Monday, July 24, 2023

 


மின்னஞ்சல்

பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

சமீபத்தில் உங்கள் வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக மன்றத்தில் கட்டுரை எழுதும் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போட்டியில் நீ கலந்துகொண்டு முதலிடம் பெற்றாய். அதற்கு எத்தகைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாய் என்பது குறித்து உன்னுடைய நண்பனுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும்.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: somu@kgoomail.com

பெறுநர்: sankar@kgoomail.com


குறிப்புகள்

முதல் பத்தி

நலம் விசாரித்தல்

இரண்டாவது பத்தி – எங்குப் போட்டி நடைபெற்றது, எப்படித் தகவலைத் தெரிந்துகொண்டாய்,

மூன்றாவது பத்தி

என்னென்ன முயற்சிகள் செய்தாய்.

ஆர்வத்துடன் ஈடுபடுதல், போட்டிக்குரிய கட்டுரைகளைப் படித்தல், சில தலைப்புகளில் எழுதிப் பார்த்தல், பிழைநீக்கம் செய்து பார்த்தல், ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டல், பெற்றோரிடம் எழுதும் முறையைப் பற்றி விளக்கிக் கூறுதல்.

நண்பனையும் போட்டியில் கலந்துகொள்ள ஊக்கிவித்தல்

நன்றி

இப்படிக்கு

உன்பெயர்


 

பிழை நீக்கம்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். 

இதன் 1 மூலம் நாம் வால்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. 

இந்த உலகம் மிகவும் பெரியது. என்னற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. 

3

அதனை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள 

4முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதள்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் 

5கட்டாயம் வாசித்துப் பலக வேண்டும். இவற்றின் மூலம் நம்முடைய சிந்தனை மேலோங்கி வளரும்.


 

மின்னஞ்சல்


பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.

உன் நண்பனிடம் அமைந்திருக்கும் உயர்ந்த பண்புகளை விளக்கி வெளிநாட்டில் வசிக்கும் உன்னுடைய மாமாவுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும்.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: prabu@kgoomail.com

பெறுநர்: ragu@kgoomail.com

குறிப்பு

அனுப்புநர் முகவரி

பெறுநர் முகவரி

பொருள்: நண்பனிடம் அமைந்திருக்கும் உயர்ந்த பண்புகள்

முதல் பத்தி

முதலில் நலத்தைப் பற்றிக் கூறுதல்

இரண்டு அல்லது மூன்று பத்திகள் உயர்ந்த பண்புகளைப் பற்றி எழுதுதல்.

அன்பு, அக்கறை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, பொறாமை இல்லாமல் இருத்தல்,

பாடங்களைப் பற்றி விளக்கும் குணம்

பிரச்சினைக் காலங்களில் தீர்வுக்கு ஆலோசனை கூறும் பண்பு

ஒரு பத்தி முடிவுரை

(நல்ல நண்பர்கள் கிடைப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள். எனக்கும் மிகச்சிறந்த நண்பன் கிடைத்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுடைய மின்னஞ்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

எழுதியர் பெயர்


 



வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கி எழுதுக.

முன்னுரை( தொடக்கம்)

பொருள் (உடல், வளர்ச்சி)

முடிவுரை

வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பின் அவசியம் பற்றித் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்தல்

1 நல்லறிவை வளர்த்தல் 

2 பொது அறிவை வளர்த்தல்

3 மொழி வளத்தைப் பெருக்குதல்

4 சரளமாக வாசித்தல்

5 எழுத்துத் திறனை வளர்த்தல்

6 படைப்பாக்கத்திறனை வளர்த்தல்

7 நல்லுறவை வளர்த்தல்

8 தீய சிந்தனையை விலக்குதல்

9 நல்லுறக்கத்தைப் பெறுதல்

10 பொழுது போக்கு

11   முடிவுரை

 

1 பொது அறிவை வளர்த்தல்

பொதுவாக நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் வளர்ச்சியே இருக்கும். இதன் மூலம் நாம் வாழ்க்கையில் நினைப்பதை அடைய முடியாது. இந்த உலகம் மிகவும் பெரியது. எண்ணற்ற விசயங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அவற்றை மற்றவர்கள் சொல்வதன் மூலம் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அதனால், நாளிதழ்களையும், வார இதழ்களையும், மாத இதழ்களையும், கதைப்புத்தகங்களையும், பொது அறிவுப் புத்தகங்களையும் நாம் கட்டாயம் வாசித்துப் பழக வேண்டும் இவற்றின்மூலம் நம்முடைய அறிவுத்திறன் கூர்மை அடையும் 21- ஆம் நூற்றாண்டுத் திறன்களை எளிதில் பெறலாம். நம்முடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும். இச்சமுதாயத்தில் நம்முடைய மரியாதை உயரும்.

 


 


        தேடல்

எதிலும் தேடல் வேண்டும்

எதையும் தேடல் வேண்டும்

தேடலே வாழ்வின் நாதம்

தேடலின்றி வாழ்வேது நிதம்!

 

நல்லன்பைத் தேடி நிற்போம்

நல்லறிவை நாடிச் செல்வோம்

பல்லறிவை நாடிச் சென்றால்

பகுத்தறிவு வளர்ந்து நிற்குமே!

 

சொல்லறிவை நாடிச் சென்றால்

சொர்கத்தை மனத்தில் கொள்ளலாம்

இல்லறிவை நாடிச் சென்றால்

இல்லாமை மறைந்திடு மன்றோ!

 

கல்லறிவு வாழ்ந்திட வழிகாட்டும்

காலமெல்லாம் மகிழ்ந்திட செய்திடும்

பட்டறிவு பெற்று நின்றால்

பகுத்தாயும் மனத்தைப் பெறுவோமே!

                    ---- சிகுரு



 

அன்பே அகிலம்


அன்புடையார் என்றென்றும் வாழ்வர்

அன்பற்றோர் அன்பை அறிவது

அன்போடு வாழ வழிவகுக்குமே

அகிலம் நிலைக்க வழிகோலுமே!

 

அன்பை அறிவோடு இணைத்து

அன்பைப் புரிதல் வேண்டும்

அகத்திலன்பு சிறக்க வேண்டும்

ஆழ்கடல் நீந்த வேண்டுமே!

 

ஆழ்சிந்தனை பெறமுயல வேண்டும்

அகிலம் என்றும் நிலைப்பதற்கே!

அகமகிழ்ந்து அனைவரும் வாழ்வதற்றே

அகன்ற சிந்தையைப்  பெற்றிடுவோமே!

                    _ சி.குரு

 


Friday, January 13, 2023

 

   

                    உழைப்பு


உள்ளம் உருகும் உழைப்பு

உயர்வைத் தரும் உழைப்பு

கள்ளம் இல்லா உழைப்பு 

காற்றுப்    போன்ற உழைப்பு!


உண்மை  நிறைந்த  உழைப்பு 

ஊதியம் பாரா உழைப்பு 

 நன்மை தரும் உழைப்பு

நலமே நாடும்     உழைப்பு!!


அன்பு நிறைந்த    உழைப்பு

அலுப்பு மறந்த உழைப்பு

குடும்பத்திற்கான  பெரும் உழைப்பு

கூடிவாழ உதவிடும் நல்லுழைப்பு!.  


-சி.    குருசாமி