Saturday, August 8, 2009

இலக்கியம் - கவிதையும் நயமும் -

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்கவும்



1 நாம் நம் உடல்நலத்தை எவ்வாறெல்லாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?

குறிப்பு:

உடலில் உறுதியுடையோர் அடையும் நன்மைகள்- சுத்தமுள்ள இடத்தின் நன்மைகள் - உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் - உணவு உண்ணும் முறை – வருமுன் நோயைக் காக்கும் வழிமுறைகள் - போன்ற அமைப்பில் விடை அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


2 இவ்வுலகம் முன்னேற்றம் அடைவதற்குக் கவிஞர் கண்ணதாசன் கூறும் வழிமுறைகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்பு:

விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைவதால் ஏற்படும் நன்மைகள் – மண்ணையும் விண்ணையும் ஆய்வு செய்யும்போது இவ்வுலகிற்கு ஏற்படும் நன்மைகள் - நீர்வளத்தால் ஏற்படும் நன்மைகள் - தொழில் வளத்தால் ஏற்படும் நன்மைகள் - போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


3 பெண்கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கவிஞர் வாலி குறிப்பிடும் கருத்தினைத் தொகுத்து எழுதுக.


குறிப்பு:

பெண்கள் ஏன் படிக்க வேண்டும்? - உலகம் பாராட்டும்படி படித்தல் – படிக்கும் முறை - உயர்ந்தோர் சொல்லிய கருத்துகள் – படிப்பின் மூலம் அடையும் நன்மைகள் - தேடிவரும் கணவன் - போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


4 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள கோகிலாவின் பண்பு நலன்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.


5 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள அனந்தராமன் ஓர் அவசரப்புத்திக்காரன் என்பது பொருந்துமா? தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

6 நண்பனின் வருகைக்குப் பின்பு கோகிலா மற்றும் அனந்தராமனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்து எழுதுக.


7 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலின் மூலம் அதன் ஆசிரியர் ஜெயகாந்தன் கூறும் கருத்துகளை நீ ஏற்றுக்கொள்கிறாயா? தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.

8 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலில் கூறும் கருத்துகள் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? விளக்குக.


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.



எங்கள் நாடு

தங்கக்குணம் நிறைந்த
தங்கநிகர் நாடு
தரணியில் சிறந்த
எங்கள் நாடு
பொன்னும் பொருளும்
மிகுந்த நாடு
பொறுப்புள்ள தலைவர்கள்
பிறந்த நாடு!

மலையென மாண்பினை
மங்காப் புகழினை
மாறாப் பண்பினை
மகிழ்வுடன் பெற்றநாடு
பசுமையாய் தோன்றும்
பரவை நாடு
பார்க்கத் தூண்டும்
பார்போற்றும் நாடு!


உழைப்பின் உயர்வை
உணர்த்திடும் நாடு
உலகமே வியக்கும்
உயர்கலை நாடு
நான்கினம் வாழும்
நனிசிறந்த நாடு
நாளும் போற்றுவோம்
வாழ்க் வாழ்கவென்றே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

2 comments:

  1. வணக்கம். நான் சிங்கப்பூரில் பயின்று வரும் ஓர் மாணவி. எனது இலக்கிய பாடட்திற்கு "கோகிலா என்ன செய்து விட்டாள்?" என்னும் குறுநாவலைப் படிக்கிறேன். நீங்கள் அளித்திருந்த கெள்விகள் மிகவும் உதவின. ஆனால், அக்கேள்விகளுக்கான விடைகளையும் தருவீர்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன் (:

    ReplyDelete