்சோர்வு ஏற்படும்போதுகூடத் சலிக்காமல் போராடுவார்கள்.  இறுதியில் அவர்கள் வகுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெறுவார்கள்.

இத்தகைய மன நிலையைப் பெற்ற இரண்டாம் பிரிவினர், இறுதியில் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்டுவார்கள். அவர்கள் பெறும் வெற்றியின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவார்கள்,  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவார்கள். அப்போது மற்றவர்களின் பாராட்டுகளை அவர்கள் பெறுவார்கள். 

இரண்டாவது பிரிவினர் `நம்மால் எதுவும் செய்ய முடியாது` என்று நினைத்து வருத்தப்படுபவர்கள். இவர்கள் தங்களின்  தலைவிதி தானாக மாறாதா? என்றும் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறோம் என்றும் நினைத்து மிகவும் வருத்தப்படுவர்.

இரண்டாம் பிரிவினர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்யமாட்டார்கள். இவர்கள் துன்பம் தானாக விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். இவர்களைத் தவறான மனப்போக்கினை உடையவர்கள் என்று கூறலாம்.  

இந்தியக் கிரிக்கட் வீரர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் கபில்தேவ். அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவரின் திறமையைக் குறைவாக மதிப்பிட்ட ஆசிரியர்கள் அவரை விட்டுவிட்டு மற்ற மாணவர்களைக்  கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். இது அந்த இளைஞனின் மனத்தில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் உண்டு பண்ணியது. இதன் விளைவாகத் தன் நண்பர்களிடம், ``விளையாட்டில் சாதனை செய்து காட்டுவேன்  என்று சபதம் செய்தான்.

கபில்தேவ், சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு கோடை விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடினான். விடுமுறைக்குப் பின்னர், கபில்தேவின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். அதனால்தான் கபில்தேவ் என்ற விளையாட்டு வீரனை இரண்டாம் பிரிவினரோடு ஒப்பிட்டுக்காட்டுகிறோம்.

1.  வாழ்க்கையில் சாதனை செய்ய நினைப்பவர்கள் எந்தப் பிரிவினர்? ஏன்?

2. ஒருவர் எப்போது வெற்றி பெறும் சூழல் உருவாகும்?

3. சிலரின் பாராட்டுகளைப் பெறுபவர்கள் யாவர்?

4. இரண்டாம் பிரிவினர்கள் எப்படிப் பட்ட குணத்தை உடையவர்கள்?

5. இரண்டாம் பிரிவினர்களின் வருத்தத்திற்கான காரணங்கள் யாவை?

6.கபில்தேவின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி எது?

7. கபில்தேவை எந்தப் பிரிவினரோடு ஒப்பிட்டுக் கூறலாம்? ஏன்?

 உழைப்போம் உயர்வோம்

மனிதனின் பொதுவான மனப்போக்கு இலட்சியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். எனவே, உலகில் வாழும் பெரும்பாலோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெறவேண்டும் என்றே நினைப்பர். இதனை நினைத்தே அவர்களுடைய எதிர்கால இலட்சியத்தை வகுப்பார்கள். நாம் மேற்கொள்ளும் இலட்சியத்தில்  தோல்வி அடையாமல் இருப்பதற்கு முதலில் நம் இலட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும். இதனைப் பற்றிக் கூறவந்த திருவள்ளுவர்,

              ``எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

                  எண்ணுவம் என்பது இழுக்கு’’

 என்று குறிப்பிடுகிறார். அதாவது, செய்யத்தொடங்கும் எச்செயலையும் நன்றாக ஆராய்ந்த பின்னரே அதனைத் தொடங்கவேண்டும். அச்செயலைச் செய்யத்தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும் என்று கூறுகிறார். எனவே, நம்முடைய  இலக்கு என்னவென்பதையும்   அதனை அடையும் வழிகள் எவை என்பதையும் பற்றி நன்கு சிந்தித்த பின்னரே அதனை அடையும்  செயலில் ஈடுபடவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.      

இலட்சியத்தை அடைய முயலும்போது ஒருசில நேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படும். அப்பிரச்சினைகள், அதனை அடைவதற்குத் தடைகளாய் இருக்கும். எனவே, எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குவை அடையத் தொடங்கும் முன்னர், ஏற்படவிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முன்கூட்டியே ஊகிக்கவேண்டும்.  அதோடு மட்டுமல்லாமல் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இவற்றின் மூலம் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கலாம்.

இலட்சியத்தால் உயர்ந்தவர்

 வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு தடைகளை நீக்கி இலட்சியத்தை அடைந்தவர்கள்  பலர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் முனைவர் மு. வரதராசனார் என்று அழைக்கப்படும் மு.வ. இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். அவர், இளமையில் சிறந்த தமிழறிஞர் ஆகவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவருடைய நண்பர்கள் கூறுவர்.  மு.வ தம்முடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஓர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர், தமிழ்மொழியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் தமிழ் அறிஞர்கள் பலரிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியத்தைப் பயின்றார். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைச் சந்தித்தார். இறுதியில் மு.வரதராசனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணி ஆற்றினார்.  அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி சாதனை படைத்தார். அதனால், என்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும்.  அவருடைய நூற்றாண்டு விழா சிங்கப்பூரில் கடந்த மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எனவே, மு. வரதராசனாரைப் போல் நமக்கென்று ஓர் இலட்சியத்தை வகுத்து அதனை அடைவதற்கு இடைவிடாது முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

வாக்கியங்களில் அமைக்கவும்

வாழ்க்கைத் திறன் _____________________________

வாழும் சூழல்__________________________________

இல்லறம்______________________________________

இனியவாழ்வு__________________________________

பழம்பெரும் ___________________________________

கதையை முடித்திடுக.

ஒரு காட்டில் புலி ஒன்று வசித்தது அதற்குச் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களின் பெயர் முத்து, குமார். ஒருநாள் காட்டுப் பாதையில் முத்து நடந்துகொண்டிருக்கும் போது .........

இடம்பெறவேண்டியவை

1. தனிமனிதனுக்குப் பயன்கள்

2. சமூகத்திற்குப் பயன்கள்

3. நாட்டுக்குப் பயன்கள்

4. உலகுக்குப் பயன்கள்

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

கண்ணதாசன் கூற்று.

எல்லாருக்கும் வழிகாட்டும்  திரு சுகி அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக.

http://youtu.be/GseOW43NvkU

வாக்கியங்களில் அமைக்கவும்

வாழ்க்கைத் திறன்  _____________________________

வாழும் சூழல்__________________________________
 
இல்லறம்______________________________________

இனியவாழ்வு__________________________________

பழம்பெரும் ___________________________________ 

கதையை முடித்திடுக.

ஒரு காட்டில் புலி ஒன்று வசித்தது அதற்குச் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களின் பெயர் முத்து, குமார். ஒருநாள் காட்டுப் பாதையில் முத்து நடந்துகொண்டிருக்கும் போது >>>>>>>>>>

இடம்பெறவேண்டியவை

1. தனிமனிதனுக்குப்  பயன்கள்

2. சமூகத்திற்குப் பயன்கள்

3. நாட்டுக்குப் பயன்கள்

4. உலகுக்குப் பயன்கள்

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

கண்ணதாசன் கூற்று.

Thursday, November 10, 2011

குறிப்பு: ``அ’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ``ஆ’’ பிரிவிலிருந்து ஒரு வினாவுக்கும் ஆக மொத்தம் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.

``அ’’ பிரிவு (மின்னஞ்சல்)

பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 100 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும். (20 மதிப்பெண்கள்)

1 பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில்
எழுதவும்.

பெறுநர்:
அனுப்புநர்:

பொருள்:
@

மின்னஞ்சல்

மின்னஞ்சல் பாடம்

மின்னஞ்சலில் தெரிந்துகொள்ளவேண்டியவை

* தமிழ் 99மென்பொருள் கணினியில் உள்ளதா என்பதைக் கவனிக்கவேண்டும்

* தமிழுக்கு மென்பொருளை மாற்றம் செய்துகொள்ளவேண்டும்

* விசைப் பலகையில் தமிழ் எழுத்துகள் இருக்கும் பகுதியை நினைவில் கொள்ளவேண்டும்

* உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், ஆய்த எழுத்து ஆகியவற்றில் கவனம் கொள்ளவேண்டும்

* புள்ளி இடம் பெறும் இடத்தை அடையாளம் காணவேண்டும்

* மின்னஞ்சலில் உள்ள பகுதிகளை கவனத்தில் கொள்ளவேண்டும்

* பெறுநர் முகவரியில் சிறிய மாற்றம் இல்லாமல் ஆங்கிலத்தில் தேர்வு செய்யவேண்டும் அல்லது தட்டச்சு செய்யவேண்டும்

* தட்டச்சு செய்த பகுதியை நன்கு படித்துப் பார்க்க வேண்டும்

* பிழையின்றிக் கருத்துகள் அமையவேண்டும்

* உரிய மரியாதை கொடுத்து தட்டச்சு செய்யவேண்டும்

* தொடக்கம் விளக்கம், இறுதி ஆகிய பகுதிகள் இருக்கவேண்டும்

* இறுதியில் மின்னஞ்சல் அனுப்புவர் முகவரி இருக்கவேண்டும்