Saturday, May 28, 2022

 

மாதிரி  மின்னஞ்சல்


சோமு, (ராமு)

வணக்கம்.

 

இங்கு யாவரும் நலம். நீ (நான்) நலமா? (நலம்). (உன் கடிதத்தைப் படித்தேன். விவரம் தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி) அண்மையில் பள்ளி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில்  நீ முதலிடத்தைப் பெற்றதாக நம் நண்பன் என்னிடம் சொன்னான்.

 

உனக்கு என்னுடைய வாழ்த்துகள் (நீ வெற்றி பெறுதற்கு வாழ்த்துகள்).

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. (நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்).

 

எனக்கும் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதற்குப் பிடிக்கும். நானும் உன்னைப் போல் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதற்குரிய பயிற்சியும் செய்து வருகிறேன். இருப்பினும் அதில் என்னால் அதிகமான நேரத்தைச் செலவிடமுடியவில்லை.

பேச்சுப் போட்டியில் பயிற்சி பெறுவதற்கு நீ என்னென்ன செய்தாய்? (1) உன்னுடைய பெற்றோர் உனக்கு எந்தெந்த வழிமுறைகளில் உதவி செய்தனர் (2). எப்படித் திட்டமிட்டாய் (3), நீ எதிர்நோக்கிய பிரச்சினைகள் என்னென்ன? (4) என்பன

 

போன்றவற்றை விளக்கி எழுதி அனுப்பினால் எனக்கு  உதவியாக இருக்கும். நானும் நீ கூறும் வழிமுறைகளைப் பின்பற்றிப் பள்ளி அளவில் நடைபெறவிருக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வேன்.

 

உன் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

நன்றி.

ராமு

 

 


நான் நாள்தோறும் பயிற்சி செய்து வந்தேன். புதிய கதைகளைப் படித்து வந்தேன். கதைகளில் இருந்த புதிய சொற்களின் பொருளைத் தெரிந்துகொண்டேன்.

 

என்னுடைய பெற்றோர் எனக்குக் கதைப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர், எப்படிச் செய்திகளை மற்றவர்கள் முன்னால் நின்று பேசவேண்டும் என்று பயிற்சி கொடுத்தனர். நான் பேசத்தெரியாதபோது ஆறுதல் கூறினர். எனக்கு ஊக்கம் ஊட்டினர்.                                                                                                                 

நாள்தோறும் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்கு ஒதுக்கினேன். பேசும் கருத்துகளை என்னுடைய பெற்றோரிடம் பேசிக்காட்டினேன். அவர்கள் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினேன்.

 

ஆசிரியர் கூறிய செய்திகளையும் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து பயிற்சி செய்தேன். தலைப்புக்கு ஏற்றாற்போல் பேசினேன்.

 

நீயும் இம்முறையைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

 

No comments:

Post a Comment