Saturday, May 28, 2022

 

படக்கதைக்கு எடுத்துக்காட்டு (ஒரு  கதை)


 அறிவுக்கு விருந்து புத்தகமே!


சிறுவர் முதல் பெரியவர் வரை கதை கேட்பதற்கு விரும்புவார்கள்.  அதிலும் படக்கதை எல்லோருக்கும் பிடிக்கும்.  எனக்கும் மிகவும் பிடிக்கும். கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கொண்டு நான் ஒரு கதை எழுதப்போகிறேன்.

இந்தப் படக்கதையில் மூன்று படங்கள் உள்ளன. இதில் முக்கியமாக இரண்டு சிறுவர்கள் இடம்பெற்றுள்ளனர்.  அவர்கள்  படிப்பில் மிகவும்  ஆர்வம் உடையவர்கள். ஒருவன் பெயர் முத்து, மற்றொருவன் பெயர் சலீம். இரண்டுபேரும் கூட்டாகச் சேர்ந்து கதைப் புத்தகங்களைப்  படிப்பார்கள். மேலும், பாடப்புத்தகங்களோடு  தொடர்புடைய புத்தகங்களையும் இரவல் பெற்றுப்  படிப்பார்கள்.

ஒருமுறை நூலகத்தில் புத்தகம் படிப்பது பற்றிய பயிலரங்கு ஒன்று நடைபெற்றது. அந்தப் பயிலரங்கில் முத்துவும் அவனுடைய நண்பன் சலீமும் கலந்துகொண்டார்கள். பயிலங்கில் புத்தகங்கள் படிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். முத்துவும் சலீமும் மிகவும் மகிழ்ச்சி  அடைந்தார்கள். இருவரும் படிப்பதில் மேலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்கள்.  எதிர்காலத்தில் முத்து மருத்துவர் ஆகவேண்டும் என்று முடிவு செய்தான். சலீம் ஆசிரியராக வரவேண்டும் என்று நினைத்தான். அவர்களின் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

சலீமும் முத்துவும் நினைத்தபடியே சிறந்த வேலையில் சேர்ந்தார்கள். அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து உதவினார்கள். இவர்கள் இருவரும் ஏழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். இவர்களின் பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்களில் பலர் சிறந்த  அறிஞர்களாக விளங்கி வருகிறார்கள். 

இக்கதையிலிருந்து விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை அறியலாம். இப்படிப்ப சிறந்த பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி  அடைந்தார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

 

No comments:

Post a Comment