Thursday, August 3, 2023

 

சிறு கதை - புத்துணர்ச்சி


அதற்குக் கோபி, `அது ஒன்றும் இல்லை அம்மா, இன்று பள்ளிக்கூடம் போவதற்குச் சலிப்பாக இருக்கிறது. மனம் சோர்ந்துவிட்டது. சில நேரங்களில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியமாட்டங்கு. அதை மீண்டும் படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது. தேர்வும் வரப்போவதாக ஆசிரியர் சொன்னார் அதுதாம்மா நினைத்தாலே பயமாக இருக்கிறது`

இதற்கெல்லாம் சோர்வாகிவிடாதே இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் வரும் நாம் அவற்றை எல்லாம் சமாளித்துப் பழகிக்கொள்ளவேண்டும். எப்போதும் பிரச்சினையைப் பார்த்துப் பயப்படக்கூடாது. அதை எப்படிச் சரி செய்வது என்பதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் கோபி. நீ பள்ளிக்கூடம் போய்வா. நானும் அப்பாவும் இன்று இரவு உன்னிடம் சில யோசனைகளைச் சொல்கிறோம். எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார் அம்மா. 

கோபியின் மனத்தில் சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பலவீனமான மனம் பதட்டமில்லாமல் இருந்தது. அம்மா சொல்லிய ஆறுதல் கருத்துகளைப் பற்றி யோசித்துக்கொண்டே கோபி சாலையின் ஓரத்தில் நடந்து சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த அவனுடைய மாமாவைச் சந்தித்தான். அவனுடைய மாமாவும் கோபியைப் பார்க்க அவனுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னார். 


மாமாவைக் கண்டதும் கோபிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. மனக்கவலை காற்றில் பறந்துசெல்லும் இலையைப்போல் பறந்து சென்றது. அன்று முழுவதும் கோபி வகுப்பறையில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. 

பள்ளிமுடிந்து தன்னுடைய நண்பன் அரவிந்தனுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரவிந்தன் கோபியின் படிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றான். அரவிந்தன் படிக்கும் முறையைப் பற்றிக் கோபியிடம் சொல்லிக்கொண்டே சென்றேன். அவன் சொல்லிய கருத்துகளை எல்லாம் ஆழமாகப் புரிந்துகொண்டான் கோபி. 

கோபியை எதிர்பார்த்து வீட்டினர் காத்திருந்தனர். கோபி மகிழ்ச்சியுடன் வந்ததை நினைத்து பெற்றோர்களும் அவனுடைய மாமாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு நேரம் அனைவரும் அமர்ந்து கோபிக்குப் படிக்கும் முறை பற்றி எடுத்துக்கூறினர். கோபியின் மனத்தில் இருந்த சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைத்தது. மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றான் கோபி. 

No comments:

Post a Comment