Thursday, May 26, 2022

 

சுருக்கி வரைதல்

சுருக்கி வரையும்போது கவனிக்கவேண்டியவை

1.   கொடுக்கப்பட்ட பகுதியைக் கவனமாகப் படித்துப் பொருளை அறிந்து கொள்ள வேண்டும்.

2.   பகுதியில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்துகளையும் துணைக் கருத்துகளையும் அடையாளம் காண வேண்டும்.

3.   பகுதியில் உள்ள கருத்துகளைச் சொந்த நடைக்கு மாற்ற வேண்டும்.

4.   சொந்தக் கருத்துகளை எழுதிவிடக்கூடாது.

5.   பகுதியில் உள்ள உண்மைக் கருத்துகளை மறுத்து எழுதிவிடக்கூடாது.

6.   இயல்பான நடையில் எழுதவேண்டும்.

7.   முதலில் நகல் ஒன்று தயாரிக்க வேண்டும்.

8.   நகலில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

9.   நகலை அடிப்படையாகக் கொண்டு அசல் தயாரிக்க வேண்டும்.

10.  கேட்கப்பட்ட சொல் அளவு சரியாக இருக்க வேண்டும்.

11.  சிறிய வாக்கியங்களாக எழுத வேண்டும்.ஏனென்றால் சிறுவாக்கியங்களாக எழுதினால் வாக்கியப்பிழை ஏற்படாது.

12.  தொடர்புடைய சொற்களுக்குப் பதில் கூட்டுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

13. வர்ணனை, பழமொழிகள், மேற்கோள்கள், உதாரணங்கள் போன்றவற்றை விட்டுவிட வேண்டும்.

14.  பிழை இல்லாமல் எழுதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

15.  இணைப்புச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் (.டு-ஆனால், எனவே, என்றாலும்)

16.  கொடுக்கப்பட்ட பகுதி பல பத்திகளாக இருந்தாலும் சுருக்கி வரையும்போது ஒரே பத்தியில் எழுத வேண்டும்.

17.  சுருக்கி வரையச் சொல்லும் பகுதியைத் தான் சுருக்கி எழுத வேண்டும்.

18.  சுருக்கி வரைந்த பின்னர் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவேண்டும்.

**************************************************************************************

No comments:

Post a Comment