Saturday, May 28, 2022

 

படக்கதை  எழுதுவதற்குரிய குறிப்புகள்

படத்தை அல்லது படங்களை நன்கு பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.


படக்கதை  ஒரு முன்னுரை, கதை விளக்கம் கதையின்  முடிவு என்ற  அமைப்பில் நான்கு  பத்திகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


படங்களின் தொகுப்பு வெளிப்படுத்த விரும்பும் கருப்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படத்தின் பின்னணியைப் பற்றிய செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படங்களுக்கு இடையே இருக்கக் கூடிய  தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கற்பனைத் திறனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

படங்களில் எண்ணக்கூடிய அளவிற்கு ஆட்கள்  இருந்தால் கற்பனையாகப் பெயர்கள் கொடுத்துக்கொள்ளலாம்.


ஆட்களோ விலங்குகளோ கூட்டமாக  இருந்தால் பெயரிட வேண்டும் என்று அவசியம் இல்லை. 


படங்கள்  சொல்லும் கற்பனைக் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும்.


கருப்பொருள் மாறாமல் கதையைக் கொண்டு செல்ல  வேண்டும்.

படக்கதை  சொல்லவிரும்பும் கருத்தைத் தெளிவாக விளக்க  வேண்டும். 


படக்கதையிலிருந்து  அறிந்துகொண்ட செய்திகளை விளக்க  வேண்டும்.


படக்கதை நமக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் உலகத்திற்கும் கருத்தைத்  தெளிவாக  எழுத வேண்டும்.

No comments:

Post a Comment