Saturday, August 8, 2009

இலக்கியம் - இலக்கியம் - கவிதையும் நயமும்


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.


பள்ளி திறக்கும் நேரம்

பள்ளிசெல்லும் காலம்
பார்த்துநிற்கும் கோலம்
முந்திப்பறக்கும் நேரம்
முனங்கிச்செல்வோம் நாமே!

இன்பமான காலமிதனை
என்றும்நினைப்போம் நாமே
துன்பம்வந்த போதும்
துவண்டிடாமல் செல்வோம்!

பச்சைவண்ணம் நமக்குப்
பாதை காட்டும்போது
இச்சையுடன் நாமும்
இன்பமாகச் செல்வோம்!

அங்குமிங்கும் திரும்பாது
அண்ணன்தம்பி நினையாது
பள்ளிசெல்ல நினைப்போம்
பாதைபார்த்து நடப்போம்!

அன்புதனைப் பெருக்கி
அனைவரையும் மதிப்போம்
இன்பம்பல பெற்றிட
இல்லோரை நேசிப்போம்!
உள்ளவரை சிறந்திட
உண்மையை அறிந்திடுவோம்
பண்புதனைக் கற்றுக்
பார்போற்ற வாழ்ந்திடுவோமே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment