நம்ம விளையாட்டு
சின்ன சின்ன விளையாட்டு
சிங்காரக் குறுகுறு விளையாட்டு
வண்ண வண்ண விளையாட்டு
வசந்த மளிக்கும் விளையாட்டு
திண்ணமான பெரு விளையாட்டு
தெவிட்டாத நல் விளையாட்டு
பட்டுப்போகும் உடம்பையும்
பவளமாக்கி நிற்கும் விளையாட்டு
குழந்தைப் பருவம் மகிழ்வூட்டும்
கூடிக்கற்கும் நற்பெரும் விளையாட்டு
காளைப் போன்ற வீரத்தை
கைகொடுத்துக் காத்து நிற்குமே!
No comments:
Post a Comment