Tuesday, September 29, 2009

உயர்நிலை 1 (விரைவு / உயர்தமிழ்) வகுப்புக்குப் பொருத்தமான மாதிரிக் கட்டுரை வடிவம். 1


கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்
இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, மாறுபட்ட பண்புகளை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக நாள்தோறும் போராடி உயிர் வாழ்கின்றன. அவை சிந்திக்கும் திறன் பெற்றவை. னால், சிந்தித்த கருத்துகளைப் பற்றிப் பகுத்தறியத் தெரியாதவை. அவற்றுள் டு, மாடு போன்றவை மனித இனத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்து வருகின்றன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இவற்றின் பாலை மருத்துவரின் லோசனையின்படி நாள்தோறும் குடித்துவந்தால் மிகவிரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு ஏற்படும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமையும் ற்றலும் உள்ளவை. இவை இரண்டும் அவற்றின் இனப்பண்புகள் கும். அவை பிறந்த சில மாதங்களில் அங்குமிங்கும் ஓடியாடித் தன்னம்பிக்கையுடன் தமக்கு வேண்டிய உணவினை வேட்டையாடி வாழ்கின்றன. டு, மாடு, மான், போன்ற விலங்குகள் அஞ்சி வாழ்பவை. அவை தமக்கு வேண்டிய உணவு கிடைக்காதபோதும்கூட மாமிச உணவைத் தின்னாமல் உயிரை விடும். ஓநாய். கரடி, நரி போன்றவை வஞ்சக உணர்வு உள்ளவை. மற்ற உயிரினங்களையும் அவை வேட்டையாடிய உணவினையும் எளிதில் அபகரித்துக் கொள்பவை. இவற்றில் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொல்லும் ற்றலுடையது. இதனை வஞ்சகக் குணம் உள்ள விலங்கு என்று விலங்கியல் துறையினர் பிரிப்பர்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பல்திறப்பட்ட குணங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மனித சமுதாயத்திற்கு நன்மையைத் தருகின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள் என்று உளவில் அறிஞர்கள் குறிப்பிடுவர். இக்குணங்களை நம்மை விட்டு நாம் நீக்கும்போது மனிதத் தன்மை பெற்றவர்களாக மாறிவிடுவோம். ஒருவர் மனித நேயத்துடன் வாழும்போதுதான் மற்றவர்கள் அவரை மதித்துத் தலைவணங்குவார்கள்.


எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களை அவசியம் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்களும் சிறப்புடன் வாழ்வதற்கு நாம் வழிகாட்டுவதோடு அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய பண்புகளை நாம் பெருக்கிக்கொள்ளும்போது மனித உறவு வலுப்பெறும். அத்துடன் நாம் உயர்வடைவதோடு நம்மைச் சார்ந்திருக்கின்ற சமூகமும் உயர்வடையும்.


உயர்நிலை 1 வழக்கம் தொழில் நுட்பம் / வழக்கம் (மாதிரிக் கட்டுரை 2)
கட்டுரை இலக்கியம் - கருப்பொருள்: உலகமும் உயிரினமும் சிறப்புக்கரு: உறவும் பண்பும்

இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை பல குணங்களை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக போராடி உயிர் வாழ்கின்றன. விலங்குகளால் நன்மை தீமைகளை யோசித்துப் பார்க்க முடியாது. டு, மாடு, ஒட்டகம் போன்றவை மனித இனத்திற்கு நன்மையைச் செய்து வருகின்றன. இவற்றின் பால் உடலுக்கு மிகவும் சக்தியைத் தரும்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் தைரியமானவை. அதனால், அவை மற்ற விலங்குகளை எளிதில் கொன்றுவிடும். டு, மாடு, மான், போன்ற விலங்குகள் பயந்து வாழ்பவை. அவை செடி, கொடிகளைத் தின்று உயிர் வாழும். கரடி, நரி போன்றவை தந்தரம் உடையவை. இவை மற்ற விலங்குகளை நம்பவைத்து ஏமாற்றும். இவற்றுள் நரி வேட்டையாடிய விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. அத்துடன் இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொன்று விடும்.

விலங்குகளைப் போல் மனிதர்களிடமும் பலவகைக் குணங்கள் உள்ளன. அவற்றில் பல மக்களுக்கு நன்மையைச் செய்கின்றன, சில தீமையைத் தருகின்றன. தீமையைத் தருகின்ற பண்புகளை விலங்குகளிடம் அமைந்துள்ள பண்புகளோடு ஒப்பிடலாம். அவற்றில் பொறாமை, பேராசை, அதிகக் கோபம், தீமை தரும் சொற்களைப் பேசும் இயல்பு போன்றவை விலங்கு குணங்கள். இக்குணங்கள் இல்லாதவர்களை மக்கள் மதித்துத் தலை வணங்குவார்கள்.

எனவேதான் குழந்தைப் பருவம் முதல் நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வரவேண்டும். பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் குணத்தை நாம் வளர்த்துக்கொள்ளவது நல்லது. இதன் மூலம் மனித உறவு வலுப்பெறும். நாம் உயர்வடைவதோடு நம்மைச் சுற்றி இருக்கும் சமூகமும் உயர்வடையும்.

No comments:

Post a Comment