Thursday, May 26, 2022

 சுருக்கி வரைதல் –மாதிரிப் பயிற்சி

ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. சிங்கத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கும். சிங்கம் நாள்தோறும் தனக்குப் பிடித்த விலங்குகளை வேட்டையாடித் தின்னும். மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்தமான உணவு. அதனால்,மான்கள் சிங்கத்தைக் கண்டால் மிகவும் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளும்.

சிங்கம் ஒரு மானைப் பிடித்து உண்ண நினைத்தால் அந்த மானை மட்டுமே விரட்டிச் செல்லும்.ஓடுகிற மான் களைப்பு அடைந்தவுடன் அது சிங்கத்திற்குப் பலியாகிவிடும்.பிடித்த மானின் மாமிசத்தை வயிற்றுக்கு உண்டபின் சிங்கம் தன் இருப்பிடத்தை நோக்கிச் செல்லும்.இருப்பிடத்தில் நன்றாக ஓய்வு எடுத்தபின்னர் அது சுறுசுறுப்புடன் செயல்படும்.

 

முக்கியக் கருத்துகள் – குறிப்பெடுக்க வேண்டும்

1.  காட்டில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.

2.  மற்ற மிருகங்கள் சிங்கத்தைப் பார்த்தால் அஞ்சும்.

3.  மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்த உணவு.

4.  மான்கள் ஓடி மறையும்.

5.  ஓடும் மானை விரட்டிப் பிடித்து உண்ணும்.

6.  இருப்பிடத்தில் ஒய்வு எடுத்தபின்னர் சுறுசுறுப்பாகிவிடும்.

விளக்கம்

·        மேலே குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுருக்கி எழுதும்போது பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துகளையும் விட்டுவிடக்கூடாது.

·        6 கருத்துகளையும் அடையாளம் கண்ட பின்பு அவற்றை ஒரே பத்தியாக எழுத வேண்டும்.

 

 (எ-டு) சுருக்கிய பகுதி

 

காட்டில்

 

 

வாழும்

 

மிருகங்கள்

 

சிங்கத்தைக்

 

கண்டால்

 

அஞ்சும்.

 

 

மானின்

 

மாமிசத்தைச்

 

சிங்கம்

 

விரும்பிச்

 

சாப்பிடுவதால்

 

 

அதனை

 

விரட்டிப்

 

பிடித்துத்

 

தின்னும்.

 

அது

 

 

 

இருப்பிடத்தில்

 

ஓய்வு

 

எடுத்த

 

பின்னர்

 

சுறுசுறுப்புடன்

 

 

 

இருக்கும்.

 

 

 

 

சொற்களின் எண்ணிக்கை - 22

No comments:

Post a Comment