Thursday, May 26, 2022

 



             தோசை

தோசை அம்மா தோசை

பாட்டி சுட்ட  தோசை

பளபளக்கும் தோசை

பல்லைப் போல வெள்ளை!


அரிசிமாவும் உழுந்த மாவும்

அளவாய் சேர்த்த தோசை

எலும்பை நிமிர்த்தி வளர்க்கும் 

என்றும் மனத்தில் நிலைக்கும்! 



நெய்யில் சுட்டால் நிறத்தைக் காட்டும்

பொய்யில் சுட்டால் பொலிவை இழக்கும்

மனத்தில் ஆசையாய் மகிழ்ந்து சுட்டால்

மனமணக்கும் எங்க வீட்டுத் தோசை!


-  சி..கு



No comments:

Post a Comment