Wednesday, September 23, 2009

வளர்த்தநரி 24.09.2009

கவிதை (கதை) இலக்கியம். இக்கவிதைக்குக் கவிதை நயம் எழுதுக

வளர்த்தநரி 24.09.2009

காட்டில் ஒரு குட்டிநரி
காணாமல் அது போனது
போன வழி மறந்தது
புலம்பி அது தவித்தது!

சிங்கம் ஒன்று பார்த்தது
சினத்தை அது மறந்தது
பாசம் காட்டி நின்றது
பால் கொடுத்து மகிழ்ந்தது!

கொஞ்ச காலம் சென்றது
கொஞ்சும் காலம் மறைந்தது
நரிக்குட்டி அங்கிருந்து பிரிந்தது
நாடிதன் கூட்டத்தோடு இணைந்தது!

காலம் விரைந்து சென்றது
கால் வீரம் இழந்தது
படுத்துச் சிங்கம் இருந்தது
பார்த்து நரிக்கூட்டம் வந்தது!


வஞ்சகமாய் வளர்த்தநரி நின்றது
வாழ்வை முடிக்க நினைத்தது
சீறிப்பாய்ந்து சிங்கத்தைக் கொன்றது
சில்லறையாய் உடல் மறைந்தது!

- எழுதியவர் ஆசிரியர் குருசாமி

No comments:

Post a Comment